கண்டி- திகன சம்பவங்கள்: 210 மில்லியன் ரூபா நஷ்டஈடு சொத்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

இழப்பீடு பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர்

0 314

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கண்டி– திகன பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­செ­யல்­க­ளினால் சேத­ம­டைந்த சொத்­து­க­ளுக்கும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் இது­வரை 210 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட்­டுள்ளதாக இழப்­பீட்டுப் பணி­ய­கத்தின் பிரதிப் பணிப்­பாளர் எஸ்.எம். பதூர்தீன் தெரி­வித்தார்.

கண்டி –திகன வன்­மு­றை­க­ளுக்கு நேற்­றுடன் இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் அவ்­வன்­மு­றை­களால் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் ‘விடி­வெள்­ளி’க்கு தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; 2018 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் கண்டி –திகன பகு­தி­களில் பாதிக்­கப்­பட்ட 546 சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­கோரி இழப்­பீட்டு பணி­ய­கத்­துக்கு விண்­ணப்­பங்கள் அனுப்­பப்­பட்­டி­ருந்­தன.

இவற்றில் 90 வீத­மான நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­பட்டு விட்­டன. எஞ்­சிய நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

திறைசே­ரி­யி­லி­ருந்து தேவை­யான நிதியும் கோரப்­பட்­டுள்­ளது. 16 விண்­ணப்­பங்­க­ளுக்கே நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. இந்த விண்­ணப்­பங்­களில் சில குறை­பா­டுகள் காணப்­ப­டு­வ­தாலும் உரிய ஆவ­ணங்கள் இன்­மை­யா­லுமே நஷ்­ட­ஈடு இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து நஷ்­ட­ஈ­டு­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு அமைச்­ச­ர­வையின் ஆலோ­ச­னையின் பேரில் கமிட்­டி­யொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. கமிட்­டியின் சிபா­ரி­சுகள் கிடைக்கப் பெற்­றதும் எஞ்­சி­யுள்ள நஷ்­ட­ஈ­டு­களும் வழங்­கப்­படும்.

நஷ்­ட­ஈடு கோரிய விண்­ணப்­பங்கள் அக்­கு­றணை 35, பூஜா­பிட்­டிய 41, குண்­ட­சாலை 243, ஹேவா­ஹட்டை 1, பாத்­த­தும்­பற 48, ஹாரிஸ்­பத்­துவ 134, யட்­டி­நு­வர 7, கண்டி நகரம் கங்­க­வட்ட கோறளை 27, மினிப்பே 1, உடு­நு­வர 3, மெத­தும்­பர 5, உட­தும்­பற 1 என்ற அடிப்­ப­டையில் 546 விண்­ணப்­பங்கள் கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தன. அமைச்­சரின் ஆலோ­ச­னைக்­க­மைய எஞ்சியுள்ள 16 சொத்துகளுக்கான நஷ்டஈடுகள் துரிதப்படுத்தப் படவுள்ளன. இந்த 16 நஷ்டஈடுகளுக்கான விண்ணப்பங்களில் காணப்படும் குறைகளும் உரிய ஆவணங்கள் இன்மை யுமே தாமதத்திற்குக் காரணமேயன்றி இதற்கு இழப்பீட்டுப் பணியகம் பொறுப்பல்ல என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.