அடிப்படை உரிமையை தக்க வைப்பதே முக்கியம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நிகழ்ந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் செய்ய அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­விட்­டது. இதற்­கான பத்­தி­ரத்தை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமும் நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவும் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். அப்­போது அமைச்சர் ஹலீம், இது முன்னாள் நீதி அமைச்­ச­ரான மிலிந்த மொர­கொட 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் நிய­மித்த…

ஐயங்களும் தெளிவுகளும்

குழப்பம் செய்­வது கொலையை விடவும் மிகப் பெரி­ய­தாகும். அவர்கள் சக்தி பெற்றால் உங்­களை உங்கள் மார்க்­கத்­தி­லி­ருந்து திருப்பும் வரை உங்­க­ளோடு ஓயாமல் போரி­டு­வார்கள். எனவே உங்­களில் எவரும் மார்க்­கத்­தி­லி­ருந்து மாறி நிரா­க­ரித்­த­வ­ரா­கவே இறந்து விட்டால் அத்­த­கை­யோரின் செயல்கள் இம்­மை­யிலும் மறு­மை­யிலும் அழிந்­து­விடும். அவர்கள் நர­க­வா­சிகள், அதில் நிரந்­த­ர­மாக இருப்­ப­வர்கள். (2:217) என அல்­குர்ஆன் குறிப்­பி­டு­கி­றது. இங்கு குழப்பம் பெரிய குற்றம் என்றால் கொலை அதை­விட சிறிய குற்றம் என்றால் என்ன அர்த்தம்-?…

அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகள்

வெள்­ளிக்­கி­ழ­மை­களில் பள்­ளி­வா­சல்­களில் நிகழும் குத்­பாக்கள் சிங்­கள மொழி­யி­லும் அமைய ஏற்­பாடு செய்­யப்­போ­வ­தாக தபால் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கூறி­யுள்ளார். நாம் நீண்ட கால­மாகப் பெரும்­பான்மை இனத்­தோடு நெருக்­க­மாக வாழ்ந்­து­வரும் சமூ­க­மாவோம். அது மென்­மேலும் நீடிக்க வேண்டும். அதற்­காக வெள்­ளிக்­கி­ழமை குத்­பாக்­களை சிங்­கள மொழியில் நிகழ்த்­துங்கள். இச்­ச­ம­யங்­களில் ஏனைய மதங்­களின் குரு­மார்­க­ளையும் அங்கு அழை­யுங்கள். அதுபோல் 317 அரபு மத்­ர­ஸாக்­க­ளையும் முறை­யாக நிர்­வ­கிக்கப் புதிய…

முஸ்­லிம்­க­ளு­ட­னான சிங்­க­ள­வரின் பாரம்­ப­ரிய நல்­லு­றவு அன்றும் இன்றும்

இலங்­கையின் வர­லாற்றுப் புரா­தனச் சின்­னங்­களை வெளி­நாட்­டி­னரும் புகைப்­படம் எடுக்­கவே செய்­கி­றார்கள். உள்­நாட்டு உயர்­கல்வி மாண­வர்­களும் தமது அறி­வியல் தேடலின் பொருட்டு இதைச் செய்­கி­றார்கள். எனினும் அண்­மையில் இரு­முறை சில முஸ்லிம் மாண­வர்கள் தூபி­யில் ஏறிப் புகைப்­படம் எடுத்­த­தற்­காகக் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார்கள். தற்­போது விடு­தலை கிடைத்­தி­ருக்­கி­றது. எனினும் கூட இதில் பின்­வரும் அணு­கு­முறை வேண்டும். 1) இலங்­கையில் எங்­கெல்லாம் வர­லாற்­றுப்­பு­ரா­தன சின்­னங்கள் இருக்­கின்­றன என்­பது…