‘ஹலால்‘ என்ற வார்த்தையை நீக்கியது இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சிக்கு வழங்கப்படும் ஹலால் சான்றிதழை எதிர்த்து இந்து வலதுசாரி குழுக்கள் மற்றும் சீக்கிய அமைப்புகள் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இறைச்சி கையேட்டிலிருந்து ‘ஹலால்‘ என்ற வார்த்தையை நீக்கியுள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த ஆலோசனை குழு நியமனம்

நாட்டில் தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டங்கள் திருத்தியமைக்கப்படவுள்ளன. அத்துடன் முஸ்லிம்களின் விவகாரங்கள் சிலவற்றுக்கு புதிதாக தனியான சட்டங்கள் இயற்றப்படவுள்ளன. இதற்கென 10 பேர் கொண்ட ஆலோசனை குழுவொன்றை நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி  அலி சப்ரி  நியமித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் பழுதடைந்த உணவு விநியோகம்

கிழக்கு மாகாணத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பில் தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ‘விடிவெள்ளி‘க்கு தெரிவித்தார்.

ஹாரூன் யஹ்யாவுக்கு துருக்கியில் 1075 வருட சிறைத்தண்டனை விதிப்பு

இவர் சர்ச்சைக்குரிய சமய வழிபாட்டுக் குழுவொன்றை தலைமைதாங்கி நடாத்தி வந்ததுடன் தன்னைச் சூழ கவர்ச்சிகரமான ஆடை அணிந்த அழகிய பெண்களை வைத்துக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடாத்தி வந்தார். ஏ9 எனும் பெயரிலான தனியான தொலைக்காட்சி சேவையையும் இவர் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது