சாய்ந்தமருது புதிய நகரசபை உருவாக்கம் முஸ்லிம் வாக்குகளை கவரும் தந்திரமே

அரசாங்கத்தை சாடுகிறார் மரிக்கார் எம்.பி.

0 228

கல்­முனை மாந­க­ர­ச­பை­யி­லி­ருந்து சாய்ந்­த­ம­ருது நக­ர­ச­பையை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்­டுள்­ளமை பொதுத்­தேர்­தலின் போது முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ளும் முயற்­சி­யாகும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் தெரி­வித்தார். இவ்­வாறு வாக்­கு­களை பெற்று மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நாட்டின் சுயா­தீனத் தன்­மையை இல்­லா­தொ­ழிக்கும் முயற்­சி­யி­லேயே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

எதிர்க்­கட்சித் தலைவர் காரி­யா­ல­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பின் போது இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,
கல்­முனை மாந­க­ர­ச­பை­யி­லி­ருந்து சாய்ந்­த­ம­ருது நக­ர­ச­பையை உரு­வாக்­கு­வ­தற்­கான அதி­வி­சேட வர்த்­த­மா­னியை அர­சாங்கம் வெளி­யிட்­டுள்­ளது. இத­னூ­டாக சாய்ந்­த­ம­ருதை தனி­யொரு இராச்­சி­ய­மாக்கும் முயற்­சி­யி­லேயே அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது.

அதேபோல், கொழும்பு மாந­கர சபை­யையும் பிரித்து மத்­திய கொழும்­பிற்கும் தனி­யொரு மாந­கர சபையை எதிர்­கா­லத்தில் உரு­வாக்கும் நட­வ­டிக்­கைளை முன்­னெ­டுப்­பார்கள் என்­பதில் ஐய­மில்லை.

சாய்ந்­த­ம­ரு­திற்குத் தனி­யாக நக­ர­ச­பையை உரு­வாக்­கு­வதன் ஊடாக பொதுத் தேர்­த­லின்­போது முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ளும் முயற்­சி­யி­லேயே இந்த அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது.
பௌத்­தர்­களின் வாக்­கு­க­ளா­லேயே ஆட்­சிக்கு வந்­த­தாகக் கூறிக்­கொள்ளும் அர­சாங்கம், இவ்­வா­றான நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­கின்­றது என்றால் இந்த விவ­காரம் தொடர்பில் சிந்­திக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.
ஏனெனில், நாட்டு மக்­களின் வாக்­கு­களின் ஊடாக மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெற்­றுக்­கொண்டு ஆணைக்­கு­ழுக்­களின் சுயா­தீனத் தன்­மையை இல்­லா­தொ­ழிக்கும் நோக்­கி­லேயே இந்த அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அவ­ரு­டைய திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே ஆட்­சி­பீ­ட­மே­றினார். ஆயினும் அந்த திட்­டங்­களை ஜனா­தி­பதி திறன் பட நிறை­வேற்­று­வ­தற்­கான வாய்ப்பையளிக்க மஹிந்த தரப்பினர் தயாராயில்லை.

கடந்த 2015 இல் இல்லொதொழித்த மஹிந்த தரப்பின் குடும்ப ஆட்சியே மீள ஆரம்பித்துள்ளது. ஆகையால் ஜனாதிபதியால் அவருடைய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது போகும் நிலைமை உருவாகியுள்ளது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.