பட்டதாரி நியமனங்களை உடனடியாக இடைநிறுத்துக

உள்ளூராட்சி அமைச்சர், மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்

0 365

அர­சாங்­கத்­தினால் இவ்­வாரம் வழங்­கப்­பட்ட 42 ஆயிரம் பட்­ட­தாரி பயி­லுநர் நிய­ம­னங்­க­ளையும் உடன் அமு­லுக்கு வரும் வகையில் தேர்தல் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­பட்டு ஒரு வார­காலம் செல்லும் வரை இடை­நி­றுத்­து­மாறு தேர்தல் ஆணைக்­குழு பொது­நிர்­வாகம், உள்­நாட்டு அலு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு மற்றும் மாவட்ட செய­லா­ளர்கள், அர­சாங்க அதி­பர்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் வேண்­டி­யுள்ளது.

தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய கையொப்­ப­மிட்டு அனுப்பி வைத்துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது.

2020 பெப்­ர­வரி மாதம் இறுதித் திக­தி­க­ளிலும் மார்ச் 1 ஆம் 2 ஆம் திக­தி­க­ளிலும் அஞ்சல் திணைக்­க­ளத்­திற்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­படும் பட்­ட­தாரி பயி­லுநர் நிய­ம­னக்­க­டி­தங்கள் 2020.02.27 ஆம் திக­தி­யி­டப்­பட்­ட­வை­யாகும். இப்­ப­யி­லு­நர்­களில் அநேகர் தேர்தல் காலப்­ப­குதி ஆரம்­பிக்­கப்­பட்­டதன் பின்பே கட­மைக்கு சமு­க­ம­ளிப்­பார்கள்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது மற்றும் அதற்கு முன்னர் நடை­பெற்ற தேர்­தல்­களின் போதும் அர­சாங்க சேவை ஆணைக்­கு­ழுவின் முன் அனு­ம­தியைப் பெற்று முறை­யான விதத்தில் விண்­ணப்­பங்­களைக் கோரி தெரிவு செய்­வ­தற்­கான பரீட்­சை­யொன்­றி­னூ­டாக அரச சேவைக்கு மேற்­கொள்­ளப்­பட்ட ஆட்­சேர்ப்­புகள் மற்றும் மிக அவ­ச­ர­மான அத்­தி­யா­வ­சிய ஆட்­சேர்ப்­புகள் தவிர ஏனைய அனைத்து அரச சேவைக்­கான ஆட்­சேர்ப்­புகள் , பயி­லுநர் ஆட்­சேர்ப்­புகள் அனைத்தும் தேர்தல் முடியும் வரை இடை­நி­றுத்­தப்­பட்­டது.

இந்த தேர்தல் காலப்­ப­கு­தி­யினுள் மிக அவ­சர தேவையின் அடிப்­ப­டையில் அல்­லது நிலவும் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­காக இந்த பட்­ட­தாரி பயி­லு­நர்கள் ஆட்­சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. இந்தப் பயி­லு­நர்­களை ஆட்­சேர்த்துக் கொள்­வ­த­னூ­டாக அர­சியல் ரீதி­யி­லான ஊக்­கு­விப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் இதற்கு முன்­னரும் தேர்தல் காலத்தில் இவ்­வா­றான நிய­ம­னங்கள் வழங்­கு­வ­தனை இடை நிறுத்­தி­யுள்­ள­தா­கவும் முறைப்­பா­டுகள் கிடைத்­த­வண்­ண­முள்­ளன.

அதற்­கி­ணங்க இந்த பட்­ட­தாரி பயி­லுநர் நிய­ம­னங்­களை தேர்தல் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­பட்டு ஒரு வார­காலம் செல்லும் வரை இடைநிறுத்துமாறு அறியத்தருகிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் தேர்தல் அணையாளர் நாயகம், தேர்தல் ஆணைக்குழுவின் செயலாளர் மாவட்ட பிரதி, உதவி தேர்தல் ஆணையாளர்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.