புதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால போலிச் செய்திகள்

0 488

எம்.பி.எம்.பைறூஸ்

2020 செப்­டம்­பரில் அமெ­ரிக்­காவில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான இடம்­வ­கிக்கப் போவது “போலிச் செய்­தி­க­ளுக்­கி­டை­யி­லான போர்தான்” என பிர­பல எழுத்­தாளர் மெக்கே கொப்பின்ஸ் ‘த அட்­லாண்டிக்’ சஞ்­சி­கையில் கடந்த பெப்­ர­வரி மாதம் எழு­திய கட்­டுரை ஒன்றில் குறிப்­பிட்­டி­ருந்தார். இக் கூற்று இலங்­கைக்கும் நிச்­சயம் பொருந்தக் கூடி­ய­தாகும்.

இலங்­கையில் கடந்த 2019 இல் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் போலிச் செய்­திகள் பெரும் தாக்கம் விளை­வித்­த­தாக “ஹாஷ்டெக் ஜென­ரேஷன் “ நிறு­வனம் சமூக வலைத்­த­ளங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு மேற்­கொண்ட கண்­கா­ணிப்பு ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது பகி­ரப்­பட்ட சுமார் 169 போலிச் செய்­தி­களை தமது நிறு­வனம் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதே­போன்­றுதான் எதிர்­வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடை­பெறப் போகின்ற பொதுத் தேர்­த­லிலும் போலிச் செய்­திகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்­கி­யுள்­ளதை எம்மால் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

போலிச் செய்­திகள் பல்­வேறு நோக்­கங்­களில் அடிப்­ப­டையில் பரப்­பப்­ப­டு­கின்ற போதிலும், தேர்தல் காலங்­களில் அர­சியல் தரப்­பு­க­ளுக்­கி­டை­யி­லான போட்டி கார­ண­மாக அவை மிக வேக­மா­கவும் மக்கள் இல­கு­வாக நம்பக் கூடிய வகை­யிலும் நுணுக்­க­மாக திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யிலும் பரப்­பப்­ப­டு­கின்­றன.

போலிச் செய்­திகள்

போலிச் செய்­தி­களை இரண்டு வகை­க­ளாகப் பிரிக்க முடியும். முத­லா­வது, Mis Information எனப்­படும் தவ­றான செய்­திகள். அடுத்­தவை Dis Information எனப்­படும் பிழை­யான செய்­திகள். தவ­றான செய்­திகள் என்­பது, தனக்குக் கிடைக்கப் பெறும் செய்தி, போலி­யா­னது எனத் தெரி­யாது பரப்­பு­வ­தாகும். பிழை­யான செய்­திகள் என்­பது தனக்கு கிடைக்கப் பெறும் செய்தி போலி­யா­னது எனத் தெரிந்து கொண்டே பரப்­பு­வ­தாகும்.
அந்த வகையில் தேர்தல் காலங்­களில் பெரும்­பாலும் பிழை­யான செய்­தி­களே (Dis Information) அதிகம் பகி­ரப்­ப­டு­கின்­றன. அர­சியல் கட்­சி­களின் செயற்­பாட்­டா­ளர்­களும் அவற்றின் ஆத­ர­வா­ளர்­களும், தமது எதிர்த்­த­ரப்பு பற்­றிய போலிச் செய்­தி­களை வேண்­டு­மென்றே பரப்­பு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

பத்­தி­ரி­கை­களின் பெயரில்  போலிச் செய்­திகள்

போலிச் செய்­தி­களைப் பரப்­புவோர் கையாளும் புதிய வழி­களில் ஒன்­றுதான் பத்­தி­ரி­கை­களின் இலச்­சி­னையைப் பயன்­ப­டுத்தி முகப்புப் பக்கம் ஒன்றை வடி­வ­மைத்து அதில் போலிச் செய்­தி­க­ளை­யிட்டுப் பரப்­பு­வ­தாகும். கடந்த மே மாத நடுப்­ப­கு­தி­யிலும் தேர்தல் அண்­மித்­துள்ள இந்­நாட்­க­ளிலும் இவ்­வா­றான செய்­திகள் அதிகம் பரப்­பப்­ப­டு­கின்­றன.
இதற்­க­மைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச மற்றும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலைவர் சஜித் பிரே­ம­தாச ஆகியோர் கூறி­ய­தாக போலி­யான செய்­தி­களை, பல்­வேறு தமிழ் மொழி பத்­தி­ரி­கை­களின் இலச்­சி­னை­களைப் பயன்­ப­டுத்தி வடி­வ­மைத்து பகி­ரப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அதே­போன்­றுதான் கொழும்பு மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க, மனோ கணேசன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோரின் பெயர்கள் மற்றும் புகைப்­ப­டங்­களைப் பயன்­ப­டுத்­தியும் இவ்­வா­றான போலிச் செய்­திகள் பகி­ரப்­பட்­டன. மேலும் பிர­பல சிங்­கள பத்­தி­ரிகை ஒன்றின் முகப்புப் பக்­கத்தை பயன்­ப­டுத்தி வடி­வ­மைக்­கப்­பட்ட பல போலிச் செய்­திகள் கடந்த சில வாரங்­க­ளாக பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு சவால்

இவை மேற்­படி அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி பத்­தி­ரி­கை­க­ளுக்கும் சவா­லாக அமைந்­துள்­ள­துடன் வாச­கர்­க­ளையும் குழப்­பத்தில் ஆழ்த்­து­வ­தாக அமைந்­துள்­ளன. இதன் மூலம் பத்­தி­ரி­கை­களின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அப் பத்­தி­ரி­கைகள் வெளி­யிட்­டுள்ள விளக்கக் குறிப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் இவ்­வாறு பத்­தி­ரி­கை­களின் பெயரைப் பயன்­ப­டுத்தி போலிச் செய்­தி­களை பரப்­புவோர் தொடர்பில் பொலிஸ் திணைக்­க­ளத்தின் கீழ் வரும் கணினி குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் பிரி­வுக்கு முறைப்­பா­ட­ளித்­துள்ள மேற்­படி பத்­தி­ரி­கை­களுள் ஒன்றின் டிஜிட்டல் பிரிவு முகா­மை­யாளர் தெரி­வித்தார்.

“இலங்­கையைப் பொறுத்­த­வரை பத்­தி­ரி­கைகள் மின்­னி­த­ழாக வெளி­யி­டப்­ப­டு­வ­தில்லை. எனினும் கொவிட் 19 ஊர­டங்கு காலத்தில் பத்­தி­ரி­கை­களை அச்­சிட்டு விநி­யோ­கிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டதால் நாட்­டி­லுள்ள எல்லா பத்­தி­ரி­கை­களும் மின்­னிதழ் வடிவில் இல­வ­ச­மா­கவே சமூக வலைத்­த­ளங்கள் வழி­யாக பகி­ரப்­பட்­டன. இது இவ்­வா­றான போலிச் செய்­தி­களை வடி­வ­மைப்­ப­வர்­க­ளுக்கு சாத­மாக அமைந்­து­விட்­டது. அவர்கள் பத்­தி­ரி­கை­களின் மின்­னி­தழை பிர­தி­பண்ணி அதில் மாற்­றங்­களைச் செய்து, பத்­தி­ரி­கை­களில் வெளி­வந்­த­து­போன்றே செய்­தி­களைப் பரப்­பு­கி­றார்கள். இது நாம் எதிர்­நோக்கும் புதிய சவா­லாகும். இது பற்றி எமது வாச­கர்­களை தொடர்ந்து அறி­வூட்ட வேண்­டி­யுள்­ளது. இதனை எல்லா ஊடக நிறு­வ­னங்­களும் ஒன்­று­பட்டே முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது” என்றும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

இதே­வேளை போலிச் செய்­திகள் இன்று சமூக வலைத்­த­ளங்­க­ளி­லேயே அதிகம் பகி­ரப்­ப­டு­கின்­றன. எனினும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஊடக நிறு­வ­னங்­க­ளினால் வெளி­யி­டப்­படும் பத்­தி­ரி­கை­களின் பெயரில் போலிச் செய்­தி­களை பரப்­பு­வ­தா­னது அப் பத்­தி­ரி­கை­களின் வாச­கர்­களை குழப்­பத்தில் ஆழ்த்­து­வ­தாக அமைந்­துள்­ள­தா­கவும் தமது பத்­தி­ரி­கையின் நம்­ப­கத்­தன்­மையை கேள்­விக்­கு­றி­யாக்­கு­வ­தா­கவும் பத்­தி­ரிகை ஆசி­ரியர் ஒருவர் தெரி­வித்தார். குறித்த ஒரு செய்தி போலி­யா­னது என தாம் மறுப்­ப­றிக்கை வெளி­யிட்டு வாச­கர்­களைத் தெளி­வு­ப­டுத்­து­கின்ற போதிலும் அந்த விளக்கம், போலிச் செய்தி மக்­களைச் சென்­ற­டைந்த வேகத்­திலோ வீச்­சிலோ வாச­கர்­களைச் சென்­ற­டை­வ­தில்லை என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இவ்­வா­றான போலிச் செய்­திகள் பகி­ரப்­ப­டும்­போது அவற்றை எதிர்­கொள்ள நீங்கள் முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கைகள் என்ன என மற்­றொரு பத்­தி­ரிகை ஆசி­ரி­ய­ரிடம் வின­வி­ய­தற்கு “ எமது பத்­தி­ரிகை முகப்பை பயன்­ப­டுத்தி போலிச் செய்தி ஒன்று பகிர்­வ­தாக எமக்கு தகவல் கிடைத்­ததும் உட­ன­டி­யாக அது போலி­யா­னது என உறு­திப்­ப­டுத்தும் அறி­வித்­தல்­களை தயா­ரித்து எமது பத்­தி­ரி­கையின் சமூக வலைத்­தள கணக்­குகள் ஊடாக வாச­கர்­களைத் தெளி­வூட்­டினோம். இது அப் போலிச் செய்தி குறித்த விளக்­கத்தை எதிர்­பார்த்து எமது சமூக வலைத்­தள கணக்­கு­களை அணு­கிய வாச­கர்­க­ளுக்கு ஆறு­தலைக் கொடுப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது. மேற்­படி போலிச் செய்­தியில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அர­சி­யல்­வாதி ஒரு­வரும் எம்மைத் தொடர்பு கொண்டு, இது­வொரு போலிச் செய்­திதான் என வாச­கர்­க­ளுக்கு அறி­விக்க நீங்கள் எடுத்த நட­வ­டிக்கை என்ன என்று எம்­மிடம் வின­வினார். அவ­ருக்கும் நாம் எமது சமூக வலைத்­தள அறி­வித்­தல்­களை காண்­பித்தோம். அது அவ­ருக்கு திருப்­தி­ய­ளிப்­ப­தாக அமைந்­தது “ அவர் குறிப்­பிட்டார்.

குழப்­பத்தில் வாச­கர்கள்

இவ்­வா­றான போலிச் செய்­திகள் மக்­களை தவ­றாக வழி­ந­டாத்­து­கின்ற அதே­நேரம் பத்­தி­ரி­கை­களின் நீண்ட கால வாச­கர்­க­ளையும் குழப்­பத்தில் ஆழ்த்­து­வ­தாக அமைந்­து­வி­டு­கின்­றன.

பத்­தி­ரி­கை­களின் முகப்புப் பக்கம் போன்று வடி­வ­மைக்­கப்­பட்டு பகி­ரப்­படும் போலி­யான செய்­தி­களால் தாம் அதிகம் குழப்­ப­டைந்­துள்­ள­தாக தின­சரிப் பத்­தி­ரி­கை­களின் வாச­க­ரான பாரா தாஹிர் குறிப்­பி­டு­கிறார். “ நான் தின­சரி பத்­தி­ரி­கைளை வாசிப்­பவர் என்ற வகையில் தேசிய பத்­தி­ரி­கைகள் மீது மிகுந்த நம்­பிக்கை வைத்­துள்ளேன். அவற்றில் பொது­வாக போலிச் செய்­திகள் வெளி­யி­டப்­ப­டு­வ­தில்லை. எனினும் நான் அங்கம் வகிக்கும் பல வட்ஸ் அப் குழு­மங்­களில் இவ்­வா­றான போலிச் செய்­திகள் எனக்கு நன்கு அறி­மு­க­மான பத்­தி­ரி­கை­களின் முகப்பைப் பயன்­ப­டுத்தி வரு­கின்ற போது நான் கூட ஒரு கணம் தடு­மா­றி­வி­டு­கிறேன். எனினும் அது தொடர்பில் பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரிய பீடத்தை தொடர்பு கொண்டு வின­வும்­போது அவர்கள் இது போலி­யா­னது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கின்­றனர். இதன் பிற்­பாடு குறித்த வட்ஸ் அப் குழு­மத்தில் இச் செய்தி போலி­யா­னது என நான் தெளி­வு­ப­டுத்­துவேன். சில சம­யங்­களில் தெளிவு வழங்­கிய பின்­னரும் பலரும் அதனைப் பகிர்­வார்கள். இதற்கு எவ்­வாறு முற்­றுப்­புள்ளி வைப்­பது எனத் தெரி­ய­வில்லை” என்றார்.

அதே­போன்று மற்­றொரு பத்­தி­ரிகை வாச­கரும் பாட­சாலை அதி­ப­ரு­மான எம்.ஏ.சி.எம். முனவ்வர் குறிப்­பி­டு­கையில், பத்­தி­ரி­கை­களின் முகப்பைப் பயன்­ப­டுத்தி ஏட்­டிக்குப் போட்­டி­யான வகையில் அர­சியல் கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்கள் திட்­ட­மிட்டு பரப்பும் போலிச் செய்­திகள் அப் பத்­தி­ரி­கைகள் மீதான மக்­களின் நம்­பிக்­கையை வெகு­வாகப் பாதிக்­கின்­றன என்­பதை நான் சமீ­பத்தில் உணர்ந்து கொண்டேன். அண்­மையில் தமிழ் பத்­தி­ரி­கைகள் சில­வற்றின் நாமங்­களைப் பயன்­ப­டுத்தி இவ்­வா­றான போலிச் செய்­திகள் பகி­ரப்­பட்ட போது ஓரி­டத்தில் அவற்றை நம்­பி­விட்டேன். எனினும் ஒரு பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் எனக்கு நெருக்­க­மா­னவர் என்­பதால் அவரை நேர­டி­யாகத் தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது அச் செய்தி போலி­யா­னது என என்னைத் தெளி­வு­ப­டுத்­தினார். எனினும் இவ்­வாறு எல்லா வாச­கர்­களும் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறு­வார்­களா என்­பது சந்­தே­கமே. மேலும் இவ்வாறான செய்திகள் போலியானது என்பதை வாசகர்கள் அறிகின்ற பொழுது அவ்வாறான போலிச் செய்திகளை வெளியிடுபவர்களின் எண்ணங்களுக்கு மாற்றமான எதிர் விளைவுகள்தான் இறுதியில் ஏற்படும்” என்றார்.

வன்­மு­றை­க­ளுக்கு வித்­திடும் போலிச் செய்­திகள்

இதற்­கி­டையில் எதிர்­வரும் பொதுத் தேர்­தலை மையப்­ப­டுத்தி போலிச் செய்­திகள் பகி­ரப்­படும் வேகம் அதி­க­ரித்­துள்­ள­தாக குறிப்­பிடும் ‘கபே’ எனும் தேர்தல் கண்­கா­ணிப்பு அமைப்பின் தேசிய இணைப்­பாளர் மனாஸ் மக்கீன், மேற்­படி போலிச் செய்­திகள் குறித்து தாம் கண்­கா­ணித்து அறிக்­கை­யிட்டு பொலி­சா­ருக்கும் தேர்­தல்கள் திணைக்­க­ளத்­திற்கும் வழங்கி வரு­வ­தாக சுட்­டிக்­காட்­டினார்.

“ தேர்தல் காலத்தில் சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக பரப்­பப்­படும் போலிச் செய்­தி­க­ளையும் வெறுப்­பூட்டும் பேச்­சுக்­க­ளையும் நாம் கண்­கா­ணித்து அறிக்­கை­யிட்டு வரு­கிறோம். இவ்­வா­றான போலிச் செய்­திகள் ஏற்­ப­டுத்தக் கூடிய தாக்­கங்கள் குறித்து நாம் உட­ன­டி­யாக பொலிஸ் திணைக்­க­ளத்­துக்கும் தேர்­தல்கள் திணைக்­க­ளத்­துக்கும் தொடர்­பு­டைய ஏனைய அதி­கா­ரி­க­ளுக்கும் நாம் அறி­விக்­கிறோம். இம்­முறை பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போலிச் செய்­திகள் ஒப்­பீட்­ட­ளவில் அதி­க­ரித்­துள்­ளதால் இதன் மூலம் வன்­மு­றை­களும் அதி­க­ரிக்­கலாம் என நாம் அஞ்­சு­கிறோம். இதன் கார­ண­மாக இதன் பார­தூ­ரத்தை மக்கள் மத்­தி­யிலும் அர­சி­யல்­வா­திகள் மற்றும் அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் மத்­தி­யிலும் எடுத்துச் சொல்­வ­தற்­கான வேலைத்­திட்டம் ஒன்றை 25 மாவட்­டங்­க­ளிலும் நாம் ஆரம்­பித்­துள்ளோம்” என அவர் மேலும் குறிப்­பிட்டார்.

உண்மைச் சதுக்கம்

இதே­வேளை இம்­முறை தேர்­தலில் அர­சியல் கட்­சிகள் மூல­மாக போலிச் செய்­திகள் பரப்­பப்­ப­டு­வதை தடுக்கும் வகை­யிலும் போலிச் செய்­திகள் மூல­மாக வாக்­கா­ளர்கள் தவ­றாக வழி­ந­டாத்­தப்­ப­டு­வதை தவிர்க்கும் நோக்­கிலும் “உண்மைச் சதுக்கம் – பொய் செய்­தி­களை முடக்­குவோம் “ எனும் தலைப்­பி­லான வேலைத்­திட்டம் ஒன்றை நாட்­டி­லுள்ள பிர­தான அர­சியல் கட்­சி­களின் இளைஞர் பிர­தி­நி­திகள் ஒன்­றி­ணைந்து ஆரம்­பித்­துள்­ளனர். இதில் சிவில் செயற்­பாட்­டா­ளர்கள், சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள், கல்­வி­மான்கள் என பலரும் அங்கம் வகிக்­கின்­றனர்.

‘இலங்­கையின் அடுத்த தலை­முறை’ எனும் அமைப்பின் நெறிப்­ப­டுத்­தலில் முன்­னெ­டுக்­கப்­படும் இந்த வேலைத்­திட்­டத்தின் நோக்கம் தேர்­தலை மையப்­ப­டுத்தி பகி­ரப்­படும் போலிச் செய்­தி­க­ளுக்கு எதி­ராக சகல கட்­சி­க­ளையும் சிவில் சமூ­கத்­தையும் இணைத்துக் கொண்டு போரா­டு­வ­தே­யாகும் என இவ் வேலைத்­திட்­டத்தில் பங்­கெ­டுத்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் இளைஞர் பிர­தி­நிதி ரசிக ஜயக்­கொடி தெரி­வித்தார்.

தேர்தல் காலத்தில் போலிச் செய்­திகள் ஏற்­ப­டுத்தும் தாக்கம் உட­லியல் தாக்­கு­தல்கள், வன்­மு­றைகள், சொத்­துக்­களை சேத­மாக்­குதல் என்­ப­வற்றை விடவும் வீரி­ய­மா­னது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். வாக்­கா­ளர்கள் உண்­மை­யா­னதும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­து­மான தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே யாருக்கு வாக்­க­ளிப்­ப­தென தீர்­மா­னிக்க வேண்டும். மாறாக போலி­யான செய்­தி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அல்ல என்றும் அவர் குறிப்­பிட்டார். இந்தப் போலிச் செய்­திகள் சில அர­சி­யல்­வா­தி­களின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் விளை­விப்­ப­தாக அமை­கின்­றன. இதனால் அவர்­களால் சமூ­கத்தில் தலை­நி­மிர்ந்து நிற்க முடி­யாத நிலை ஏற்­ப­டு­கி­றது என்றும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

அதே­போன்று இவ் வேலைத்­திட்­டத்தில் பங்­கெ­டுத்­துள்ள ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர் மிலிந்த ராஜ­பக்ஷ கூறு­கையில், மக்­களும் குறிப்­பாக இளம் தலை­மு­றை­யி­னரும் அர­சி­யலை வெறுப்­ப­தற்கு போலிச் செய்­தி­களும் ஒரு கார­ண­மாக அமைந்­துள்­ளன என்றார். குறிப்­பாக போலிச் செய்­திகள் மூல­மாக பெண்கள் மீது சேறு பூசும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதால் பெண்கள் அர­சி­யலில் பங்­கேற்க தயக்கம் காட்­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

மேற்­படி ‘இளம் தலை­மு­றைகள்’ அமைப்­பி­னரால் முன்­னெ­டுக்­கப்­படும் இவ் வேலைத்­திட்­டத்தின் மூலம் தினமும் 24 மணி நேரமும் சமூக வலைத்­த­ளங்கள் கண்­கா­ணிக்­கப்­பட்டு அதன் வாராந்த அறிக்­கைகள் தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு அனுப்பி வைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தேர்­தல்கள் ஆணைக்­குழு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என இவ்­வ­மைப்பு தெரி­விக்­கி­றது.

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு சவா­லாகும் போலிச் செய்­திகள்

இதே­வேளை தேர்தல் காலங்­களில் இவ்­வா­றான போலிச் செய்­திகள் பகி­ரப்­ப­டு­வ­தா­னது தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் பணி­க­ளுக்கு பலத்த சவா­லாக அமைந்­துள்­ள­தாக முன்னாள் தேர்தல் ஆணை­யா­ளரும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தற்­போ­தைய ஆலோ­ச­க­ரு­மான எம்.எம். முஹம்மட் குறிப்­பிட்டார். “ சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­படும் இவ்­வா­றான போலிச் செய்­திகள் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு முறைப்­பா­டு­களை முன்­வைக்கும் பட்­சத்தில் நாம் அது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுப்போம். இது பற்றி மாவட்ட ரீதி­யாக அமைக்­கப்­பட்­டுள்ள தேர்தல் முறைப்­பாட்டு முகா­மைத்­துவ நிலை­யங்­க­ளிலோ அல்­லது தலை­மை­ய­கத்தில் உள்ள தேர்தல் முறைப்­பாட்டு மத்­திய நிலை­யத்­திலோ முறை­யிட்டால் நட­வ­டிக்கை எடுக்க முடியும். போலிச் செய்­தி­களை அகற்­று­வது தொடர்பில் பேஸ் புக் நிறு­வ­னத்­து­டனும் நாம் பேச்­சுக்­களை நடாத்­தி­யுள்ளோம். நாம் விசா­ரணை நடாத்தி, சிபா­ரி­சு­களை முன்­வைக்­கும்­பட்­சத்தில் பேஸ் புக் நிறு­வனம் அவற்றை நீக்க நட­வ­டிக்கை எடுக்கும். எனினும் இவற்றைக் கண்­கா­ணித்து கையாள்­வது பெரும் சவா­லான விட­ய­மாகும்” என்றார்.

போலிச் செய்­தி­களை சரி­பார்க்கும் நிறு­வ­னங்கள்

இவ்­வா­றான போலிச் செய்­திகள் பரவும் போது அவற்றை சரி­பார்த்து உறு­திப்­ப­டுத்தி மக்­களை அறி­வூட்டும் பல நிறு­வ­னங்கள் இலங்­கையில் தற்­போது செயற்­ப­டு­கின்­றன. AFP Factcheck, Factcrescendo Sri lanka மற்றும் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம் ஆகி­யன இவற்றுள் முக்­கி­ய­மா­னவை. இவற்றின் இணை­ய­த­ளங்கள் மற்றும் சமூக வலைத்­தள கணக்­கு­களை பின்­தொ­டர்­வதன் மூலமும் இவ்­வா­றான போலிச் செய்­திகள் தொடர்பில் பொது மக்கள் தெளி­வு­களைப் பெற்றுக் கொள்ள முடி­யு­மா­க­வி­ருக்கும்.

போலிச் செய்­திகள் கிடைக்கப் பெற்றால்….

இவ்வாறான போலிச் செய்திகள் பகிரப்படும்போது அவை தொடர்பில் மக்கள் அவதானமாகவிருப்பதுடன் அவற்றின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில் ஒரு செய்­தியை சரி­பார்க்­கும்­போது பின்­வரும் விட­யங்­களை கருத்திற் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

1. உங்­க­ளுக்கு கிடைக்கப் பெறும் எல்லா தக­வல்­க­ளையும் பகி­ரா­தீர்கள். பிற­ருக்கு அவ­சி­ய­மான தக­வல்­களை மாத்­திரம் தெரிவு செய்து பகி­ருங்கள். பகிர முன்னர் சிந்­தி­யுங்கள்.

2. கிடைக்கப் பெறும் தகவல் உத்­தி­யோ­க­பூர்வ தரப்­பு­களால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளதா என்­பதை அவ­தா­னி­யுங்கள்.

3. பத்­தி­ரி­கை­களின் பெயரில் செய்­திகள் பகி­ரப்­ப­டும்­போது பத்­தி­ரி­கை­களின் இலச்­சினை, பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்ள திகதி, பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள எழுத்­து­ருக்கள் பற்றி கூர்ந்து அவ­தா­னி­யுங்கள். சந்­தே­கங்­க­ளி­ருப்பின் பத்­தி­ரிகை அலு­வ­ல­கத்தை தொடர்பு கொண்டு வின­வுங்கள்.

4. தேர்தல் தீர்­மா­னங்கள் தொடர்பில் தேர்­தல்கள் ஆணைக்­குழு, அர­சாங்க தகவல் திணைக்­களம், தேர்தல் கண்­கா­ணிப்புக் குழுக்­களின் உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்­களை மாத்­திரம் பின்­பற்­றுங்கள்

5. நாட்­டி­லுள்ள அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பத்­தி­ரிகை, வானொலி, தொலைக்­காட்சி மற்றும் இணை­ய­தள நிறு­வ­னங்­களின் செய்­தி­களை பின்­தொ­ட­ருங்கள்.

6. உங்­களால் தக­வல்­களை உறு­திப்­ப­டுத்த முடி­யா­விடின் அத் தகவல் பிர­தான ஊட­கங்­களில் பிர­சு­ர­மா­கி­யுள்­ளதா என தேடுங்கள். இன்றேல் உங்­க­ளுக்குப் பரிச்­ச­ய­மான அதி­கா­ரிகள், ஊட­க­வி­ய­லா­ளர்­களின் உத­வியை நாடுங்கள்.

7. போலிச் செய்­தி­களை உரு­வாக்­குதல், பகிர்தல் என்­பன தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். உங்கள் சமூக ஊடக பதிவுகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

8. தயவு செய்து நீங்களும் போலிச் செய்திகளை பரப்புவோரில் ஒருவராக இருக்காதீர்கள். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.