“இலங்கையன் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபடுவதுதான் உண்மையான சுதந்திரத்தின் அர்த்தமாகும்”

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆற்றிய சிறப்புரை

0 123

அந்­நிய ஆட்­சி­யா­ளர்களுக்கு எதி­ராக இன, மத, மொழி வேறு­பா­டின்றி அனை­வரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டதன் விளை­வா­கவே பெறு­ம­தி­யான இந்த சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொண்டோம். இன்று எமது சுதந்­தி­ரத்­திற்­காகத் தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்­ட­வர்­களை நன்­றி­யு­டனும், விசு­வா­சத்­து­டனும் நினைவு கூர்­வ­தற்­கா­கவே இங்கே ஒன்று கூடி­யுள்ளோம்.

அர­சர்­களின் ஆட்­சியின் கீழி­ருந்த போதும், அந்­நிய ஆட்­சி­யா­ளர்­களின் ஆதிக்­கத்தின் கீழி­ருந்த போதும் நாம் எவ்­வாறு இருந்தோம் என்­பதை தற்­போது எமக்குக் கிடைத்­துள்ள சுதந்­தி­ரத்­துடன் நாம் ஒப்­பிட்டு உணர்ந்­து­கொள்ள முடியும்.

அர­சர்­களின் ஆட்­சி­யின்­போது பரம்­பரை மூல­மாக அல்­லது ஆயு­தங்கள் மூல­மா­கவோ ஆட்­சியைக் கைப்­பற்­றினர். கால­னித்­துவ ஆட்­சி­யின்­போது 1931 இல் ஆங்­கி­லே­யர்­களின் ஆட்­சி­யின்­போது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு முறை ஏற்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆசியாக் கண்­டத்தில் வேறு எந்த நாட்­டிலும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாத சந்­தர்ப்­பத்தில் எமது நாட்டில் மட்டும் நடை­மு­றைப்­ப­டு­த்­தப்­பட்­டது பெரு­மைக்­கு­ரிய விட­ய­மாகும். ஆனால், இன்று சுதந்­தி­ர­மான, சுயா­தீ­ன­மான, ஜன­நா­யக ரீதி­யி­லான வாக்­குப்­ப­லத்தின் மூலம் நாம் அரசை தேர்ந்­தெ­டுக்­கின்றோம்.

1948 இல் சுதந்­திரம் பெற்று விடு­த­லை­ய­டைந்த போதும், 1973 மே 22 இல் இலங்கை ஜன­நா­யக சோஷ­லி­சக குடி­ய­ர­சாக்­கப்­பட்­டதன் பின்­னரே நாம் முழு­மை­யான பூர­ணத்­து­வ­மான சுதந்­தி­ரத்தைப் பெற்றோம். இதன் கார­ண­மா­கவே இந்­நாட்டு மக்கள் யாவரும் சமத்­து­வ­மாக, சம­வு­ரிமை பெற்­ற­வர்­க­ளாக வாழ்ந்து வரு­கிறோம். இதற்கு உதா­ர­ண­மாக உங்கள் ஸாஹிராக் கல்­லூ­ரியைக் குறிப்­பி­டலாம். ஒரு முஸ்லிம் பாட­சா­லை­யாக இருந்­தாலும் சிங்­களம், ஆங்­கிலம், தமிழ் ஆகிய மும்­மொ­ழி­க­ளிலும் கற்­பிக்­கப்­ப­டு­வ­துடன், முஸ்லிம் மாண­வர்­க­ளுடன் சொற்­ப­ளவு பௌத்த, இந்து, கிறிஸ்­துவ மாண­வர்­களும் கல்வி கற்­கின்­றனர்.

மேலும், கிரிக்கெட் விளை­யாட்டுப் போட்­டி­களின் போது எமது நாட்டின் வீரர்­க­ளுக்கு சக­லரும், இன, மத, மொழி வேறு­பா­டின்றி எமது நாட்டின் கொடி­களை அசைத்து உற்­சா­க­மாக ஆத­ர­வ­ளிப்­பதும் எமது தேசிய ஒற்­று­மைக்கு சிறந்த சான்­றாகும். இத்­த­கைய சமத்­துவம், சமா­தானம், ஒற்­றுமை போன்ற உய­ரிய பண்­பா­டு­களை சுதந்­தி­ரத்தின் மூலமே பெற்­றுக்­கொண்டோம். அவ்­வ­கையில் ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­க­ளா­கிய நீங்­களும் ஒன்­று­கூடி, தேசிய கீத­மி­சைத்து, தேசியக் கொடி­களை மகிழ்ச்­சி­யு­டனும், உற்­சா­கத்­து­டனும் அசைத்துக் கொண்­டா­டு­வது எமக்கு மிகுந்த மகிழ்ச்­சியை தரு­கி­றது.
இன, மத, மொழி வேறு­பா­டு­களைக் கடந்து ஒற்­று­மை­யாக அனை­வரும் கொண்­டாடும் ஒரு நிகழ்வு எமது சுதந்­தி­ர­மாகும். நாம் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற உய­ரிய தத்­து­வத்தின் அடிப்­ப­டையில் ஒற்­று­மை­யுடன் இணைந்து செயற்­ப­டு­வதே சுதந்­தி­ரத்தின் வெளிப்­பா­டாகும். தற்­போ­தைய சூழ்­நி­லையில் எமது நாட்­டிற்கு அவ­சி­ய­மா­னதும், அவ­ச­ர­மா­னதும் நமது ஒரு­மைப்­பா­டாகும்.

முன்னாள் இந்­திய ஜனா­தி­பதி அப்துல் கலாமிடம், அவ­ரைப்­பற்றி வின­வப்­பட்ட போது, நான் பிறப்பால் இந்­தியன், மொழியால் தமிழன், மதத்தால் முஸ்லிம் என்று பதில் கூறினார். நாமும், நான் இலங்­கையன் என்று கூறக்­கூ­டி­ய­வர்­க­ளாக மாற­வேண்­டு­மென உங்­க­ளிடம் பணி­வுடன் வேண்டிக் கொள்­கிறேன். இலங்­கையன் என்ற கொடியின் கீழ் நாம் அனை­வரும் ஒன்­று­ப­டு­வ­துதான் உண்­மை­யான சுதந்­தி­ரத்தின் அர்த்­த­மாகும்.

புனித குர்­ஆனில், “ நீங்கள் அனை­வரும் ஒற்­றுமை என்னும் கயிற்றைப் பற்­றிப்­பி­டித்துக் கொள்­ளுங்கள்” என்று கூறப்­பட்­டுள்­ளது. சிங்­கள மொழி­யில், “ ஒற்­று­மையே உயர்வு தரும் என்றும் ஆங்­கில மொழியில், “ஒற்­று­மையே பலம்” (unity is strength) என்றும், தமிழ் மொழியில்,” அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்றும் முது­மொ­ழிகள் கூறு­கின்­றன. இவை யாவும் ஒற்­று­மையின் அவ­சி­யத்­தையும் வலி­மை­யையும் வலி­யு­றுத்தும் வாச­கங்­க­ளாகும்.

இந்­நாட்டில் வாழும் மக்­க­ளா­கிய எம்­மி­டையே இன, மத, மொழி வேறு­பா­டுகள் மட்­டு­மன்றி கலா­சாரம், பண்­பாடு, சம்­பி­ர­தாயம் போன்ற பல வேறு­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றன. ஆயினும், அடுத்­த­வ­ரு­டைய உரி­மை­களைப் பாதிக்­காமல், எமது உரி­மை­க­ளுக்கும் பாதிப்­பேற்­ப­டாமல் ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்டும்.

சூப் போன்று ஒன்­றுக்குள் ஒன்று கரைந்து, கலந்­து­விட வேண்டும் என்னும் உதா­ரணம் தவ­றா­ன­தாகும். நாம் அனை­வரும் உணவின் போது பரி­மா­றப்­படும், சலாதுக் கோப்பை (Salad bowl) இல் காணப்­ப­டு­வது போன்று இணைந்­தி­ருக்க வேண்டும். சலாதுக் கோப்­பையில் காணப்­படும் ஒவ்­வொன்­றுக்கும் வெவ்­வே­றான குணம், மணம், சுவை இருந்­தாலும் அவற்றின் தனித்தன்மை பாதிக்கப்படாது சுவைக்கின்றோம். இவ்வாறே எமக்கிடையேயும் இன, மத, கலாசார, பண்பாடு எனப் பல வேறுபாடுகள் இருப்பினும் ஒவ்வொருவரும் தமது கலாசாரம், பண்பாட்டைப் பின்பற்றுவதுடன் மற்றவர்களின் கலாசாரம், பண்பாட்டை கண்ணியப்படுத்தி ஒற்றுமையுடனும் மற்றவர்களின் உரிமைகளையும் மதித்து செயற்பட வேண்டும்.

இத்தகைய சமாதானத்தையும், சமத்துவத்தையும் ஏனையவர்களின் உரிமைகளை மதித்து நடக்கும் உயரிய பண்பாட்டையும் எமக்கு வழங்குவது நாம் பெற்றுக்கொண்ட பெறுமதியான சுதந்திரமாகும்.-Vidivelli

  • தொகுப்பு: யாழ் அஸீம்

Leave A Reply

Your email address will not be published.