சமூகத்தின் முதுகெலும்பு வாலிபர்களே!

0 2,176

அல்லாஹ் மனி­தர்­க­ளுக்கு வழங்­கிய பரு­வங்­களில் மிக முக்­கி­ய­மான பரு­வ­மாகக் கரு­தப்­ப­டு­வது, வாலிபப் பரு­வ­மாகும். மார்க்­கத்தின் அர­ணாகத் திகழும் வலி­மை­மிகு வாலிபப் பருவம் என்­பது இறை­வனால் எமக்­க­ளிக்­கப்­பட்ட மிகப் பெரும் அருள் என்றால் அது மிகை­யா­காது.

இந்த இளைஞர் சமூ­கமே எமது வளம். இந்த இளைஞர் கூட்­டமே இஸ்­லாத்தின் மிகப்­பெ­ரும் பல­மென்­பதை எப்­போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இளம் சமூ­கத்­தி­னரைப் பற்றி அல்­குர்­ஆனும், அஸ்­ஸுன்­னாவும் மிக விரி­வாகப் பேசு­கின்­றன. ஏனெனில், இவர்கள் சமூ­கத்தின் முது­கெ­லும்பு எனக் கணிக்­கப்­ப­டு­கி­றார்கள். அன்பு நபி (ஸல்) அவர்கள் ஈமா­னிய உணர்­வுள்ள இளைஞர் சமூ­கத்தை உரு­வாக்­கி­னார்கள். இவர்­க­ளாலே இஸ்­லாத்தின் ஓசை உல­கெங்கும் ஒலிக்க ஆரம்­ப­மா­னது. நபி (ஸல்) அவர்கள் வயோ­தி­பர்­க­ளுக்கு கொடுத்த கவ­னத்தை விடவும் வாலி­பர்­க­ளுக்கு கொடுத்த கவனம் அலா­தி­யா­னது.

வர­லா­று­களை படித்துப் பாருங்கள்! ஸஹாபி அபூபக்ர் ஸித்தீக் (ரழி) அவர்கள், நபிகள் (ஸல்) அவர்­க­ளுக்கு நபித்­துவம் கிடைத்து, முதல் நாளில் இஸ்­லாத்தை ஏற்றார், அருமை நபியை முதன் முதலில் உண்­மைப்­ப­டுத்­திய பெருமை அவ­ரையே சாரும். அந்­நேரம் அண்ணா­ரது வயது 37 ஆகும். அபூபக்ர் ஸித்தீக் (ரழி) அவர்கள், இஸ்­லாத்தை ஏற்று 20 ஆண்­டு­க­ளுக்கு பின் அவ­ர­து தந்தை அபூ­ கு­ஹாபா இஸ்­லாத்தில் நுழை­கிறார்.

ஸஹா­பாக்­களின் வர­லாறு ஏடு­களை புரட்டிப் பார்த்தால், அநே­க­மான ஸஹா­பாக்கள் 37 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். அவர்கள் இஸ்­லாத்­திற்கு செய்த சேவை அளப்­ப­ரி­யது. நாம் வர­லாறு படிக்­கிறோம். நபித்­தோழர் உஸாமா (ரழி) அவர்­களின் கரத்­திற்கு படையின் கொடி ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அப்­போது அவர் 18 வயது வாலி­ப­ராக இருந்தார்.

இப்­போ­துள்ள 18 வயது வாலி­பர்கள் ஸுபஹ் தொழு­கையை பள்­ளிக்கு வந்து நிறை­வேற்­றக்­கூட பல­மற்ற இளை­ஞர்­க­ளாக மாறி­விட்­டார்கள். இப்­ப­ரு­வத்தில் அவர்­களை தமது கைய­டக்கத் தொலை­பே­சியை விட்டுப் பிரிந்­தி­ருக்க முடி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ளது. எங்கு பார்த்­தாலும், எங்கு சென்­றாலும் இவர்­களின் இத்­த­கைய செயற்­பாடு வளர்ந்­து­வரும் சமூ­கத்­திற்கு ஆபத்­தாக மாறி­யுள்­ளது.

எமது வாலிப சமூ­கத்தை அணு­குங்கள்! அர­வ­ணைத்துப் பேசுங்கள்! அவர்­களை அனைத்து துறை­க­ளிலும் பயன்­ப­டுத்­துங்கள்! சமூ­கத்தை விட்டும் அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்­தா­தீர்கள்! அவர்­க­ளிடம் இருக்கும் திற­மைகள், ஆளு­மை­களை வீணாக்­கா­தீர்கள்! நபி (ஸல்) அவர்கள் தனது ஸஹாபா தோழர்­க­ளிடம் மறைந்­தி­ருக்கும் ஆற்­றல்­களை மிகத் துல்­லி­ய­மாக இனங்­கண்டு அவர்­களை பயன்­ப­டுத்­தி­னார்கள். சமூகக் காவ­லா­ளர்கள் இவ்­வி­ட­யத்தில் கூடிய கவனம் செலுத்­தா­விட்டால் அடுத்த தலை­மு­றை­யி­னரின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­விடும். இவர்கள் சிறைச்­சா­லை­களில் காலம் கழிக்க மாட்­டார்கள் என்­ப­தற்கு எந்த உத்­த­ர­வா­தமும் இல்லை என்­பதை ஞாப­கத்தில் வைத்துக் கொண்டு வாழுங்கள். முன்­னைய காலங்­களில் நடை­பெற்ற நிகழ்­வு­களை தெளி­வு­ப­டுத்த வேண்­டிய தேவை­யில்லை.

மது நாட்டில் பள்­ளி­வா­சல்கள், மத்­ர­ஸாக்கள், வியா­பார நிலை­யங்கள் கட்­டு­வ­தற்கும் அவற்றை முன்­னேற்­று­வ­தற்கும் மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சிகள் வாலி­பர்கள் விட­யத்தில் செய்­யப்­ப­ட­வில்லை. இதனால், இலக்­கற்ற, சமூ­க­மாக அவர்கள் மாறி­விட்­டார்கள். வீட்டில் பெற்­றோர்­க­ளுக்கும் பாட­சா­லையில் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் கட்­டுப்­ப­டா­த­வர்­க­ளாக மாறி­விட்­டார்கள்.

இறை­வனின் இல்­லத்தில் இனிய ஓசை­யில்­ இ­றை­வனை அழைக்­கின்ற இளம் முஅத்­தின்­களை நிய­மி­யுங்கள்!

மக்கா வெற்­றி­ கி­டைத்த நாளன்று கஃபாவின் கூரையின் மீது ஏறி நின்று அதான்­ கூற பிலால் (ரழி) அவர்­களை நபி (ஸல்) அவர்கள் தெரிவு செய்­தார்கள். அப்­போது அவர்­களின் பாங்­கொலி மலைக் குன்­று­க­ளுக்­கெல்லாம் அப்பால் ஒலிக்­கக்­கேட்­டது. இதனை கேட்ட சில இளம்­பிள்­ளைகள் அதானை பரி­காசம் செய்­தார்கள். நபி (ஸல்) அவர்கள் இச்­சி­றார்­களை அழைத்து வரு­மாறு கட்­ட­ளை­யிட்­டார்கள். அவர்­க­ளிடம் ஒவ்­வொ­ரு­வ­ராக அதானை சொல்லிக் காட்­டு­மாறு ஏவி­னார்கள். அவர்­களில் அழ­கிய தொனியில் அதான் கூறிய சிறி­ய­வரை அழைத்து நீங்கள் இஸ்­லாத்தை தழு­வினால் உங்­களை மக்கா பள்­ளிக்கு முஅத்­தி­னாக நிய­மனம் செய்து விடுவேன் என்­றார்கள். அவர் உடனே இஸ்­லாத்தை ஏற்றார். அந்­நேரம் அவ­ரது வயது 13 ஆகும். 13 வயது பிள்­ளைக்கு இங்கு என்ன வேலை என்­றல்­லவா நாம் யோசிப்போம்.

வயது பார்த்து ஒரு பொறுப்பை ஒப்­ப­டைக்க நினைக்­கா­தீர்கள்! திற­மைக்கும், தகு­திக்கும் முன்­னு­ரிமை வழங்­குங்கள்! அவர்­க­ளிடம் இருக்கும் ஆற்­றல்­களை இனம்­கண்டு அவற்றை நாம் சமூ­கத்தின், நாட்டின் வளர்ச்­சிக்­காகப் பயன்­ப­டுத்த வேண்டும். ஊரின் தலை­மைத்­து­வத்தை இளை­ஞர்­க­ளிடம் ஒப்­ப­டை­யுங்கள்!

மக்கா வெற்­றியின் பிறகு ஒரு தலை­வரை நிய­மிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எப்­போதும் நுணுக்­க­மாக செயற்­ப­டு­வார்கள். தலைவர் பொறுப்பை ஏற்க யாருக்கு தகு­தியும் திற­மையும் உள்­ளது என்­பதை ஊகித்­து நாயகம் நபி (ஸல்) அவர்கள் அங்கே அந்­நே­ரத்தில் 21 வய­துள்ள இளம் நபித்­தோழர் அத்தாப்  இப்னு அஸீத் (ரழி)  அவர்­களை தேர்ந்­தெ­டுத்­தார்கள். எமது ஊர்­களில் எங்­கே­யா­வது 21 வய­தான தலை­வர்­களை பார்க்க முடி­கி­றதா? எனவே, இளை­ஞர்­களை இழி­வாகப் பார்க்­கா­தீர்கள்! இலே­சாகப் பார்க்­கா­தீர்கள்! ஓரிரு விட­யங்­களை வைத்து அவர்­களை எடை­போ­டா­தீர்கள்!

சகோ­த­ர­ர்­களே! வாலி­பர்­களை வலுப்­ப­டுத்த காத்­தி­ர­மான செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளுங்கள்! அவர்­களின் பெறு­ம­தியை புரிய வையுங்கள்! இளம் நபித்­தோ­ழர்கள் இஸ்லாம் தலை­தூக்க செய்த சேவை­களை இப்­போ­துள்ள வாலி­பர்­க­ளுக்கு ஒப்­பீட்டு ரீதி­யாக தெளி­வு­ப­டுத்­துங்கள்!

உலகத் தலைவர் நபி (ஸல்) அவர்கள் 18 வய­துள்ள உஸாமா இப்னு ஸைத் (ரழி) அவர்­களை ஒரு படைக்குத் தள­ப­தி­யாக நிய­மித்­தார்கள். அப்­ப­டை­யி­லேதான் உஸாமா (ரழி) அவர்­களை விட வயது முதிர்ந்த அபூ­பக்ர(ரழி), உமர்(ரழி), உஸ்மான் (ரழி) போன்ற ஸஹா­பாக்கள் இருந்­தார்கள். நண்­பர்­களே! இவ்­வாறு சிறப்பு மிகுந்த நபித்­தோ­ழர்கள் இருந்தும் கூட இளம் நபித்­தோ­ழர்­களை முற்­ப­டுத்­தி­ய­தி­லி­ருந்து நாம்  முன்­மா­தி­ரியைக் காண வேண்டும்.

பொறுப்­புக்­களை சுமப்­ப­தற்கு நான் அல்­லது எனது குடும்­பம்தான் தகு­தி­யென நாங்கள் நினைத்துக் கொண்­டி­ருக்­கிறோம். அதனை மறந்­து­விட்டு நபியின் வர­லாறை படித்து வாழப் பழகிக் கொள்வோம்!

G.C.E. O/L பரீட்சை எழு­திய இளம் மாணவச் செல்­வங்­களை நெறிப்­ப­டுத்­துங்கள்!

கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­றி­விட்டு நீண்ட விடு­மு­றையில் இளை­ஞர்கள் தமது காலத்தை செல­வ­ழிக்­கி­றார்கள் என்­பது குறித்து சமூகத் தலை­வர்கள் விழிப்­பு­ணர்வு பெற­வேண்டும். சிலர் அல்­லாஹ்வின் பாதையில் சென்று நல்­ல­பல மார்க்க விட­யங்­களை படித்துக் கொடுத்து அவர்­களை வீடு­களில் ஒப்­ப­டைப்­பதும் வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டாகும்.

ஆனால், அவர்கள் விட­யத்தில் தொடர்ச்­சி­யான கவனம் செலுத்­தாமல் இருப்­ப­துதான் கவ­லை­ய­ளிக்­கி­றது. மேலும் விடு­முறை காலங்­களில் எமது உல­மாக்­களை வைத்து மார்க்க வகுப்­பு­களை ஏற்­பாடு செய்­யலாம். எமது இளம் சமூ­கத்­தி­னரை நெறிப்­ப­டுத்தத் தவ­றினால் அவர்­க­ளி­ட­மி­ருந்து எதிர்­கா­லத்தில் விளை­வு­களும் மோச­மா­கத்தான் இருக்கும் என்­பதை மறந்து விடா­தீர்கள்!

வீட்டில் பெற்­றோரின் கவ­ன­யீனம் கார­ண­மா­கவே அதிக இளை­ஞர்கள் வழி­கெட்டுப் போகின்­றார்கள். சில பெற்­றோர்கள் வெளி­நாட்டில் காலத்தை கடத்­து­கி­றார்கள். இந்­நி­லையில் பிள்­ளைகள் முறை­யான பயிற்­று­விப்­பின்றி வளர்­கின்­றனர். எப்­போதும் பிள்­ளைகள் பெற்­றோரால் வளர்க்­கப்­பட வேண்டும். அவர்கள் தானாக வள­ரக்­கூ­டாது.

இபாதுர் ரஹ்­மானின் இனிய பண்­புகள் இளை­ஞர்­க­ளிலும் பரி­ண­மிக்க வேண்டும்.

ஸூரத்துல் புர்­கானில் இபாதுர் ரஹ்­மானின் அரு­ளா­ளனின் அடி­யார்கள் எத்­த­கைய பண்பு கொண்­ட­வர்கள் என்­பதை ஆரம்­பித்து 12 பண்­பு­க­ளையும் தெளி­வு­ப­டுத்­து­கிறான். அவை­களை பின்­வ­ரு­மாறு சுருக்­க­மாக நோக்­குவோம்.

* பணிவு.

* வீணர்­க­ளுடன் வீண்­சண்டை புரி­யாது. (புத்தி சாதுர்­ய­மாக) நடத்தல்

* இரவில் இறை­வனை நின்று வணங்­குதல்.

* நர­கத்தில் விழா­தி­ருக்க அவனை அஞ்­சுதல்.

* வீண்­வி­ர­யத்­தையும், உலோ­பித்­த­னத்­தையும் விட்­டு­விடல்.

* இணை­வைப்பை விட்டும் வில­கி­யி­ருத்தல்.

* கொலை செய்­வ­தி­லி­ருந்து தவிர்ந்­தி­ருத்தல்.

* விப­சா­ரத்தை விட்டு வில­கி­யி­ருத்தல்.

* பாவ­மன்­னிப்பு கேட்டல்.

* பொய்யை தவிர்ந்­தி­ருத்தல்.

* உப­தேசம், உபன்­னி­யாசம் கேட்டு ஏற்­றுக்­கொள்ளல்.

* கெஞ்சி, பணிந்து இறை­வனை அழைத்தல்.

இறைவன் இளம் நபித்­தோ­ழர்­களை பொருந்திக் கொண்டான். நபித்­தோ­ழர்­களும் அவனை பொருந்திக் கொண்­டார்கள்.

நபி(ஸல்) அவர்­களின் அர­வ­ணைப்பில் வாழ்ந்து வளர்ந்த ஸஹா­பாக்­களில் அதி­க­மானோர் இளை­ஞர்­க­ளா­கத்தான் இருந்­தார்கள். இஸ்லாம் மேலோங்க ஸஹா­பாக்­களின் பங்கு அளப்­ப­ரி­யது. சொல்­லொணாத் துய­ரங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய கட்­டங்கள் உரு­வா­கின. இதனால் தான் இறைவன் பின்­வ­ரு­மாறு கூறு­கிறான்.

அல்லாஹ் ஸஹா­பாக்­களை பொருந்திக் கொண்டான். ஸஹா­பாக்­களும் இறை­வனை பொருந்திக் கொண்­டார்கள்.

01. அல்­லாஹ்வை நாம் திக்ரு செய்தல், ஞாப­க­மூட்டல்.

02. நபி(ஸல்) அவர்­களை நேசித்தல்.

03. அல்­லாஹ்வின் பொருத்­தத்தை நாடி அமல் செய்தல்.

இம்­மூன்று விட­யங்­க­ளையும் சிந்­தனை செய்து பாருங்கள்! ஒரு பக்கம் இவை­களை இறை­வ­னுக்­காக மாத்­திரம் செய்­கிறோம். ஆனால், மறு­பக்கம் இருக்­கி­றது. அதுதான் அல்லாஹ் எங்­களை ஞாப­க­மூட்­டு­கி­றானா? என்­பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இறைவன் எம்மை விண்­ணு­லகில் (திக்ரு) ஞாபகம் செய்ய வேண்டும்!
இறை­வனை நாம் மண்­ணு­லகில் ஞாபகம் செய்தால், அவன் எம்மை விண்­ணு­லகில் ஞாபகம் செய்வான்.   இறைவன் இறை வேதத்தில் இப்­படி கூறு­கிறா.ன் ஆகவே, நீங்கள் என்னை நினை­வு­கூ­ருங்கள்; நானும் உங்­களை நினைவு கூருவேன். இன்னும்,நீங்கள் எனக்கு நன்றி செலுத்­துங்கள்; எனக்கு மாறு செய்­யா­தீர்கள். (2:152)

(நபியே!) இவ்­வே­தத்­தி­லி­ருந்து உமக்கு அறி­விக்­கப்­பட்­டதை நீர் எடுத்­தோ­து­வீ­ராக. இன்னும் தொழு­கையை நிலை­நி­றுத்­து­வீ­ராக. நிச்­ச­ய­மாக தொழுகை (மனி­தரை) மானக்­கே­டா­ன­வற்­றையும் தீமை­யையும் விட்டும் விலக்கும். நிச்­ச­ய­மாக, அல்­லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்­தியா)கும்; அன்­றியும் அல்லாஹ் நீங்கள் செய்­ப­வற்றை நன்­க­றி­கிறான். 29:45.

இத்­தி­ரு­வ­ச­னங்­களைப் பார்க்­கும்­போது அல்­லாஹ்வை திக்ரு செய்­வது எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­ன­தென்­பது தெளி­வா­கி­றது. ஆகவே, வாலி­பர்கள் மாத்­தி­ர­மல்­லாமல் அனை­வரும் இறை சிந்­த­னை­யுடன் காலத்தைக் கழிப்­பது, காலத்தின் தேவை­யாகும். எமது நாமம் அடிக்­கடி இறை­வ­னிடம் பிரஸ்­தா­பிக்­கப்­பட வேண்டும். வான­வர்கள் எங்­களை பற்றி பேச வேண்டும்.

நபி (ஸல்) அவர்­களின்  நேசத்­திற்கு நாம் தகு­தி­யா­ன­வர்­களா…?

நபி (ஸல்) அவர்­களின்  திரு­நாமம் கேட்டால் ஸலவாத் சொல்­கின்றோம். அவர்­களை புகழ்­மாலை பாடு­கின்றோம்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் என்னை  நேசிப்­பார்­களா? அவ­ரால் நான் நேசிக்­கப்­பட தகு­தி­யா­ன­வனா? என்னைக் கண்டால் என்ன சொல்­வார்கள்? முடிவு செய்­யுங்கள்!

அபூ யஸீத் (ரஹ்)  அவர்கள் ஒரு தாபிஈ ஆவார்கள். அதா­வது, ஸஹா­பாக்­களை கண்­டவர், நபி (ஸல்) அவர்கள் உயி­ருடன் இருக்­கும்­போது பிறந்து விட்­டார்கள். ஆனால் நபி­ய­வர்­களைப் பார்க்கக் கிடைக்­க­வில்லை; ஒரு­முறை மஸ்­ஜிதுன் நப­விக்கு  வருகை தந்­த­போது, அப்­துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அபூ யஸீத் ரஹ் அவர்­களை அழைத்து உங்­களை நபி (ஸல்) அவர்கள் பார்த்­தி­ருந்தால், நேசித்­தி­ருப்­பார்கள்.

அப்­துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள்   27 வருடம் நபியின் அர­வ­ணைப்பில் இருந்­த­வர்கள். இங்கே இச்­சம்­பவம் உணர்த்­து­வது, நபி மீது அவர் கொண்­டுள்ள உண்மை நேசத்­தை­யாகும்,

இறைவன் எங்­களைப் பொருந்­திக்­கொள்ள வேண்டும்

நாம் இறை­வனை பொருந்­தி­விட்டோம். அவன் எம்மை பொருந்­தி­விட்­டானா? நான் செய்யும் எந்த வணக்­கத்தை இறைவன் ஏற்­றுக்­கொள்வான்? எமது வெளித்­தோற்­றத்தை வைத்து முடிவு செய்ய முடி­யுமா? நான் உண்­மை­யிலே நல்­ல­வனா? கெட்­ட­வனா? இந்தக் கேள்­வி­க­ளுக்கு யாரி­டமும் பதிலை எதிர்­பார்க்­கா­தீர்கள்! நீங்­களே முடிவு செய்­யுங்கள்!

உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தனது ஜும்ஆ உரையில் இப்­படிக் கூறி­னார்கள்: நீங்கள் மறு­மையில் விசா­ரிக்­கப்­பட  முன் நீங்­களே உங்­களை சுய­வி­சா­ரணை செய்து கொள்ளுங்கள்.! நீங்களே உங்கள் நன்மைகள், தீமைகளின் கனத்தை – பாரத்தை நிறுவை செய்யுங் கள்.! (நூல்: முஹாஸபதுன்னப்ஸ்)
எனவே, நாங்கள் செய்கின்ற வணக்க வழிபாடுகள் எங்களுக்குத்தான் நன்கு தெரியும் எங்களை இறைவன் பொருந்திவிட்டானா என நாங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

பின்வரும் மூவரில் நான் யாராக இருக்கிறேன்?

* முஃமின் அல்லாஹ்வை ஏற்று அவனால் தவிர்க்கப்பட்டதை தவிர்ந்து நடப்பவன். அவனது சொல்லும், செயலும் ஒன்றாகத்தான் இருக்கும்.

* முனாபிக்– நயவஞ்சகன் : அல்லாஹ்வை உள்ளபடி அஞ்சி பயந்து நடக்க மாட்டான். அவன் செய்யும் வணக்கம் பெரும் நடிப்பாகும். அவனது சொல்லும், செயலும் ஒன்றுக்கொன்று முரண்படும்.

* (காபிர்) – இறை நிராகரிப்பாளர்: அல்லாஹ்வை முற்று முழுதாக நிராகரிப்பவன். அவன் கட்டளைகளுக்கு மாறு செய்பவன். அவனது சொல்லும் செயலும் மறுப்பில் ஒன்றுபடும்.

நாம் மேல் கூறிய எவராகவும் இருக்க முடியும். இப்போதே முடிவு செய்யுங்கள்! நான் ஒரு நல்ல இறை பக்தியுள்ள வாலிபனாக மாற வேண்டும். எனது பெற்றோருக்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கின்ற நல்ல மனிதனாக வாழ்ந்து மரணிக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.-Vidivelli

  • தொகுப்பு: அஷ்ஷெய்க் ஐய்யூப் அப்துல் வாஜித் (இன்ஆமீ)

Leave A Reply

Your email address will not be published.