உம்ரா தற்காலிக தடை வரவேற்கத்தக்கது

0 837

சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்­தோ­ரல்­லாத அனைத்து வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கும் உம்ரா கட­மை­யினை நிறை­வேற்ற வருகை தரு­வ­தற்கு சவூதி அரே­பிய அர­சாங்கம் தற்­கா­லிக தடை விதித்­துள்­ளது.

COVID–19 என பெய­ரி­டப்­பட்­டுள்ள கொரோனா வைரஸ் பர­வாமல் தடுப்­ப­தற்கே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பிய அரசு அறி­வித்­துள்­ளது. இந்த அறி­விப்­புக்கு அமைய மக்கா, மதீனா ஆகிய நக­ரங்­க­ளுக்கு வெளி­நாட்­ட­வர்கள் உம்­ரா­வுக்கோ அல்­லது சுற்­றுலா நோக்­கிலோ வருகை தரு­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்–19 வைரஸ் 60 க்கும் மேற்­பட்ட நாடு­க­ளுக்கு பர­வி­யுள்­ள­தை­ய­டுத்து சவூதி அரே­பி­யாவில் மாத்­தி­ர­மல்ல ஐரோப்­பிய நாடு­க­ளிலும் அமெ­ரிக்­கா­விலும் சுற்­று­லா­வுக்கு தடை விதிப்­ப­தற்கும் பெரும் எண்­ணிக்­கை­யானோர் ஒன்று கூடலைத் தடுப்­ப­தற்கும் அந்­நாட்டின் தலை­வர்கள் நேற்று முன்­தினம் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றார்கள். ஜப்பான் பெரும் எண்­ணிக்­கை­யானோர் ஒன்று கூடும் டிஸ்னி லேன்ட்டை இரு வாரங்­க­ளுக்கு மூடி­யுள்­ளது.

சவூதி அர­சாங்கம் உம்ரா கட­மைக்கு கடந்த வியா­ழக்­கி­ழமை திடீ­ரென தடை விதித்­ததால் உல­கெங்­கு­மி­ருந்து உம்ரா கட­மைக்­காக சவூதி நோக்கி பய­ணிக்­க­வி­ருந்த இலட்­சக்­க­ணக்­கான யாத்­தி­ரி­கர்கள் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­னார்கள். அவர்களது பயணம் தடைப்­பட்­ட­த­னை­ய­டுத்து கவ­லை­யுடன் திரும்பிச் சென்­றார்கள்.

சவூதி சுகா­தார அமைச்சின் சிபா­ரி­சுக்கு அமை­வாக வெளி­வி­வ­கார அமைச்சு இந்தத் தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளது. இத்­தீர்­மானம் தற்­கா­லி­க­மா­னது எனவும் தொடர்ந்து நிலை­மை­களை அவ­தா­னிக்­க­வுள்­ள­தா­கவும் சவூதி அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

இந்த வைரஸ் கார­ண­மாக உல­க­ளா­விய ரீதியில் நேற்று முன்­தினம் வரை 3041 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 89071 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மத்­திய கிழக்கில் ஈரானில் மாத்­திரம் 54 பேர் மர­ண­மா­கி­யுள்­ள­துடன் 978 பேர் வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

கொவிட்–19 வைரஸ் பர­வு­வ­தி­லி­ருந்தும் யாத்­தி­ரி­கர்­களைப் பாது­காக்கும் நோக்கில் சவூதி அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள இத்­தீர்­மா­னத்தை ஆத­ரிப்­ப­தாக சர்­வ­தேச இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு (O.I.C) அமைப்பு தெரி­வித்­துள்­ளது. அத்­தோடு இந்த வைரஸ் தொற்­றி­லி­ருந்தும் யாத்­தி­ரி­கர்­களைப் பாது­காக்கும் வகையில் உம்­ரா­வுக்கு தற்­கா­லிக தடை விதித்­துள்ள இத்­தீர்­மானம் ஷரீஆ விதி­க­ளுக்கு உட்­பட்­டது என எகிப்தை தள­மாகக் கொண்­டி­யங்கும் இஸ்­லா­மிய ஆய்வு நிறு­வ­ன­மான தாருல் இப்தா தெரி­வித்­துள்­ளது. இத்­தீர்­மானம் மனி­தர்­களைப் பாது­காக்கும் நோக்­கி­லா­னது என்றும் அந்­நி­று­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

உல­கெங்­கி­லு­மி­ருந்து இலட்­சக்­க­ணக்­கான மக்கள் புனித நகர்­க­ளான மக்கா மற்றும் மதீ­னாவில் ஒன்று கூடு­கி­றார்கள். அவ்­வா­றான மக்கள் வைரஸ் தொற்­றுக்­குள்­ளான நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கலாம்.

இந்­நி­லையில் உம்ரா தடை செய்­யப்­பட்­டி­ருக்­காது விட்டால் வைரஸ் வேக­மாக பல நாடு­க­ளுக்கும் பரவும் நிலை உரு­வாகும். அத்துடன் இவ்வருட ஹஜ் யாத்திரையும் பாதிக்கப்படும். இந் நிலை­மை­யினை உணர்ந்து சரி­யான நேரத்தில் சவூதி அரே­பிய தீர்­மானம் மேற்­கொண்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது.

இதேவேளை சவூதி அரே­பிய அரசின் உம்­ரா­வுக்­கான தடை உத்­த­ரவு வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு முன்பு பயண ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்த உம்ரா யாத்­தி­ரி­கர்கள் செலுத்­திய கட்­ட­ணங்­களை மீள செலுத்­து­வ­தற்கு சவூதி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென இலத்­தி­ர­னியல் செயல்­மு­றை­யொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. உம்ரா யாத்­தி­ரி­கர்கள் தங்கள் பயண முகவர் ஊடாக கட்­ட­ணங்­களை மீளப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

உலக முஸ்லிம் சமூகம் விரைவில் தங்­க­ளது இறுதிக் கட­மை­யான ஹஜ்ஜை எதிர்­நோக்கி காத்­தி­ருக்­கின்­றனர். எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மக்காவிலும் மதீனாவிலும் ஒன்றுகூடவுள்ளனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே உம்ராவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

உம்ரா கட்டாயக் கடமையல்ல. ஆனால் ஹஜ் வசதியும்,

வாய்ப்புமுள்ளவர்களுக்கு கட்டாய கடமையாகும்.

மக்களை கடுமையாகத் தாக்கும் கொவிட்–19 வைரஸை முழுமையாக ஒழிப்பதற்கு நாமும் ஒத்துழைப்போம். பிரார்த்தனை புரிவோம். அதன் மூலமே எவ்வித அச்சமுமின்றி ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை இவ்வருடம் முஸ்லிம்கள் நிறைவேற்ற முடியுமாகவிருக்கும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.