ஐ.தே.க. தலைமையிலான கூட்டணி ‘அன்னம்’ சின்னத்தில் களமிறங்கும்

0 240

ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான கூட்­டணி எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் அன்னம் சின்­னத்தில் போட்­டி­யிடும் என இறுதித் தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ள­தாக அக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­துள்ளார்.

கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க, லக் ஷ்மன் கிரி­யெல்ல, மங்­கள சம­ர­வீர மற்றும் மலிக் சம­ர­விக்­ரம ஆகி­யோ­ருக்­கி­டையில் நேற்று நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே இத் தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இத் தீர்­மானம் குறித்து நாளை (இன்று) நடை­பெ­ற­வுள்ள கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்­தின்­போது உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் சின்­ன­மாக அன்னம் சின்­னத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் விரைவில் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வரை சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்சி கடந்த 3 ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும் அன்னம் சின்­னத்­தி­லேயே போட்டியிட்டிருந்த போதிலும் இம்முறையே முதல் தடவையாக பொதுத் தேர்தலில் இச் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.