உலகை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

0 221

உல­கையே தற்­போது எது அச்­சு­றுத்தி கொண்­டி­ருக்­கி­றது என கேட்டால், அனை­வ­ரிடம் இருந்து வரும் பதில் கொரோனா வைரஸ் என்­ப­துதான். ஆனால் கொரோனா எல்லாம் எங்­க­ளுக்குத் தெரி­யாது, அதை விட மோச­மான ஒன்று எங்­க­ளது வாழ்க்­கை­யையே சின்­னா­பின்­ன­மாக மாற்றி கொண்­டி­ருக்­கி­றது என கத­று­கி­றார்கள், கிழக்கு ஆபி­ரிக்க மற்றும் ஆசிய நாடு­களின் விவ­சா­யிகள்.

2019 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்­களில் ஆபி­ரிக்­காவில் ஏற்­பட்ட வெள்­ளத்தைத் தொடர்ந்து பயிர்­களை நாசம் செய்­யக்­கூ­டிய வெட்­டுக்­கி­ளிகள் (Locusts) பில்­லியன் கணக்கில் பர­வி­யது முதலே உலகம் விசித்­தி­ர­மா­ன­தொரு பிரச்­சி­னைக்கு முகங்­கொடுப்பதை உணர முடிந்துள்ளது.

வறு­மையில் வாடும் கிழக்கு ஆபி­ரிக்க நாடுகள் ஏற்­க­னவே நாளாந்தம் உண­வுப்­பி­ரச்­சி­னையை சந்­திக்கும் நாடு­க­ளாகும். இந்­நி­லையில் 40 மைல் பரப்­ப­ளவில் 360 பில்­லியன் வெட்­டுக்­கி­ளிகள் பரவி விவ­சாய உற்­பத்­தி­களை அறு­வ­டைக்கு முன்­னரே உட்­கொண்­டு­வி­டு­வதால் முக்­கால்­வாசி விவ­சாய நிலங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் ஒவ்­வொரு வெட்­டுக்­கி­ளியும் சுமார் 150 முட்­டை­களை இடு­வதால் வெட்­டுக்­கி­ளி­களின் எண்­ணிக்கை வேக­மாக பரவி வரு­வ­துடன் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தென்­பது நவீன விஞ்­ஞா­னத்­தி­னாலும் இய­லாத காரி­ய­மாக மாறி­யுள்­ளது.

கென்­யாவில் மட்டும் சுமார் 200 பில்­லியன் வெட்டுக் கிளிகள் படை­யெ­டுத்­துள்­ள­தாக ஐக்­கிய நாடு­களின் உணவு மற்றும் விவ­சாய அமைப்பு மதிப்­பிட்­டுள்­ளது. நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் வெட்டுக் கிளி­களை மருந்து தெளித்து அழிப்­ப­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபை 71 கோடியே 32 இலட்சம் ரூபாவை ஒதுக்­கி­யுள்­ளது. இந்த நிதியை கொண்டு கென்­யாவில் 5 சிறிய ரக விமா­னங்கள் மூலம் மருந்து தெளிக்­கப்­பட்டு வெட்­டுக்­கி­ளிகள் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­கி­டையே எதிர்­வரும் மார்ச் மாதம் மீண்டும் கன­மழை தொடங்கும் என்­பதால் வெட்­டுக்­கி­ளி­களின் இனப்­பெ­ருக்கம் விவ­சா­யி­க­ளுக்கு மீண்டும் ஒரு தலை­வ­லி­யாக மாறும் என அவர்கள் அச்­சத்தில் உள்­ளார்கள்.
எத்­தி­யோப்­பியா, சோமா­லி­யாவில் மழை வெள்ளம் கார­ண­மாக இந்த ஆண்டு வெட்டுக் கிளிகள் இனப்­பெ­ருக்கம் அதி­க­மாக இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. தெற்கு சூடான் மற்றும் உகண்டா ஆகிய நாடு­க­ளுக்கும் வெட்டுக் கிளிகள் படை­யெ­டுத்­துள்­ளன.

ஆபி­ரிக்­காவில் மாத்­திரம் பில்­லியன் கணக்­கான முட்­டைகள் இன்னும் குஞ்சு பொரிக்­காமல் புதிய திரள்­களை உரு­வாக்கத் தயா­ராகி வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஏப்ரல் மாதத்தில் திரள்­களை உரு­வாக்கும் முட்­டைகள் இம்­மா­தத்தில் குஞ்சு பொரிக்கும் என ஆய்­வா­ளர்கள் கணித்­துள்­ளனர்.
கிழக்கு ஆபி­ரிக்­காவின் நிலைமை மிகவும் மோச­மா­னது என ஐ.நா.வின் உணவு மற்றும் விவ­சாய அமைப்பு (எப்.ஏ.ஓ) தெரி­வித்­துள்­ளது. சோமா­லியா கென்யா மற்றும் எத்­தி­யோப்­பியா ஆகிய நாடுகள் ஏற்­க­னவே பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது சூடானின் விவ­சாய நிலங்­க­ளையும் வெட்­டுக்­கி­ளிகள் கண் வைத்­துள்­ளன. ஏற்­க­னவே திறள்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட அண்டை நாடு­க­ளுக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக எப்.ஏ.ஓ எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

கிழக்கு ஆபி­ரிக்­காவில் மாத்­தி­ர­மன்றி ஈரான், யெமன், எகிப்து, சவூதி அரே­பியா, ஓமான், இந்­தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற ஆசிய மற்றும் மத்­திய கிழக்கு நாடு­களும் வெட்­டுக்­கி­ளி­களின் பெருக்­கத்தால் பாதிப்­ப­டைந்­துள்­ளன.
பாகிஸ்­தானின் பஞ்சாப் மாநி­லத்தில் என்றும் இல்­லாத அள­விற்கு வெட்­டுக்­கி­ளிகள் பர­வி­யுள்­ளதால் அங்கு அவ­ச­ர­கால நிலை பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளது. சிந்து கைபர் போன்ற இடங்­களில் 9 இலட்சம் ஹெக்­டேயர் பரப்­ப­ளவு வரை வெட்­டுக்­கி­ளிகள் பரவி பயிர்­களை சேதப்­ப­டுத்­தி­யுள்­ளன. இது தொடர்­பாக அவ­சர மாநாட்டைக் கூட்டி கலந்­து­ரை­யா­டிய பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான், தனது நாட்டில் அவ­சர கால நிலை­மையை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார். மேலும் இந்த நெருக்­க­டியை தீர்த்து வைப்­ப­தற்­காக 7.3 பில்­லியன் பாகிஸ்தான் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 1993 ஆம் ஆண்டு பாகிஸ்­தானைத் தாக்­கிய வெட்­டுக்­கி­ளி­களின் முற்­று­கையை விட இம்­முறை வீரியம் மிக அதிகம் என்றும் கூறப்­ப­டு­கின்­றது.

கடந்த காலங்­களில் பாகிஸ்­தானின் எல்­லையில் உள்ள இந்­திய மாநி­லங்­க­ளான குஜராத் மற்றும் ராஜஸ்­தானில் 4 இலட்சம் பயிர்­நி­லங்கள் வெட்­டுக்­கி­ளி­களால் நாசம் செய்­யப்­பட்­டுள்­ளன.

வெட்­டுக்­கி­ளிகள் கூரிய கொம்­புகள் கொண்­ட­வை­யாகும். ஒரே நாளில் 150 கிலோ மீற்றர் தூரம் வரை இடம்­பெ­ய­ரக்­கூ­டிய வல்­லமை படைத்த வெட்­டுக்­கி­ளிகள் இன்று விவ­சா­யி­களின் எதி­ரி­யாக மாறி­யுள்­ளன. இலைகள், பூக்கள், பழங்கள் போன்­றன வளரும் புள்­ளியில் இவ்­வெட்­டுக்­கி­ளிகள் முட்­டை­யிட்டு அவ்­வி­வ­சா­யத்தை பாதிப்­புக்­குள்­ளாக்­கு­கின்­றன.

இதற்­கி­டையில் கடந்த 25 ஆண்­டு­களில் என்­று­மில்­லாத அளவு வெட்­டுக்­கிளி தாக்­கு­தலை சவூதி அரே­பியா சந்­தித்து வரு­கின்­றது. மக்கா, ஜெஸான் மற்றும் தென்­மேற்கு கடற்­கரை பகு­தி­களில் வெட்­டுக்­கி­ளி­களின் ஆதிக்கம் மேலோங்­கி­யுள்­ளன. சவூ­தியின் நஜ்ரான் நகரில் கடந்த வருட நடுப்­ப­கு­தியில் பதிவு செய்­யப்­பட்ட காணொலி ஒன்று அதன் பாதிப்பை நன்கு புலப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. போரினால் பாதிக்­கப்­பட்ட யெமனில் கூட வெட்­டுக்­கி­ளிகள் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதால் இந்நிலை அம்­மக்­களை விரக்­தியின் எல்­லைக்கே கொண்டு சென்­றுள்­ளது.

வெட்­டுக்­கி­ளி­களால் கிழக்கு ஆபி­ரிக்கா முழுக்க முழுக்க நெருக்­க­டிக்கு ஆளா­கி­யுள்ள நிலையில் அங்கு பஞ்சம் வரக்­கூடும் என்றும் மேற்கு மற்றும் தெற்­கா­சிய பிராந்­தி­யங்­களில் உணவுப் பாது­காப்­புக்கு பாரிய சவால் ஏற்­படும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐ.நா.வின் எப்.ஏ.ஓ.வின் வெட்­டுக்­கி­ளிகள் முன்­கண்­கா­ணிப்பு அதி­காரி கெய்த் கிறிஸ்வின் தெரி­வித்­த­தன்­படி, இது 1950 களுக்குப் பின்னர் முதன்­மு­றை­யாக நடந்­துள்­ளது. இதற்கு ‘வெட்­டுக்­கிளி பிளேக்‘ சாட்­சி­யாக உள்­ளது. (இரண்டு தொடர்ச்­சி­யான ஆண்­டு­க­ளுக்கு மேல் வெட்­டுக்­கிளி திறள்கள் தாக்­குப்­பி­டிக்கும் போது அது பிளேக் என அழைக்­கப்­ப­டு­கின்­றது). இந்த முறை நல்ல பருவமழை பெய்ததால் அவை நீண்ட காலம் தங்கியுள்ளன.

வெட்டுக்கிளியின் இனப்பெருக்கம் ஒரே நாளில் 20 மடங்கு அதிகரிக்கும். இரண்டாவது கட்டத்தில் 400 மடங்காகவும் மூன்றாவது கட்டத்தில் 16000 மடங்காகவும் அதிகரிக்கும். இவை கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும் ஆற்றல் படைந்த பூச்சியினமாகும். ஆக மொத்தத்தில் காட்டுத் தீ, எரிமலை குமுறல், திடீர் விமான விபத்துக்கள், கொரோனா வைரஸ், வெட்டுக்கிளிகளின் தாக்குதல் என உலகம் தினம் தினம் புதுப் புது அச்சுறுத்தல்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளமை கவலைக்குரியது. அடுத்து என்ன விசித்திரம் காத்திருக்கிறதோ?-Vidivelli

  • எம்.ஏ.எம். அஹ்ஸன்

Leave A Reply

Your email address will not be published.