பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் சர்ச்சைக்குரிய சிபாரிசுகள்

0 170

நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பாக மேற்­பார்வை செய்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கும் பரிந்­து­ரை­களை முன்­வைப்­ப­தற்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மலிக் ஜய­தி­லக தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அக்­குழு தனது அறிக்­கையை கடந்த 19 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­துக்குச் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வைக் குழுவின் அறிக்­கையும் பரிந்­து­ரை­களும் முஸ்லிம் சமூ­கத்தின் மீதான கடு­மை­யான விதி­களைக் கொண்­ட­தாக அமைந்­துள்­ளன. முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிகாப் போன்ற ஆடைகள் தடை­செய்­யப்­பட வேண்­டு­மென பரிந்­துரை செய்­துள்­ள­துடன் இந்த ஆடை­களை அணிந்­தி­ருப்போர் அவற்றை அகற்­றா­விட்டால் அவர்­களை பிடி­யா­ணை­யின்றி கைது செய்யும் அதி­காரம் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட்­டுள்­ளது. இதுபோன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய சிபாரிசுகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புர்கா, நிகாப் போன்ற ஆடை­களைப் குறிப்­பிட்டு தடை­செய்­வது ஓரி­னத்தைச் சுட்­டிக்­காட்­டு­வ­தாக இருப்­ப­தனால் அப்­பெ­யர்­களைக் குறிப்­பி­டு­வ­தற்குப் பதி­லாக ஒரு­வரின் முகத்தின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­ளாத மற்றும் சிர­ம­மான முக மறைப்­புக்கள், தலைக் கவ­சங்­களை தடை­செய்ய வேண்­டு­மென தேசிய பாது­காப்பு தொடர்­பான துறைசார் மேற்­பார்­வைக்­குழு தனது பரிந்­து­ரையில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்த புது­மா­தி­ரி­யான அரே­பிய ஆடை­க­ளுக்கு பெரும்­பான்மை சமூ­கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. இந்த ஆடை­க­ளுக்கு வெளி­நா­டுகள் பலவும் தடை விதித்­துள்­ள­தையும் நாம் கவ­னத்தில் கொண்­டுள்ளோம் எனவும் அவ் அறிக்கை தெரி­விக்­கி­றது.

முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கு உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அமு­லுக்கு வந்த அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழேயே தடை­வி­திக்­கப்­பட்­டது. அவ­சர கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் அத்­த­டையும் நீங்­கி­யது. முஸ்லிம் பெண்­களின் முகத்தை மறைப்­பது நாட்டின் பொது­வான சட்­டத்தின் கீழ் தடை செய்­வ­தற்கு சட்டம் வகுக்­கப்­ப­ட­வேண்டும் என இன­வா­தி­க­ளினால் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டதை அடுத்து கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் ‘முகத்தை மறைத்­தலை தடை­செய்தல்’ என்ற தலைப்பில் அப்­போ­தைய நீதி மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­வினால் அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்றும் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்­சர்கள் வெளி­யிட்ட எதிர்ப்­பினால் அதற்கு அங்­கீ­காரம் கிடைக்­க­வில்லை.

தற்­போ­தைய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் அமைச்சர் எவரும் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் முஸ்லிம் சமூகம் சார்ந்த இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு சுமு­க­மாக தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்றே கருத வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான நிலை­யி­லேயே தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற மேற்­பார்­வைக்­குழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதான பல அழுத்­த­மான பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ளது. இக் குழுவில் இரு முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கம் வகிக்கின்றபோதிலும் அவர்களது சம்மதத்துடன்தான் இந்த சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டனவா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.

இதிலுள்ள பல பரிந்­து­ரைகள் முஸ்லிம் சமூ­கத்தை ஓர் இறுக்­க­மான கட்­ட­மைப்­புக்குள் உட்­ப­டுத்தும் வகையிலேயே முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன. 16 வயது பூர்த்­தி­யா­ன­வர்­களே மத்­ரஸா கல்­வியில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும். இன, மத, மற்றும் சமு­தாய அடை­யா­ளங்­களை வெளிப்­ப­டுத்­து­கிற பெயர்­க­ளுடன் கூடிய பாட­சா­லை­களின் பெயர்கள் மாற்­றப்­ப­ட­வேண்டும்.

அத்­தோடு பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெறும் அனைத்து பிர­சா­ரங்­க­ளையும் ஒலிப்­ப­திவு செய்­ய­வேண்டும். முஸ்­லிம்­களின் இன விகி­தா­சா­ரத்­திற்கு அமைய பள்­ளி­வா­சல்­களின் எண்­ணிக்கை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் முஸ்­லிம்­களின் மத விவ­கா­ரங்கள் சவா­லுக்­குட்­ப­டுத்தப் பட்­டுள்­ளதை உண­ர­மு­டி­கி­றது. பள்­ளி­வா­சல்கள் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வற்­கா­கவும் மத்­ர­ஸாக்கள் சமயக் கல்­வியைப் போதிப்­ப­தற்­கா­க­வுமே நிறு­வப்­ப­டு­கின்­றன என்பதை அராசங்கம் உணர்ந்து கொள்ளவேண்டும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தான் பதவியேற்றபோது ஆற்றிய கன்னி உரையில் அனைவருக்கும் மத சுதந்திரம், கலாசார சுதந்திரம் வழங்கப்படுமென உறுதியளித்திருந்தார். இவ்வாறான நிலையில் அரசினால் நிறுவப்படும் குழுக்கள் கூட இனவாத செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றமையை அனுமதிக்க முடியாது.

இவ்விகாரங்களில் ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு உரிய தீர்வுகளை முன்வைக்கவேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.