உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்: சி.ஐ.டி. விசாரணைகளை துரிதப்படுத்த செயலணி

தேசிய உளவுத்துறை பிரதானியின் கீழ் கொண்டுவரத் திட்டம்; 6 பேர் உள்ளடக்கம்; வாராந்தம் பாதுகாப்பு செயலருக்கும் அறிக்கை

0 225

4/21 உயிர்த்த ஞாயிறன்று இலங்­கையில் இடம்பெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் குறித்து சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்­க­ளத்தின் கட்டுப்­பாட்டில் இடம்பெறும் விசா­ர­ணைகளின் முன்னேற்றத்தை ஆராயவும் அவ்­வி­சா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­தவும் விஷேட செய­ல­ணி­யொன்று உருவாக்­கப்­பட்­டுள்­ளது.

தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான உண்மைத் தக­வல்­களை அடை­யாளம் காணல், உண்மை தக­வல்­களை சேக­ரித்தல், புதிய தக­வல்கள், சாட்­சி­களை சேக­ரிப்­பதன் ஊடாக தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய அடிப்­ப­டை­வா­தி­களை சட்­டத்­தின்முன் நிறுத்­து­வதை நோக்­காகக் கொண்டு இந்த செய­லணி உரு­வாக்­கப்­பட்­ட­தாக பாது­காப்பு செயலர் மேஜர் ஜெனரால் கமல் குண­ரத்ன கூறினார்.

தேசிய உள­வுத்­துறை பிர­தானி மேஜர் ஜெனரல் ஜகத் அல்­விஸின் கீழ் உரு­வாக்­கப்­பட்­டுள்ள இந்த செய­ல­ணியில் 6 பேர் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். மேஜர் ஜெனரல் ஜகத் அல்­வி­ஸுக்கு மேல­தி­க­மாக இக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய ஐந்து பேரும் உள­வுத்­து­றை­களில் பிர­தான அதி­கா­ரி­க­ளாகத் திகழ்­ப­வர்­க­ளென பாது­காப்பு அமைச்சின் உய­ர­தி­காரி ஒருவர் குறிப்­பிட்டார். இந்த விஷேட செய­லணி, சி.ஐ.டி.யின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும் தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­களின் நிலை­மையை ஒவ்­வொரு வாரமும் பாது­காப்பு செயலர் மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்­ன­வுக்கு அறி­விக்­கு­மெ­னவும், சி.ஐ.டி.க்குத் தேவை­யான உள­வுத்­துறை ஒத்­து­ழைப்­பு­க­ளையும் அந்­தக்­குழு நேர­டி­யா­கவே வழங்­கு­மெ­னவும் அந்த அதி­காரி குறிப்­பிட்டார்.

கொழும்பு மற்றும் நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்கள் பதி­வா­கின. இந்த சம்­ப­வங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை விரை­வு­ப­டுத்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ வழங்­கிய ஆலோ­ச­னைக்­க­மைய இந்த விஷேட செய­லணி உரு­வாக்­கப்­பட்­டது’ என இந்த செய­லணி குறித்து பாது­காப்பு செயலர் மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பாது­காப்பு செயலர் மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன நேற்று விஷேட அறிக்­கை­யொன்றைப் பாது­காப்பு அமைச்சு ஊடாக வெளி­யிட்­டி­ருந்த நிலையில் அந்த அறிக்­கையில் பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டுள்­ளது.
‘கடந்த ஆட்­சி­யின்­போது இது­கு­றித்த விசா­ர­ணைகள், செயற்­றி­ற­னாக இடம்­பெ­ற­வில்லை. இந்த விட­யத்தில் நியா­ய­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க நாம் தவ­றினால், உயி­ரி­ழந்த, வாழ்நநாள் பூரா­கவும் அந்த தாக்­கத்தால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் 500 இற்கும் அதி­க­மான மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்­காது.

பாது­காப்பு அமைச்சின் கீழ் செயற்­படும் அனைத்து உளவுப் பிரி­வு­க­ளி­னதும் ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொண்டு, குறித்த தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான உண்மைத் தக­வல்­களை அடை­யாளம் காணல், உண்மைத் தக­வல்­களை சேக­ரித்தல், புதிய தக­வல்கள், சாட்­சி­களை சேக­ரிப்­பதன் ஊடாக தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய அடிப்­ப­டை­வா­தி­களை சட்­டத்­தின்முன் நிறுத்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ எமக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்’ என அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக கொழும்பு மற்றும் நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்கள் பதி­வா­கின. கரை­யோர பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வா­பிட்டி – புனித செபஸ்­தியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகி­யன தாக்­கு­த­லுக்­கி­லக்­கான கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளாகும்.

இத­னை­விட கொழும்பு காலி­முகத் திட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய மூன்று ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.

இந்­நி­லையில் அன்று பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதா­ரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்­டு­வெ­டிப்பு சம்­பவம் பதி­வா­னது. அதனைத் தொடர்ந்து பிற்­பகல் 2.15 மணி­ய­ளவில், குண்­டு­வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாகக் கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களை இலக்கு வைத்து தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்­கொலை குண்­டு­தா­ரி­யினால் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டது. அதன்­படி இந்த தக்­கு­தல்­களால் 30 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 278 பேர் கொல்­லப்பட்­ட­துடன், 27 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 594 பேர் காய­ம­டைந்­தனர்.

இந்­நி­லையில் இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் சி.ஐ.டியின் 12 சிறப்பு குழுக்­களும் சி.ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

அதன்­படி இம்­மூன்று பொலிஸ் பிரி­வு­க­ளாலும் கைது செய்­யப்­பட்ட இவ்­வி­வ­கா­ரத்தின் மொத்த சந்­தேக நபர்­களின் எண்­ணிக்கை 216 ஆகும். அவர்­களில் 70 பேர் தற்­போது பிணை­யி­லுள்ள நிலையில், 91 பேரிடம் தடுப்புக் காவலில் தொடர்ந்தும் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. ஏனைய 55 பேரும் நீதி­மன்­றங்­களில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்ப்ட்ட 216 பேரில் 109 பேரை சி.ஐ.டி. என­ப்படும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளமும், 78 பேரை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரும், 39 பேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் கைது செய்­தி­ருந்­தமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

இவ்­வா­றான பின்­ன­ணியில், குறித்த தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் விவ­காரம் தொடர்பில் விசா­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் ஐவர் கொண்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் தொடரும் நிலையில், அவ்­வி­சா­ர­ணை­களில் கத்­தோ­லிக்க மக்­க­ளுக்குத் திருப்­தி­யில்­லை­யெனக் கடந்த வாரம் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை அறி­வித்­தி­ருந்தார். அத்துடன், ‘சி.ஐ.டி. இது குறித்து விசாரிக்கின்றதா என தெரியாது. இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள், நிதி உதவி அளித்தவர்கள், அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தவர்கள், குறித்து உண்மையை நாம் அறிய வேண்டும்’ என கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே, எதிர்கால தேசிய பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டும், தற்கொலை தாக்குதல்கள் குறித்த பின்னணிகளை வெளிப்படுத்தவும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு உதவ இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.