தேசிய அபிவிருத்திக்கு பங்காற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

0 103

இற்­றைக்கு சுமார் இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு முன்பு இலங்­கை­யர்­க­ளா­கிய நாம் உலகில் ஏனைய நாடு­களின் வீதி அபி­வி­ருத்தி தொடர்­பாக ஆச்­ச­ரி­யப்­பட்டோம். இவற்றில் மேம்­பா­லங்கள் மற்றும் அதி­வேக நெடுஞ்­சா­லைகள் என்­பன நம்­ம­வர்க்குப் பார்த்து இர­சிப்­ப­தற்­கா­கவே இருந்­தன. நாம் தூரப் பிர­தே­சங்­க­ளுக்கு பய­ணங்­களை மேற்­கொள்­ளும்­போது நமக்கும் இவ்­வா­றான சொகு­சான பாதை­களில் இல­குவில் சென்று வரக்­கூ­டி­ய­தாக இருந்தால் எவ்­வ­ளவு சுல­ப­மா­கவும் வச­தி­யா­கவும் இருந்­தி­ருக்கும் என்று கரு­திய தட­வைகள் ஏராளம்.

இந்தக் கனவை நன­வாக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் இலங்­கையின் போக்­கு­வ­ரத்து துறையில் புதி­யதோர் அத்­தி­யா­யத்தை தோற்­று­விக்கும் வகையில் கொழும்­பி­லி­ருந்து கட்­டு­நா­யக்க வரை­யி­லான அதி­வேக நெடுஞ்­சா­லையை நிர்­மா­ணிப்­ப­தற்குத் திட்­ட­மி­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது. இதன்­போது நகர்ப்­பு­றங்­களில் வாழும் மக்கள் இத்­திட்­டத்­திற்கு தமது காணி­களை வழங்­கு­வ­தற்கு ஆரம்­பத்தில் தயக்­கத்­தையும் எதிர்ப்­பையும் வெளிப்­ப­டுத்­தினர். இதனால் முத­லா­வது அதி­வேக நெடுஞ்­சாலை பணிகள் ஆரம்­பத்­தி­லி­ருந்தே ஸ்தம்­பி­த­ம­டைந்­தன.

இருந்­தாலும், அதி­வேக நெடுஞ்­சா­லை­களை நிர்­மா­ணித்து நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் திட்­டத்தில் உறு­தி­யா­க­வி­ருந்த அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம், இலங்­கையின் வர­லாற்­றிலும் போக்­கு­வ­ரத்துத் துறையின் வர­லாற்­றிலும் புதி­யதோர் அத்­தி­யா­யத்தை ஆரம்­பிக்கும் வகையில் 2006 ஆம் ஆண்டு கொட்­டா­வை­யி­லி­ருந்து மாத்­தறை வரை­யி­லான தெற்கு அதி­வேக நெடுஞ்­சாலை நிர்­மாணப் பணி­களை முன்­னெ­டுத்­தது.

உலகில் அதி­வேக நெடுஞ்­சாலை நிர்­மாணப் பணிகள் வர­லாற்றில் 1922 வரை­யி­லான காலப்­ப­குதி வரை நீண்டு செல்­வ­தோடு, உலகின் முத­லா­வது அதி­வேக நெடுஞ்­சாலை நிர்­மாணப் பணிகள் இத்­தா­லியில் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இலங்­கையில் 2006 ஆம் ஆண்டு வர­லாற்றில் புதி­யதோர் அத்­தி­யா­யத்தை தோற்­று­விக்கும் வகையில் கொட்­டா­வை­யி­லி­ருந்து மாத்­தறை வரை­யி­லான தெற்கு அதி­வேக நெடுஞ்­சா­லையின் முதற்­கட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 126 கிலோ மீற்­றர்­களை கொண்ட இப்­பா­தையின் நிர்­மாணப் பணிகள் இரண்டு கட்­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன. 2011 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முதற் பகுதி கொட்­டா­வை­யி­லி­ருந்து காலி வரை­யி­லான பகுதி மக்கள் பாவ­னைக்­காகத் திறந்து விடப்­பட்­டது. காலி­யி­லி­ருந்து மாத்­தறை வரை­யி­லான இரண்­டா­வது கட்டம் 2014 மார்ச் மாதம் 15 ஆம் திகதி மக்கள் பாவ­னைக்­காகத் திறந்து விடப்­பட்­டது.

தெற்கு அதி­வேக நெடு­ஞ்­சாலை திட்­டத்­திற்­கேற்ப இப்­பாதை தொடர்­பாக மக்­களின் எதிர்­பார்ப்பு அதி­க­ரித்த வண்ணம் இருந்­த­தோடு, நாளாந்தம் இப்­பா­தையைப் பயன்­ப­டுத்­துவோர் தொகையும் அதி­க­ரித்து காணப்­பட்­டது.

இதனால் தென் பிராந்­தி­யத்­திற்கு மாத்­திரம் உரித்­தான இந்த அதி­வேக நெடுஞ்­சாலை திட்­டத்தை நாடு பூராவும் விஸ்­த­ரிக்­கு­மாறு அர­சாங்­கத்­திடம் மக்கள் வேண்­டுகோள் விடுத்­தனர். இத­ன­டிப்­ப­டையில் கொழும்­பி­லி­ருந்து கட்­டு­நா­யக்க வரை மற்றும் கொழும்­பி­லி­ருந்து கண்டி வரை­யி­லான அதி­வேக நெடுஞ்­சாலை திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தது.

கொழும்­பி­லி­ருந்து மாத்­தறை வரை­யி­லான கரை­யோர பிர­தான பாதை­யி­னூ­டாக பிர­யா­ணத்தை மேற்­கொண்ட ஒரு­வ­ருக்கு ஐந்து மணித்­தி­யா­லங்கள் அல்­லது அதற்கு கூடுதல் நேரம் சென்­ற­தோடு, அதி­வேக நெடுஞ்­சா­லையில் பய­ணிக்கும் ஒரு­வ­ருக்கு அதை ஒன்­றரை மணி நேரத்தில் கடக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இதனால் அதி­க­மானோர் அதி­வேக நெடுஞ்­சா­லையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வந்­தனர். இதனால் இவர்­களின் நேரம் சேமிக்­கப்­பட்­டது. அர­சாங்­கத்­திற்கு வரு­மா­னமும் கிடைத்த வண்­ண­மி­ருந்­தது.

றுஹுணு பிர­தேச மக்கள் மாத்­த­றை­யி­லி­ருந்து வெளி­யேறி கதிர்­காமம் வரை பழைய பாதை­க­ளையே பயன்­ப­டுத்தி வந்­தனர். இதனால் இவர்கள் இந்த தூரத்தைப் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே மேற்­கொண்டு வந்­தனர்.

இதனால் இந்த சிர­மங்­களை போக்கும் வண்ணம் மாத்­தறை வரை நீடிக்­க­ப்பட்ட இப்­பாதை ஹம்­பாந்­தோட்டை வரை நீடிக்­காதா என்ற ஏக்­கத்­தி­லி­ருந்து வந்­தனர்.

இவர்­களின் தேவையை அறிந்த அர­சாங்கம் நாட்டு மக்­களின் தேவைக்கு முன்­னு­ரிமை வழங்கி ருஹுணு மாகம் பிர­தேச மக்­களின் மத்­தளை வரையில் அதி­வேக நெடுஞ்­சா­லையில் பய­ணிக்கும் கனவை நன­வா­கி­யுள்­ளது. மாத்­தறை – மத்­தளை அதி­வேக நெடுஞ்­சா­லையின் நிர்­மாணப் பணிகள் 2015 ஜுலை மாதம் 04 ஆம் திகதி ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. 96 கிலோ மீற்றர் நீளத்தை கொண்ட இந்தப் பாதையின் அகலம் 24.4 மீற்­றர்­க­ளாகும். நான்கு லேன்­களை கொண்டு இப் பாதை நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. கொட்­டா­வை­யி­லி­ருந்து மாத்­தறை வரை­யி­லான அதி­வேக நெடுஞ்­சாலை நிர்­மா­ணத்தின் போது காணப்­பட்ட குறை­பா­டு­களை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய தொழி­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி சூழல் பேணும் திட்­ட­மாக நிர்­மா­ணிக்­க­ப்பட்டுள்ளமை விசேட அம்­ச­மாகும்.

தெற்கு அதி­வேக நெடுஞ்­சா­லையின் பின்பும் இப்பாதை நிர்­மா­ணத்தின் போதும் பல்­வேறு எதிர்ப்­புக்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்­பட்­ட­தோடு இவை அனைத்­திற்கும் தீர்வைப் பெற்றுக் கொடுத்து இப்­பாதை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது. விசே­ட­மாக இப் பாதை நிர்­மா­ணத்தின் போது சுற்­றாடல் பேணல் மற்றும் சுற்­றாடல் பாது­காப்பு தொடர்­பாக விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இத்­தோடு இத­னூ­டாக நில்­வளா கங்கை பெருக்­கெ­டுப்­ப­தினால் ஏற்­படும் வெள்ள நிலை­க­ளி­லி­ருந்து தாழ்­வான பிர­தே­சங்­களை பாது­காக்கும் வகையில் இப்பாதை நிர்­மா­ணிக்­க­ப்பட்­டுள்­ளது. பாதையின் இரு­ம­ருங்­கி­லு­முள்ள காடுகள், வயல் நிலங்கள், நீர் ஊற்­றுக்கள் போன்­ற­வற்­றிற்கு எவ்­வித பாதிப்­புக்­களும் ஏற்­ப­டாத வகையில் இவற்றை பாது­காத்து இப்­பா­தையில் பய­ணிக்கும் மக்­க­ளுக்கு இயற்­கையை இர­சிக்­கக்­கூ­டிய வகையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளதும் விசேட அம்­ச­மாகும்
மாத்த­றை­யி­லி­ருந்து மத்­தளை வரை­யி­லான அதி­வேக நெடுஞ்­சாலை நிர்­மா­ணத்­திற்­கென 252.5 மில்­லியன் ரூபா மதிப்­பி­டப்­பட்­ட­தோடு இதனை சீன நாட்டு எக்ஸிம் வங்கி இரண்டு சத­வீத சலுகை வட்டி அடிப்­ப­டையில் கட­னாக வழங்­கி­யது. இது நான்கு கட்­டங்­க­ளாக முன்­னெ­டுக்­க­ப்பட்டு நிறைவு செய்­யப்­பட்டுள்­ளது. முதல் கட்­டத்தில் மாத்­த­றை­யி­லி­ருந்து பெலி­யத்தை வரை 30 கிலோ மீற்­றர்­களும், பெலி­யத்­தை­யிலி­ருந்து வெடிய வரை­யி­லான 26 கிலோ மீற்­றர்கள் இரண்­டா­வது கட்­ட­மா­கவும், வெடி­ய­வி­லி­ருந்து அந்­த­ர­வெவ வரை­யி­லான 15 கிலோ மீற்­றர்கள் மூன்­றா­வ­து கட்­ட­மா­கவும் அந்­த­ர­வெ­வ­வி­லி­ருந்து ஹம்­பாந்­தோட்­டை­யி­னூ­டாக மத்­தளை வரையில் நான்­கா­வது கட்­ட­மா­கவும் 25 கிலோ மீற்­றர்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள அதி­வேக நெடுஞ்­சா­லைக்­கி­டையில் பரி­மாற்ற நிலை­ய­மாக திகழும் அந்­த­ர­வெவ பரி­மாற்ற நிலையம் இலங்­கையில் எமக்குப் புதி­யதோர் அனு­ப­வத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. சீன தேசிய இரோ டெக்­னொ­லொஜி சர்­வ­தேச பொரு­ளியல் கூட்­டுத்­தா­ப­னம், சீன அரச நிர்­மாணக் கம்­பனி மற்றும் சீன துறை­முக கம்­பனி ஆகிய கம்­ப­னிகள் நிர்­மா­ணத்தை மேற் கொண்­ட­தோடு இலங்கை வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சு என்­ப­ன­வற்றின் மேற்­பார்­வையின் கீழ் நிர்­மாணப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

நில்­வளா கங்­கைக்கு மேலால் பய­ணிப்­ப­தற்கு அதன் தாக்­கத்தைக் கருத்­திற்­கொண்டு 10 கிலோ மீற்­றர்­களை கொண்ட தூரம் பாலங்­க­ளி­னூ­டாக மேலால் செல்லக் கூடிய வகையில் நிர்­மா­ணிக்­க­ப்பட்­டுள்­ளது. இது­போன்றே வளவை கங்­கைக்கு குறுக்­காக பெதி­கம்­தொட பிர­தே­சத்தில் 600 மீற்றர் நீளம் கொண்ட ஒரு பாலமும் நிர்­மா­ணிக்­க­ப்பட்­டுள்­ளது. சிறு பாதை­க­ளுக்கு செல்­வ­தற்­காக அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு மேலால் ஏழு பாலங்­களும் கீழால் முப்­பது பாலங்­களும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. அத்­தோடு விவ­சாய நிலங்­க­ளுக்கும், வயல்­க­ளுக்கும், நக­ரங்­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்­பு­க­ளுக்கு எவ்­வித பாதிப்­புக்­களும் ஏற்­ப­டா­த­வாறு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­மையும் விசேட அம்­ச­மாகும்.
ஹம்­பாந்­தோட்­டையில் யானைகள் அதி­க­ரித்து காணப்­ப­டு­வதால் யானை­க­ளுக்கும் பய­ணி­க­ளுக்கும் எவ்­வித பாதிப்­புக்­களும் ஏற்­ப­டா­த­வி­தத்தில் பஹல அந்­த­ர­வெவ பிர­தே­சத்தில் இரண்டு இடங்­களில் யானைகள் மாறு­வ­தற்கு இடம் ஒதுக்­கப்­பட்டு இப்­பி­ர­தே­சங்­க­ளி­னூ­டாக மேம் பாலங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு பய­ணி­க­ளுக்கு புதி­யதோர் பயண அனு­பவம் ஏற்­படும் விதத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் யானை­க­ளுக்கு எவ்­வித தடை­க­ளு­மின்றி பழைய விதத்தில் பய­ணத்தை மேற் கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்டத­னூ­டாக மிரு­கங்­க­ளி­னது செயற்­பா­டு­க­ளுக்கு எவ்­வித பாதிப்­புக்­களும் ஏற்­ப­டு­வ­தில்லை.

யானைகள் அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு நுழை­வதைத் தடுப்­ப­தற்­காக அதி­சக்­தி­வாய்ந்த மின்­சார வேலிகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு பாதையின் இரு பகு­தி­க­ளிலும் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தெற்கு அதி­வேக நெடுஞ்­சா­லையின் மாத்­தறை கொட­க­ம­வி­லிருந்து ஹம்­பாந்­தோட்­டை­யி­னூ­டாக மத்­தளை வரை எட்டுப் பரி­மாற்று நிலை­யங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

கொட­கம, அப­ரெக்க, பெலி­யத்தை, கசா­கலை, அங்­கு­னு­கொ­ல­பெ­லஸ்ஸ, வெடிய, சூரி­ய­வெவ மற்றும் அந்­த­ர­வெவ ஆகி­யன இவை­யாகும். இத்­தோடு சர்­வ­தேச தரத்­தி­லான சேவை நிலை­யமும் பெலி­யத்தை பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. சார­தி­க­ளுக்­காக ஓய்­வெ­டுக்கும் இரண்டு ஓய்வு நிலை­யங்­களும் இப் பாதையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

இப்­பாதை நிர்­மா­ணத்­தி­னூ­டாக கொழும்­பி­லி­ருந்து கதிர்­கா­மத்­திற்கு மூன்­றரை மணித்­தி­யா­லங்­களில் செல்ல முடி­யு­ம் இத்­தோடு கொட்­டா­வை­யி­லி­ருந்து ஹம்­பாந்­தோட்டை – மத்­தளை வரை­யி­லான 222 கிலோ மீற்­றர்­க­ளையும் இரண்­டரை மணித்­தி­யா­லங்­களில் செல்லக் கூடி­ய­தாக உள்­ளது. மத்­தளை சர்­வ­தேச விமான நிலைய பாதை­யி­னூ­டாக லுனு­கம்­வெ­ஹெ­ரைக்கு வருகை தந்து அங்­கி­ருந்து லுனு­கம்­வெ­ஹெரை நீர்த்­தேக்­கத்­திற்கு கீழால் நான்கு லேன்­களை கொண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள புதிய பாதை­யி­னூ­டாக கதிர்­காமம் கம்­உ­தாவ பிர­தே­சத்­திற்கு ஒரு மணித்­தி­யாலயத்­திற்கும் குறைந்த நேரத்தில் செல்லக் கூடி­ய­தாக உள்­ளது. இத­னூ­டாக கொழும்­பி­லி­ருந்து சொந்த வாக­னத்தில் கதிர்­கா­மத்தை வழி­பட வரு­வோ­ருக்கு மூன்­றரை மணித்­தி­யா­லங்­களில் கதிர்­கா­மத்­திற்கு வருகை தந்து வழி­பா­டு­களில் ஈடு­பட்டு மாலையில் வீடு திரும்­பு­வ­தற்­கான வசதி தற்­பொ­ழுது ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இத்­தோடு யால தேசிய சர­ணா­லயம், பூந்­தலை பற­வைகள் சர­ணா­லயம், உட­வ­ளவை யானைகள் சர­ணா­லயம், ரன்­மி­ஹி­தென்ன லெரி­சி­னிமா கிராமம் ஆகி­ய­வற்­றிற்கும் இல­குவில் சென்று வரு­வ­தற்­கான சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இவற்­றோடு மத்­தளை சர்­வ­தேச விமான நிலையம், ஹம்­பாந்­தோட்டை ராஜபக் ஷ சர்­வ­தேச துறை­முகம், உலர் வலய தாவரப் பூங்கா, ரிதி­ய­கம மிரு­கங்கள் சபாரி, சூரி­ய­வெவ சர்­வ­தேச விளை­யாட்டு மைதானம் ஆகி­ய­வற்­றிற்கும் இல­குவில் சுற்­று­லாவை மேற் கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மேற்­பட்­டுள்­ள­தோடு, தென் பிராந்­திய சுற்­று­லாத்­து­றையின் புதி­யதோர் திருப்பு முனையாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

இவற்றோடு பிரதேச விவசாயிகளுக்கும் தமது விவசாய உற்பத்திகளை தலைநகருக்கும் நாட்டின் ஏனைய பிரதேச சந்தைகளுக்கும் எடுத்துச்சென்று புதிய சந்தை வாய்ப்புக்களை பெறவும் வாய்ப்பாக அமைந்து காணப்படுவதோடு அரச அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இரண்டரை மணி நேரத்திற்குள் தலைநகருக்கு சென்று தனது அலுவல்களை கவனித்து திரும்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அம்பாறை, பதுளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களும் இதனூடாகப் பயன் பெறவுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இப்பாதையின் நிர்மாணப் பணிகள் ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தமையால் மக்கள் அதிருப்தியில் இருந்ததோடு புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மிகுதியாகவிருந்த நிர்மாணப் பணிகள் துரித வேகத்தில் நிறைவு செய்யப்பட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான பகுதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரினால் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டதினூடாக, அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தில் மற்றுமொரு புதிய அத்தியாயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

  • எம்.இஸட்.எம். இர்பான் ஸகரியா

Leave A Reply

Your email address will not be published.