ஜெனீவா அமர்வு நீதியை பெற்றுத் தர வேண்டும்

0 143

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 43 ஆவது கூட்­டத்­தொடர் நேற்றுக் காலை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யது. நேற்று ஆரம்­ப­மா­கிய இக்­கூட்­டத்­தொடர் எதிர்­வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. கூட்­டத்­தொ­டரின் நிகழ்ச்சி நிரலின்படி இலங்கை தொடர்­பான விவாதம் எதிர்­வரும் 27 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது.

மனித உரி­மைகள் பேர­வையில் 2019 இல் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்­துக்கு வழங்­கிய இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து விலகப் போவ­தாக இலங்கை அர­சாங்கம் அறி­வித்­த­தை­ய­டுத்து இக்­கூட்­டத்­தொ­டரில் இலங்கை விவ­காரம் முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. இந்த அறி­விப்பை இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன நாளை புதன்­கி­ழமை காலை 10.00 மணிக்கு மனித உரி­மைகள் பேர­வையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வுள்ளார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மையில் கடந்த 17 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற முக்­கிய கலந்­து­ரை­யா­ட­லின்­போது இந்த கூட்­டத்­தொ­டரில் 2015 அக்­டோபர் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 மற்றும் 2019 மார்ச் மாதம் இலங்­கையின் இணை அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட 40/1 யோச­னை­க­ளி­லி­ருந்து இலங்கை வில­கு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து கடந்த புதன்­கி­ழமை வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன சமர்ப்­பித்த அமைச்­ச­ரவை தீர்­மா­னத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது. இத்­தீர்­மானம் கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்­திலும் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

2015 ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் 2 ஆம் திகதி ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்த பிரே­ரணை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­துக்குள் நிறை­வேற்­றப்­பட வேண்டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இப்­பி­ரே­ர­ணைக்கு அப்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­மையே அப்­போ­தைய சூழலில் திரும்­பு­மு­னை­யாக அமைந்­தது. அதற்கு முன்னர் நிறை­வேற்­றப்­பட்ட அனைத்துப் பிரே­ர­ணை­க­ளையும் பத­வி­யி­லி­ருந்த அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருந்­தது. இந்தப் பின்­ன­ணி­யி­லேயே 30/1 என்ற பிரே­ரணை முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது.

என்­றாலும் 2017 மார்ச் மாதம் வரையும் 30/1 என்ற பிரே­ரணை முழு­மை­யாக அமுல் நடத்­தப்­ப­ட­வில்லை. அதனால் 34/1 என்ற தலைப்பில் திருத்தப் பிரே­ரணை மீண்டும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டது. இப்­பி­ரே­ரணை 2019 மார்ச் மாதத்­துக்குள் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் இப்­பி­ரே­ரணை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. காணாமல் போனோர் அலு­வ­லகம் மட்­டுமே நிறு­வப்­பட்­டது. 34/1 என்ற தலைப்பில் மீள் புதுப்­பிக்­கப்­பட்ட ஜெனிவா பிரே­ரணை 2019 ஆம் ஆண்டு வரையில் அமுல்­ப­டுத்­தப்­ப­டா­மை­யினால் மீண்டும் 40/1 என்ற தலைப்பில் 2 வரு­டங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டது. இச் சூழ­லிலே இலங்கை அரசு பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இப்­பி­ரேணை மூலம் நீதி வழங்­கப்­படும் என சர்­வ­தேச சமூகம் எதிர்­பார்த்­தது. ஐக்­கிய நாடுகள் சபையில் நம்­பிக்கை வைத்­தது. ஆனால் நிலைமை மாற்றம் கண்­டு­விட்­டது. எந்­த­வொரு பரிந்­து­ரை­களும் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டாத சூழலில் பாதித்த மக்­களை ஏமாற்­றத்­துக்­குள்­ளாக்கி பிரே­ர­ணையி­லி­ருந்தும் வில­கு­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது.

கடந்த புதன்­கி­ழமை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் மிச்சல் பச்லெட் இலங்கை தொடர்­பான அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார். ‘அமை­தி­யான சமூ­கத்தை உரு­வாக்­கவும் அனைத்து மக்­க­ளுக்கும் நிரந்­தர முன்­னேற்­றத்தை வழங்­கவும் 30/1 என்ற ஐ.நா. பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும்’ என அவர் அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

‘மனித உரிமை காப்­பா­ளர்கள் மற்றும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எதி­ரான கண்­கா­ணிப்­புகள், சித்­தி­ர­வ­தைகள், பழி வாங்­கல்­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்கி அதற்குப் பதி­லாக சர்­வ­தேச தரத்­துக்கு அமை­வான சட்­டத்தை கொண்­டு­வர முடியும் எனவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­வேளை, அர­சாங்கம் இந்தப் பிரே­ர­ணை­யி­லி­ருந்தும் விலக முடி­யாது. உல­க­ளா­விய நிய­ம­னங்­களில் இலங்­கைக்கு பல பொறுப்­புகள் இருக்­கின்­றன. அவற்­றி­லி­ருந்தும் இலங்கை விலக வேண்டும். அவ்­வாறு வில­கினால் இலங்கை பாரிய சவால்­களை எதிர்­நோக்கும் இலங்கை சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு இணைந்து செயற்­பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்­தி­ருக்­கிறார்.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் இம்மக்களுக்கான நீதியை நிலை நிறுத்த வேண்டும். அனைத்து மக்களும் சமமாக கருதப்படுவார்கள் என்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் உறுதி வெறும் வார்த்தைகளாக மாறி விடக்கூடாது.

இது விடயத்தில் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகம் என்பன பொறுப்புடன் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.