தனி நபராகவன்றி கட்சிகள் இணைவதென்றால் தயார்

மு.கா. தலைவரின் அழைப்புக்கு ஹஸன் அலி பதில்

0 803

முஸ்லிம் கட்­சிகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து தேர்­தலை எதிர்­கொள்­வ­தென்றால் அதற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். ஆனால் தனி நப­ராக என்னால் எந்­த­வொரு கட்­சி­யிலும் இணைந்து செயற்­பட முடி­யாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாய­கமும் ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரு­மான எம்.ரி. ஹஸன் அலி ‘விடி­வெள்­ளி‘க்குத் தெரி­வித்தார்.

கண்டி பொல்­கொல்­லையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற மு.கா.வின் 29 ஆவது பேராளர் மாநாட்டில் உரை­யாற்­றிய கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், மீண்டும் கட்­சியில் இணைந்து கொள்­ளு­மாறு ஹஸன் அலிக்கு விடுத்த பகி­ரங்க அழைப்பு குறித்து கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரு­மான எம்.ரி. ஹஸன் அலி மேலும் குறிப்­பி­டு­கையில், நாட்டின் தற்­போ­தைய சூழ்­நி­லையில் சகல முஸ்லிம் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் எனும் கோரிக்கை வலுப்­பெற்று வரு­கின்­றது. மூன்று தினங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற எமது கட்­சியின் தலை­மைத்­துவ சபைக் கூட்­டத்­திலும் இது தொடர்பில் தீர்­மானம் ஒன்றை நிறை­வேற்­றி­யுள்ளோம். முஸ்லிம் கட்­சிகள் அனைத்தும் இணைந்து எதிர்­வரும் தேர்­தலை கூட்­டாக சந்­திப்­ப­தற்­கான வாய்ப்­புகள் வரு­மானால் அதற்கு முன்­னு­ரிமை வழங்க வேண்டும் என தீர்­மா­னித்­துள்ளோம்.

இவ்­வாறு ஒற்­று­மைப்­ப­டு­வது முஸ்­லிம்கள் சக­ல­ருக்கும் பயன்­தரக் கூடிய விட­ய­மாகும். யாரேனும் இந்த முயற்­சியை முன்­னெ­டுத்தால் இக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து பய­ணிக்க நாம் தயா­ரா­க­வுள்ளோம்.

புத்­தி­ஜீ­விகள், ஊட­கங்கள் இதற்­காக முன்­னிற்க வேண்டும். இன்­றைய அர­சியல் சூழலில் இது மிகவும் அவ­சி­ய­மான ஒன்­றாகும். கிழக்கு மாகா­ணத்தில் கூட மக்கள் எல்­லோரும் இத­னையே விரும்­பு­கின்­றனர். சக­லரும் ஒற்­று­மைப்­பட வேண்டும் என்­ப­தையே வலி­யு­றுத்­து­கின்­றனர் என்றார்.

ஆனால் மு.கா. பேராளர் மாநாட்டில் உரை­யாற்­றிய கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உங்­க­ளையே பெயர் குறிப்­பிட்டு மீண்டும் கட்­சியில் இணைந்து கொள்­ளு­மாறு அழைத்­தாரே? இதற்கு உங்கள் பதில் என்ன? எனக் கேட்­ட­தற்கு..‘‘ அவர் அழைப்பு விடுத்­ததை நானும் கேட்டேன். ஆனால் நான் இப்­போது வேறொரு கட்­சியில் உள்ளேன். எனவே கட்­சிகள் இணை­யும்­போது இந்த அழைப்பை பரிசீலிக்க முடியும். இது விடயத்தில் தனி நபராக நான் தீர்மானிக்க முடியாது. எனக்கென்று ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை‘‘ என்றும் ஹஸன் அலி பதிலளித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.