தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் திடீர் அறிக்கையின் நோக்கம் என்ன?

0 577

அடிப்­ப­டை­வா­தத்­தினால் கவ­ரப்­பட்ட முஸ்லிம் பெயர் தாங்­கிகள் சில­ரினால் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை தாக்­கு­த­லை­ய­டுத்து நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

பல நூற்­றாண்டு வர­லாற்றைக் கொண்ட இலங்­கைவாழ் முஸ்­லிம்­க­ளுக்குப் பல்­வேறு வகை­யான உரி­மைகள் மற்றும் சலு­கைகள் மன்னர் ஆட்­சிக்­காலம் தொட்டு இன்றும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்கள் அனு­ப­வித்து வரு­கின்ற உரி­மை­க­ளையும், சலு­கை­க­ளையும் இல்­லா­ம­லாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை சில கடும்­போக்குக் குழுக்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தன.

மிகத் திட்­ட­மிட்ட வகை­யி­லான இந்த முன்­னெ­டுப்பு யுத்­தத்­திற்குப் பின்னர் கடந்த 2010ஆம் ஆண்­டி­லி­ருந்து மிகத் தீவி­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. இந்­நி­லை­யி­லேயே கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முஸ்லிம் பெயர் தாங்­கிகள் சில­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை தாக்­குதல், குறித்த குழுக்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு மேலும் பலம் சேர்த்­துள்­ளது.

இதன் ஓர் அங்­க­மாக, கடந்த 2019 ஏப்ரல் 30 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் அவ­சர சட்ட ஏற்­பா­டு­களின் கீழ் வெளி­யி­டப்­பட்ட 2121/1ஆம் இலக்க அதி விசேட வர்த்­த­மானி பத்­தி­ரிகை மூலம் புர்கா, நிகாப் தடை செய்­யப்­பட்­டது. எனினும்,

நாட்டில் ஜனா­தி­ப­தி­யினால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்னர் இந்த புர்கா, நிகா­பிற்­கான தடையும் இல்­லா­ம­லாக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் நீதி மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு அமைச்­ச­ரினால் இவ்­வி­டயம் தொடர்பில் பொது இடங்­களில் முகத்தை மறைத்­தலை தடை செய்தல் என்ற தலைப்பில் 2019.07.17 அன்று அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்று சமர்ப்­பிக்­கப்­பட்ட போதும் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் அமைச்­சர்­க­ளி­ட­மி­ருந்து எழுந்த எதிர்ப்­பினால் அதற்கு அங்­கீ­காரம் கிடைக்­கா­மையால் அது கைவி­டப்­பட்­டது.

அது மாத்­தி­ர­மல்­லாமல், நாட்­டி­லுள்ள அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் மத்­ர­ஸாக்­களை தடை­செய்ய வேண்டும், ஹலால் சான்­றிதழ் வழங்கும் நட­வ­டிக்­கையை நிறுத்த வேண்டும், முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­ம­லாக்கல் போன்ற பல பிர­சா­ரங்கள் கடந்த 2010 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இந்த நட­வ­டிக்­கைகள் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னாலும் நேர­டி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இவ்­வா­றான நிலையில், முகத்தை மறைக்கும் ஆடைகள் அணி­வதை நாட்டில் தடை செய்ய வேண்டும். அதனை மீறு­வோரை பிடி­யா­ணை­யின்றி கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்ற பரிந்­து­ரை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சுமார் 120 பக்­­கங்­களைக் கொண்ட இந்தப் பரிந்­துரை நாட்டின் உயர் சபை­யான பாரா­ளு­மன்­றத்தின் தேசிய பாது­காப்பு மேற்­பார்வை குழு­வினால் கடந்த பெப்­ர­வரி 19 ஆம் திகதி சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் மார்ச் 2ஆம் திகதி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­லா­மெனப் பெரும்­பாலும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அவ்­வாறு பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­மாயின் கடந்த பெப்­ர­வரி 20ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தின் இறுதி அமர்­வாகும். இந்த இறுதி அமர்­விற்கு ஒரு நாள் முன்­ப­தாக யாரும் எதிர்­பா­ராத வகையில் இந்த சிபா­ரி­சுகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளமை பாரிய கேள்­வியை தோற்­று­வித்­துள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மலித் ஜய­தி­லக தலை­மை­யி­லான இந்த தேசிய பாது­காப்பு மேற்­பார்வை குழுவில் எம்.எஸ்.தௌபீக், எம்.ஐ.எம்.மன்சூர், வீர­கு­மார திஸா­நா­யக்க,

செஹான் சேம­சிங்க, விஜி­த­ஹேரத், பேரா­சி­ரியர் ஆசு மார­சிங்க, எம்.ஏ.சுமந்­திரன், காவிந்த ஜய­வர்­தன, எஸ்.வியா­ழேந்­திரன், புத்­திக பத்­தி­ரன , பாலித தெவ­ரப்­பெ­ரும, ஏ.ஏ.விஜே­துங்க, சித்­தார்த்தன், சந்­திம கமகே, மயந்த திஸா­நா­யக்க, பந்­துலால் பண்­டா­ரி­கொட உள்­ளிட்ட 17 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அங்கம் வகிக்­கின்­றனர்.

இவர்கள் அனை­வ­ரி­னதும் ஒப்­பு­த­லு­ட­னேயே குறித்த பரிந்­து­ரைகள் வெளி­யி­டப்­பட்­ட­தாக பாரா­ளு­மன்­றத்தின் ஊடக பிரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த குழுவின் அறிக்­கையில் மேலும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள முக்­கிய விட­யங்­க­ளா­வன:

1. முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் விரி­வாக கட்­ட­மைப்பு ரீதியில் திருத்­தப்­பட வேண்டும். மண­மகள் – மண­மகன் இரு­வரும் திரு­ம­ணத்தின் போது 18 வயதை பூர்த்தி செய்­தி­ருக்க வேண்டும். திரு­ம­ணங்கள் பதிவு செய்­யப்­ப­டு­வ­தோடு பொதுச் சட்­டத்தின் கீழ் விவா­க­ரத்து பெறக்­கூ­டி­ய­வாறு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.

2. முஸ்லிம் சிவில் சமூ­கத்தை வலு­வூட்ட வேண்டும். அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செய­ல­கத்தை வலு­வூட்ட வேண்டும்.

3. வக்பு சட்­டத்தை திருத்தி பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெறும் அனைத்து பிர­சா­ரங்­க­ளையும் ஒலிப்­ப­திவு செய்ய வேண்டும். முஸ்லிம் இன விகி­தா­சா­ரத்­திற்கு அமைய பள்­ளி­வா­சல்­களின் எண்­ணிக்­கையை தீர்­மா­னிக்க வேண்டும்.

4. இன அடிப்­ப­டை­யி­லான மற்றும் மத அடிப்­ப­டை­யி­லான அர­சியல் கட்­சி­களின் பதிவை இடை­நி­றுத்த வேண்டும். இலங்கை அடை­யாள இலக்­கத்­தினை கொண்ட பிறப்பு அத்­தாட்சி பத்­தி­ர­மொன்றை வெளி­யிட வேண்டும். சகல சம­யங்­க­ளையும் இணைத்து சர்­வ­மத அலு­வல்கள் அமைச்சு உரு­வாக்க வேண்டும்.

இந்தக் குழு­வினால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் அனைத்தும் நாட்டில் சிறு­பான்­மை­யாக வாழும் ஒரு சமூ­க­மான முஸ்லிம் சமூ­கத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அவ்­வா­றா­ன­தொரு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் பாரா­ளு­மன்றக் குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எஸ்.தௌபீக் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகி­யோரும் இருந்­துள்­ளனர்.

தாங்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் இந்த குழு­வினால் வெளி­யி­டப்­பட்ட பரிந்­து­ரைகள் பற்றி அந்த இரண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தொடர்ந்தும் மௌனம் காக்­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் இந்த பரிந்­து­ரைகள் தங்­க­ளிடம் காண்­பிக்­கப்­ப­ட­வில்லை எனவும் இதற்கு ஆத­ர­வாக தாங்கள் கையொப்­பமும் இட­வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எம்.ஐ.எம்.மன்சூர் தெரி­வித்­துள்ளார்.

“இக்­கு­ழுவில் நாங்கள் இரு முஸ்லிம் எம்.பிக்கள் இருந்தோம். ஆனால் அப்­படி இருந்தும் அங்கு எடுக்­கப்­படும் முடி­வு­களில் எமக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வில்லை” என அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் மன்சூர் எம்.பி மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

“இது வேறொரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்­டுத்­தப்­பட்­டது. நாங்கள் பல முறை எதிர்த்து பேசி­விட்டு இறு­தி­யாக எப்­ப­டியும் ஒப்­ப­மிடும் சந்­தர்ப்­பத்தில் அத்­த­னைக்கும் பதம் பார்ப்போம் என்­றெண்ணி மௌன­மாக இருந்தோம்.

அச் சமயம் அத்­த­னையும் காய்­ந­கர்த்தி விட்டு எம்­மிடம் கையொப்பம் கூட எடுக்­காமல் வெளி­யி­டப்­பட்ட அறிக்கை இது. இதனை நான் வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன். எந்­த­வொரு முஸ்­லிமும் இவ்­வா­றான சட்­டங்­க­ளுக்கு தலை­சாய்ப்­பார்­களா? சற்று சிந்­தனை செய்து பாருங்கள்” என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மன்சூர் கூறு­வதுபோல், நடந்திருப்பின் பரிந்­து­ரை­களை குழுவின் அங்­கத்­த­வர்­க­ளிடம் காண்­பிக்­காமல் வெளி­யி­டப்­பட்­டமை பல கேள்­வி­களை தோற்­று­விக்­கின்­றன. நாட்டின் உயர் சபை­யான பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற குழு­வினால் நாட்­டி­லுள்ள சிறு­பான்மை சமூ­க­மொன்று குறி­வைக்­கப்­பட்­டதன் மர்மம் என்ன?

இந்தப் பரிந்­து­ரைகள் தொடர்பில் இந்தக் குழுவின் முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளான எம்.எஸ்.தௌபீக் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் தொடர்ச்­சி­யாக அமைதி பேணாமல் உண்மைத் தன்­மையை முஸ்லிம் சமூ­கத்­திற்கு அவ­ச­ர­மா­கவும் உட­ன­டி­யா­கவும் வெளி­யிட வேண்டும். இது அவர்­களின் தலை­யாய கட­மை­யாகும். இதற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை அவர்கள் இரு­வரும் பிர­தி­நி­தி­தித்­து­வப்­ப­டுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மைத்­துவம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

அதே­வேளை, இது­போன்ற முக்­கி­ய­மான குழுக்­க­ளிற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை முஸ்லிம் கட்­சிகள் சிபாரிசு செய்யும் போது குறித்த விடயத்தில் ஆர்வமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை கருத்திற்கொள்ள வேண்டும்.

“தேசிய பாது­காப்பு மேற்­பார்வை குழு­வினால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும்” என கொழும்பில் அண்­மையில் இடம்­பெற்ற ஊடக மாநா­டொன்றில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பிக்க ரண­வக்க அர­சாங்­கத்­திற்கு சவால் விட்­டி­ருந்தார்.

இதற்கு எதி­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஊடக அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

தேசிய பாது­காப்பு மேற்­பார்வை குழு போன்ற பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள குழுக்­களின் விட­யங்­களில் எதிர்­கா­லத்­தி­லா­வது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதே­வேளை, இந்த குழுக்­க­ளினால் முன்­வைக்­கப்­படும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான பரிந்துரைகளின் போது கட்சி வேறுபாடுகளை மறந்து கூட்டாகப் போராட வேண்டும்.-Vidivelli

  • றிப்தி அலி

Leave A Reply

Your email address will not be published.