அதிகரிக்கும் புற்றுநோய் தேவை விழிப்புணர்வு

0 563

இலங்­கையில் தினமும் 64 புதிய புற்று நோயா­ளர்கள் கண்­ட­றி­யப்­ப­டு­கின்ற அதே­வேளை தினமும் 38 பேர் புற்று நோயினால் மர­ணிப்­ப­தா­கவும் தேசிய புற்று நோய் கட்­டுப்­பாட்டு நிகழ்ச்­சித்­திட்­டத்தின் பணிப்­பாளர் டாக்டர் ஜானகி விதா­ன­பத்­தி­ரண தெரி­வித்­துள்ளார். இலங்­கையில் அதிக மர­ணங்கள் சம்­ப­விப்­ப­தற்­கான இரண்­டா­வது கார­ணி­யாக புற்று நோய் விளங்­கு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

தற்­ச­மயம் இலங்­கையில் மொத்­த­மாக 56054 புற்று நோயா­ளர்கள் உள்­ளனர். 2018 இல் மொத்­த­மாக 23530 புற்று நோயா­ளர்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­துடன் இவர்­களில் 14013 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என தேசிய புற்று நோய் கட்­டுப்­பாட்டு நிகழ்ச்­சித்­திட்­டத்தின் வைத்­திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரி­வித்­துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே இவ்­வி­ப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டன.

உண்மையில் இன்று முஸ்லிம் சமூகத்திலும் தினசரி புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பலர் மரணித்து வருவதை நாம் காண்கிறோம். அத்துடன் மேற்படி விகிதாசாரத்திற்கேற்ப முஸ்லிம் சமூகத்திலிருந்தும் பலர் தினமும் புதிய புற்று நோயாளர்களாக கண்டறியப்படுகின்றனர். நமது உணவுப் பழக்கமே இதற்கான பிரதான காரணம் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புற்று நோய்­களில் மூன்றில் ஒன்றை முற்­றாக குணப்­ப­டுத்த முடியும். ஏனைய புற்று நோய்­களை ஆரம்­பத்­தி­லேயே கண்­ட­றி­வதன் மூலம் குணப்­ப­டுத்த முடியும். நாட­ளா­விய ரீதியில் 24 அர­சாங்க புற்று நோய் சிகிச்சை நிலை­யங்கள் இயங்கி வரு­கின்­றன. இவற்றின் மூலம் மக்கள் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்­கையில் மார்பு, வாய், நுரை­யீரல், தைரோயிட், வயிறு, உண­வுக்­குழாய், கர்ப்­பப்பை வாய், கருப்­பைகள், கல்­லீரல் மற்றும் லியூ­கே­மியா ஆகிய புற்று நோய்­களே முதல் 10 இடங்­களில் உள்­ள­தாக குறிப்­பிட்ட வைத்­திய நிபுணர் சுராஜ் பெரேரா, ஆண்­களில் வாய் மற்றும் நுரை­யீரல் புற்­று­நோய்­களே பொது­வாக தாக்­கு­வ­தா­கவும் பெண்­க­ளுக்கு மார்பு மற்றும் கர்ப்­பப்பை வாய் புற்று நோய்­களே பொது­வ­னது என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார். அதிலும் பெண் புற்றுநோயாளர்களில் நால்வரில் ஒருவர் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவ்வாறு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதென்பது இலகுவானதல்ல. அத்துடன் மிகுந்த பணச் செலவுமிக்கதுமாகும். அரசாங்க வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சையளிக்கப்படுகின்ற போதிலும் அதற்காக காத்திருக்க வேண்டியேற்படுகின்றது. தனியார் வைத்தியசாலைகளுக்குச் சென்றால் மில்லியன் கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது.

புற்று நோய்களை ஆரம்பத்திலேயே இனங்கண்டால் குணப்படுத்த முடியும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் மக்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வு போதாதுள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

தேசிய புற்று நோய் வைத்­தி­ய­சா­லைக்கு மிகப் பெறு­ம­தி­யான ஸ்கேன் இயந்­தி­ரத்தைப் பெற்றுக் கொடுப்­பதில் முஸ்­லிம்கள் குறிப்­பிட த்தக்க பங்­க­ளிப்பைச் செய்­துள்­ளனர். அதே­போன்று கிழக்கு மாகா­ணத்­திலும் புற்று நோயா­ளர்­களைப் பரா­ம­ரிப்­ப­தற்­கான முத­லா­வது இல­வச நிலையம் கடந்த சுதந்­திர தினத்­தன்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இவை வர­வேற்­கத்­தக்க விட­யங்­க­ளாகும். இது­போன்று புற்று நோய் தொடர்பில் களச் செயற்­பா­டு­களில் ஏனை­யோரும் அக்­கறை செலுத்த வேண்டும். முஸ்லிம் சமூ­கத்­திற்­காக மாத்­தி­ர­மன்றி சகல இன மக்களுக்காகவும் நமது சேவைகளை விஸ்தரிக்க வேண்டும். புற்று நோய்க்கெதிராக போராட அனைவரும் முன்வர வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.