சம்மாந்துறை மாஹிர் அ.இ.ம.கா.வில் இணைவு

0 289

சம்­மாந்­து­றையைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முக்­கி­யஸ்­தரும் அக்­கட்­சியின், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான மாஹிர், ரிஷாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸில் இணைந்­து­கொண்டார்.

கொழும்பில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றின்­போதே அவர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்­து­கொண்டார்.

முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் மாஹிர் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸில் இணைந்­து­கொண்ட பின்னர் கருத்து வெளி­யி­டு­கையில், கொள்கை ரீதி­யாக அர­சி­யலை செய்ய வேண்­டு­மென்ற ஒரே கார­ணத்­துக்­கா­கவும் தூய­நோக்­கி­லுமே ரிஷாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸில் தான் இணைந்து கொண்­ட­தா­கவும் பத­வி­யையும் சொகு­சையும் விரும்­பி­யி­ருந்தால், கட்­சியின் தலைவர் அமைச்­ச­ராக இருந்­த­போதே இணைந்­தி­ருக்க முடியும் என்றார்.

மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாட் பதி­யுதீன் தலை­மையில், கொழும்பில் நேற்று இடம்­பெற்ற இந்த நிகழ்வில் செய­லாளர் சுபைதீன், தவி­சாளர் அமீர் அலி, தேசிய அமைப்­பாளர் அப்­துல்லாஹ் மஹ்ரூப், கொள்கை பரப்புச் செய­லாளர் ஜவாத் மற்றும் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளான அன்சில், மக்கீன், ஜுனைதீன், சம்­மாந்­துறை பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் மாஹிரின் முக்­கிய ஆத­ர­வா­ளர்கள் உட்­பட பலர் கலந்­து­கொண்­டனர்.

இதே­வேளை, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த சம்­மாந்­து­றையைச் சேர்ந்த இஸ்­மாயில் அண்மைக் கால­மாக பொது­ஜன பெர­மு­ன­வுடன் நெருங்கி செயற்­பட்டு வரு­கின்றார். எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் மொட்டு சின்­னத்தில் இஸ்மாயில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் சம்மாந்துறையைச் சேர்ந்த மாஹிர் அ.இம.கா.வில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.