ரவூப் ஹக்­கீ­மின் கூற்­றில் உண்­­மை­யில்­­லை: ம.வி.மு.

0 689

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட கட்­சி­க­ளுடன் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் கூட்டுச் சேர்ந்து எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் களம் இறங்­க­வுள்­ள­தாக ரவூப் ஹக்கீம் கூறி­யுள்ள கூற்றில் எந்­த­வித உண்­மை­யு­மில்லை என்று மக்கள் விடு­தலை முன்­னணி வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது.

‘உண்­மைக்குப் புறம்­பான தகவல் ஒன்­றுக்­கான தெளி­வு­ப­டுத்தல்’ எனும் தலைப்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஊடகப் பிரிவு வெளி­யிட்­டுள்ள அந்த அறிக்­கையில்,

கடந்த 23 ஆம் திகதி கண்­டியில் இடம்­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மாநாட்டின் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் உரை­யாற்­றி­ய­தாகத் தெரி­விக்கும் கருத்­துக்கள் பத்­தி­ரிகை, ஊட­கங்கள் மற்றும் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கி­யி­ருந்­தன.

அதில் ரவூப் ஹக்கீம் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில், மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ்­தே­சியக் கூட்­டணி மற்றும் சிவில் அமைப்­பு­க­ளுடன் கூட்டுச் சேர்ந்து போட்­டி­யி­டு­வது தொடர்­பாக தமது கட்சி கவனம் செலுத்தி வரு­கி­றது. இது தொடர்­பாக இப்­போது பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று அவர் தெரி­வித்­துள்ளார்.

இந்தச் செய்­தியில் எத்­த­கைய உண்­மை­யு­மில்லை. இது ரவூப் ஹக்­கீமின் தனிப்­பட்ட கருத்­தாகும். தமிழ் தேசிய கூட்­ட­ணி­யு­டனோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உடனோ கூட்­டி­ணைந்து போட்­டி­யி­டு­வது குறித்து எத்­த­கைய பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை என்­பதை மக்கள் விடு­தலை முன்­னணி கவ­னத்­திற்குக் கொண்டு வரு­கி­றது. அத்­துடன் மேற்­படி கட்­சி­க­ளுடன் தேர்­தல்­களில் கூட்­ட­ணி­யொன்றை ஏற்­ப­டுத்திக் கொள்ளும் நிலைப்­பாட்டில் மக்கள் விடு­தலை முன்­னணி இல்லை என்­ப­தையும் தெரி­வித்துக் கொள்­வ­துடன் மக்கள் விடு­தலை முன்னணி, அதனுடனுள்ள தேசிய மக்கள் சக்தி அமைப்புடன் இணைந்தே எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளது என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

  • ஏ.எல்.எம்.சத்தார்

Leave A Reply

Your email address will not be published.