மஹர பள்ளிவாசல் மூடப்பட்டதால் மையவாடியிலேயே ஜனாஸா தொழுகை

0 816

மஹர சிறைச்­சாலை வளா­கத்­தினுள் இயங்கி வந்த ஜும்ஆ பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்குத் தடை­செய்­யப்­பட்டு மஹர சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களின் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளதால் இப்­ப­கு­தியில் வாழும் சுமார் 290 குடும்­பங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்கள் தங்­க­ளது சமயக் கட­மை­களை நிறை­வேற்­று­வதில் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

அப்­ப­கு­தியில் நேற்று முன்­தினம் நிகழ்ந்த ஜனாஸா தொழு­கையில் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டனர்.

ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் கலந்து கொண்ட நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் மைய­வா­டி­யிலே ஜனாஸா தொழு­கையை நிறை­வேற்ற வேண்­டிய நிலைமை ஏற்­பட்­ட­தாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்­த­லைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரி­வித்தார்.

ஓய்வு பெற்ற கடற்­படை உத்­தி­யோ­கத்தர் மர்ஹும் ரி.இஸட் பாகஸின் ஜனாஸா தொழுகை மைய­வா­டி­யிலே நடாத்­தப்­பட்­டது. முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தர வேண்டுமென பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.