நீதித்துறையின் வீழ்ச்சி

0 171

பாரா­ளு­மன்­றமும் நிறை­வேற்று அதி­கா­ரத்­திற்குப் பொறுப்­பா­ன­வரும் உரிய முறையில் செயற்­ப­டா­தி­ருப்­பினும் அத்­துடன், அதி­க­ள­வி­லான ஊழலில் ஈடு­பட்­ட­வர்­க­ளாக இரு­ந்த போதி­லும்­கூட இலங்­கையின் நீதி­மன்­றத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள சமூகப் பொறுப்­பு­களில் முறை­யான அக்­க­றை­யுடன் உய­ரிய இலக்கு நோக்கி செயற்­ப­டு­கின்ற அடிப்­ப­டையில் இருக்­கு­மே­யானால் இலங்­கை­யா­னது தற்­போ­தைய மோச­மான நிலைக்குத் தள்­ளப்­ப­டா­ம­லி­ருந்­தி­ருக்­கலாம். எனினும், துர­திஷ்­ட­வ­ச­மாக இலங்கை அவ்­வா­றா­ன­தொரு நீதி­மன்­றத்தைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. பாரா­ளு­மன்­றத்­தி­னதும் ஆட்­சி­பீ­டத்­தி­னதும் முன்­னேற்­ற­மற்ற நிலைக்கு ஏற்­ற­வ­கை­யி­லான பின்­­தங்­கி­ய­தொரு நீதி­மன்­ற­மா­கவே அது காணப்­ப­டு­கின்­றது.

இலங்­கை­யா­னது சுதந்­தி­ரத்தைப் போராடிப் பெற்­றுக்­கொண்ட ஒரு நாடல்ல. அன்­ப­ளிப்­பொன்றை வழங்­கு­வது போன்ற அடிப்­ப­டை­யி­லேயே இலங்­கைக்­கான சுதந்­திரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­ப­தனை யாரும் மறந்­து­விட முடி­யாது. முறை­யான ஜன­நா­யக ஆட்சி குறித்த தெளி­வான அறிவு பொது­மக்­க­ளிடம் காணப்­ப­ட­வில்லை என்­பது போன்றே நாட்டின் தேசியத் தலை­வர்­க­ளிடம் அது காணப்­ப­ட­வில்லை.

சுதந்­தி­ரத்­திற்­கான போராட்­டங்கள் நிகழ்த்­தப்­பட்ட காலப்­ப­கு­தியில் இந்­தியா கல்­வி­ய­றிவில் இலங்­கையை விடப் பின்­தங்­கிய நிலை­யி­லேயே காணப்­பட்­டது. எனினும், இலங்­கையின் தலை­வர்­களின் அறிவு மட்­டத்­திலும் பார்க்க உயர்ந்த அள­வி­லான அறி­வு­டைய தேசியத் தலை­வர்­களை இந்­தியா பெற்­றி­ருந்­தது.

எமது நாட்டுத் தலை­வர்கள் போலன்றி இந்­திய நாட்டின் தலை­வர்கள் தமது நாட்டின் சுதந்­தி­ரத்தை வென்­றெ­டுப்­ப­தற்­காக இந்­திய சமூ­கத்­தி­னரை நேர­டி­யாகப் பங்­க­ளிக்கச் செய்­தனர். சுதந்­தி­ரத்­திற்­கான போராட்­டத்­தின்­போது சுய­மாக சிந்­தித்து செய­லாற்றும் ஒரு சமூ­க­மாக இந்­தி­யர்­களை மாற்­றி­ய­மைத்­தனர். அதற்கு மேல­தி­க­மாக இனம், மதம், சாதி போன்ற வேறு­பா­டு­க­ளுக்கு இருக்­கின்ற அங்­கீ­கா­ரத்தைக் குறைத்து நவீன சமூ­க­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான அடித்­த­ள­மொன்­றையும் உரு­வாக்­கினர். மதச்­சார்­பா­ள­ராகக் கரு­தப்­பட்ட காந்தி முதற்­கொண்டு அத்­தனை தலை­வர்­களும் அர­சியல் நட­வ­டிக்­கை­களின் போது மதம் சாரா­த­வர்­க­ளாகத் தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்­டனர்.

இலங்­கையின் இய­லாமை
சுதந்­தி­ரத்­திற்­காக முன்­னின்ற இலங் கைத் தலை­வர்­க­ளிடம் தாம் அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மென்ற பேராசை இருந்து வந்­ததே தவிர, நாட்டை அபி­வி­ருத்திப் பாதையில் இட்­டுச்­செல்ல வேண்­டு­மென்ற உய­ரிய நோக்கு அவர்­க­ளிடம் காணப்­ப­ட­வில்லை. சுதந்­தி­ரத்தை வென்­றெ­டுப்­ப­தற்­கான போராட்­டத்தில் சமூக செயற்­பாட்­டா­ளர்­களை ஈடு­ப­டுத்­து­வதில் தமது எதிர்ப்பை வெளிக்­காட்­டி­யது மாத்­தி­ர­மன்றி, சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நடாத்­து­வது குறித்தும் தமது எதிர்ப்பை வெளி­யிட்­டனர். இந்­தி­யாவைக் கைவி­டு­வது என்ற பிரித்­தா­னி­யாவின் தீர்­மா­னத்தின் விளை­வாக பாரிய முயற்­சி­க­ளின்­றியே சுதந்­தி­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்கு இலங்­கையால் முடி­யு­மாக அமைந்­தது.

இந்­தியா சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொண்­டதன் பின்னர் இலங்கை போன்று பிரித்­தா­னி­யாவின் நிர்­வாக முறை­களை அந்த அமைப்­பி­லேயே பாது­காத்து அதனை அப்­ப­டியே நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிக்­க­வில்லை. அவர்கள் இலங்­கைக்கு மாற்­ற­மாக அவர்­க­ளுக்­கேற்ற அடிப்­ப­டையில் நிர்­வாக முறை­களை மாற்­றி­ய­மைத்­துக்­கொண்­டனர்.

1922 ஆம் ஆண்டில் தமது நாட்டின் ஆட்சி எந்­த­வ­கையில் அமைய வேண்டும் என்­பது குறித்து காந்தி குறிப்­பி­டு­கையில், இந்­தி­யாவின் ஆட்சி முறை­யா­னது பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக பெற்­றுத்­த­ரு­கின்ற ஒன்­றாக அல்­லாமல் இந்­திய மக்­களால் சுதந்­தி­ர­மாகத் தெரி­வு­செய்­கின்ற மக்­களின் பிர­தி­நி­திகள் குழு­வொன்று ஒன்­றாக இணைந்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு அவற்றின் ஊடாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற தீர்­மா­னங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தாகக் குறிப்­பிட்டார்.
1933 ஆம் ஆண்டில் பிரித்­தா­னியா இந்­தி­யா­வுக்­காக ஓர் அர­சியல் யாப்பை வடி­வ­மைத்து வழங்­கு­வ­தற்­காக முன்­வந்­த­போது, வெளி­நா­டு­களின் ஆதிக்­கங்­க­ளற்ற அமைப்பில் இந்­திய மக்கள் பிர­தி­நி­திகள் ஊடாக உரு­வாக்­கப்­ப­டு­கின்ற யாப்­பொன்று மாத்­தி­ரமே இந்­தியா வேண்டி நிற்­கின்­றது என்­ப­தாக இந்­தி­யாவின் காங்­கிரஸ் மிக ஆணித்­த­ன­மாகக் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இந்­தி­யாவின் வெற்றி
இந்­தி­யாவின் யாப்பு உரு­வாக்­கத்­திற்­காக மக்கள் பிர­திநி­தி­களை தெரி­வுசெய்து கொள்­வ­தற்­கென தேர்தல் ஒன்று நடாத்­தப்­பட்டு அத­னூ­டாகத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற அங்­கத்­த­வர்கள் மூல­மாக யாப்பு உரு­வாக்­­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட விதம் குறித்து கலா­நிதி கிரேன்வில் ஒஸ்டின் ”The Indian Constitution’ எனும் பெயரில் நூல் ஒன்றை எழு­தி­யி­ருந்தார். இலங்­கையில் இது­வரை காலமும் அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­பட்ட விதம் குறித்து தெளி­வான விளக்­கத்­துடன் இந்தப் புத்­த­கத்தை வாசிக்க முடி­யு­மாயின் யாப்பு உரு­வாக்கம் என்ற விட­யத்தில் இலங்கை எந்­த­ளவில் பின்­தங்­கி­யி­ருக்­கின்­றது என்­பதை மிகத் தெளி­வாகப் புரிந்­து­கொள்­ளலாம்.

இந்­திய நீதி­மன்ற முறை கட்­ட­மைக்­கப்­பட்ட விதம் மற்றும் அது தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட கருத்­துப்­ப­ரி­மாற்றம் குறித்தும் அந்தப் புத்­த­கத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. சமூகப் பங்­க­ளிப்­புடன் மேற்­கொள்­ளப்­பட்ட போராட்­டங்­க­ளி­னூ­டாக வென்­றெ­டுத்துக் கொண்ட சுதந்­தி­ரத்தின் பின்னர் குறித்த சமூகப் பங்­க­ளிப்­பையும் போராட்­டங்­க­ளையும் இன்னும் முன்­னோக்கி நகர்த்திச் செல்­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பின் பொறுப்­பா­ள­ரா­கவும், பாது­காப்­பா­ள­ரா­கவும் இங்கு நீதி­மன்றம் கரு­தப்­பட்­ட­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

இந்­தி­யாவின் அர­சியல் யாப்பை அமைத்து அதனை சட்­ட­மாக்­கு­வ­தற்­காக மூன்று வரு­டங்கள் என்ற அளவில் கால­மெ­டுத்­தது. யாப்பு அமைப்­ப­தற்­காக எடுத்­துக்­கொண்ட காலப்­ப­கு­தியின் அதி­க­மான காலப்­ப­குதி நீதித்­து­றையை கட்­ட­மைப்­ப­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்­கா­கவே செல­வா­கி­யி­ருந்­தது.
குறித்த விட­யத்தை ஆரம்­பிக்­கும்­போது அதி­கா­ரத்­தி­லி­ருக்கும் கட்­சி­களின் ஆதிக்­கத்­திற்கு உட்­பட்டு அவர்­களின் அபி­லா­சை­க­ளுக்­க­மைய யாப்பை அமைத்­து­வி­டாது சுதந்­தி­ரத்­திற்­காகப் பாடு­பட்ட சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளி­டத்தில் நீதி­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான முறையில் செயற்­ப­டக்­கூ­டிய நீதித்­து­றை­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான நடை­மு­றைகள் குறித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை யாப்பு உரு­வாக்­கத்­திற்­கான செயற்­கு­ழுவின் தலை­வ­ராக செயற்­பட்ட நேரு முன்­னெ­டுத்தார். அதன் அடிப்­ப­டையில் இந்­திய தலை­வர்கள் பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா, அயர்­லாந்து போன்ற நாடு­களின் நீதித்­துறை குறித்து வெவ்­வே­றாக ஆராய்ந்து இந்­தி­யா­வுக்குப் பொருத்­த­மான அடிப்­ப­டை­யி­லான நீதித்­து­றை­யொன்றை உரு­வாக்கிக் கொண்­டனர்.

இந்­திய நீதி­மன்­றத்தின் செயற்­பாடு
இந்­தி­யாவின் உயர் நீதி­மன்றம் என்­பது சுமார் 7 வரு­டங்­க­ளாக பரீட்­சித்­துப்­பார்க்­கப்­பட்ட ஒரு நீதித்­துறை நிறு­வ­ன­மாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. அதனை உரு­வாக்­கி­ய­வர்­களின் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ற வகையில் இந்­திய சமூகப் போராட்­டங்கள் தொடர்­பான எதிர்­கால நலன்கள் மற்றும் மக்­களின் உரி­மை­க­ளையும் அர­சியல் யாப்­பி­னையும் பாது­காக்­கின்ற அடிப்­ப­டையில் இந்­திய நீதி­மன்றம் செயற்­ப­டு­கின்­றது என்­ப­தாகக் குறிப்­பி­ட­மு­டியும். இன்று உல­கி­லி­ருக்­கின்ற சிறந்த உயர்­நீ­தி­மன்­றங்­களில் இந்­திய நீதி­மன்­றமும் ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது.

பெரும்­பான்மை பலத்­தையும் பாரி­ய­ள­வி­லான அதி­கா­ரத்­தையும் தன்­ன­கத்தே கொண்­டி­ருந்த இந்­திரா காந்­தியின் ஆட்­சிக்­கா­லத்தில் நீதி­மன்­றத்தை தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­ப­தற்­காக அவரால் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போது நீதி­மன்றம் தனது சுயா­தீன தன்­மை­யினைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காகப் பாரிய முயற்­சி­யொன்றை மேற்­கொண்­டி­ருந்­தது. குறித்த போராட்­டத்தில் இந்­திரா காந்தி தற்­கா­லிக வெற்­றியைப் பெற்­றுக்­கொண்ட போதிலும் தமது சுயா­தீனத் தன்­மை­யையும் மதிப்­பையும் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­கான போராட்­டத்தை நீதித்­துறை கைவி­ட­வில்லை. 1977 ஆம் ஆண்டு இந்­திரா காந்­தியின் ஆட்சி தோல்­வி­யடைந்­ததன் பின்னர் அவரால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அனைத்­து­வி­த­மான விகா­ரங்­களும் சரி­செய்­யப்­பட்­ட­துடன் இனிமேல் ஆட்­சிக்கு வரு­கின்ற கட்­சிகள் தங்­க­ளது சுய­ந­லத்தின் பேரில் யாப்பில் மாற்றம் ஏற்­ப­டுத்த முடி­யா­த­ள­வுக்கு சட்டம் அமைப்­ப­தற்­காக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் பொது நலன்­க­ளுக்­கா­க­வன்றி சய­நல நோக்­குடன் யாருக்கும் யாப்பில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது.

இந்­தி­யா­வா­னது இலங்­கையை விடவும் மத­சார்­பாக இருந்­த­போ­திலும் மதங்கள் நீதி­மன்­றங்­க­ளுடன் கலந்­து­வி­டு­வ­தற்கு உயர்­நீ­தி­மன்றம் இட­ம­ளிக்­க­வில்லை. அத­னூ­டாக மதச்­சார்­பின்மை என்­பது நீதி­மன்­றத்தின் பண்­பொன்­றாக உறுதி செய்­து­கொண்­டனர். சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் உயர் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்­றிற்­காக இந்­து­மத வழி­பா­டொன்றை உள்­ள­டக்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இது தொடர்பில் யாரோ ஒருவர் மூல­மாக உயர் நீதி­மன்­றத்­திடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதன் பின்னர் குறித்த நிகழ்­விற்கு உயர் நீதி­மன்றம் தடை­யுத்­த­ரவு வழங்­கி­யது மாத்­தி­ர­மன்றி நீதி­மன்­ற­தினுள் மத அடை­யா­ளங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது எனவும் உத்­த­ர­விட்­டது. நீதி­மன்­றத்தில் நடை­பெ­று­கின்ற தவ­றுகள் குறித்து விமர்­சிக்­கின்ற உரிமை பொது­மக்­க­ளுக்கு இருப்­ப­தாக அண்­மையில் வழங்­கப்­பட்ட தீர்ப்­பொன்றின் ஊடாக குறிப்­பி­டப்­பட்­டது.
வறி­யவர், இய­லா­தவர், அங்­க­வீனர் என்ற அடிப்­ப­டை­யா­ன­வர்­களில் ஒரு­வரோ அல்­லது அவ்­வா­றா­ன­வர்­களின் குழு ஒன்­றிற்கோ தங்­க­ளுக்கு ஏற்­பட்ட அசா­தா­ரணம் தொடர்பில் நேர­டி­யாக உயர் நீதி­மன்­றத்­திடம் முறைப்­பா­டு­களை மேற்­கொள்ளும் முறை­யொன்று பக­வதி எனும் சட்­டமா அதிபர் மூல­மாக அவ­ரது பத­விக்­கா­லத்தில் உரு­வாக்­கப்­பட்­டது. அவ்­வா­றான முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பொறும் போதும் எந்­த­வி­த­மான கட்­ட­ண­மு­மின்றி விசா­ரணை மேற்­கொண்டு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்கும் முறை­யொன்றும் நடை­மு­றையில் இருந்­து­வ­ரு­கின்­றது.

தான்­தோன்­றித்­த­ன­மான செயற்­பாடு
இலங்­கையின் நீதி­மன்­றத்­திற்கு சிறந்­த­தொரு நோக்கு காணப்­ப­ட­வில்லை. சட்டம் குறித்த பரந்த அறிவு இருந்த போதிலும் நீதி­மன்­றத்­திடம் இருக்க வேண்­டிய சமூகப் பொறுப்­புக்கள் குறித்து போதிய அறி­வி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இந்­தி­யாவின் உயர் நீதி­மன்­ற­மா­னது தனது நாட்டு மக்­களின் அபி­மா­னத்தைப் பெற்­றுக்­கொண்­டி­ருப்­ப­துடன் சர்­வ­தேச ரீதி­யிலும் நன்­ம­திப்­பினைப் பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் இலங்­கையின் உயர் நீதி­மன்­ற­மா­னது இந்த விட­யத்தில் மிகவும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. இந்­தி­யாவின் உயர் நீதி­மன்­ற­மா­னது மக்­களைப் பய­மு­றுத்­து­வதன் ஊடாக இந்த அபி­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. மாறாக, மக்­களின் அபி­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்ளும் அடிப்­ப­டையில் நிறு­வ­னத்தை நடாத்திச் செல்லல் ஊடாக அல்­லது அர­சியல் யாப்­பி­னையும் மக்­களின் உரி­மை­க­ளையும் பாது­காக்கும் செயற்­பா­டுகள் ஊடா­கவே அதனை அடைந்­து­கொண்­டி­ருக்­கின்­றது.

மக்­களின் உரி­மை­க­ளையும் அர­சியல் யாப்­பையும் பாது­காக்­கின்ற கட­மையை இலங்­கையின் உயர்­நீ­தி­மன்றம் சரி­யாக மேற்­கொள்­ள­வில்லை. ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு யாப்­பினை மீறு­வ­தற்­காக இட­ம­ளித்­தி­ருப்­ப­துடன், சில­போது அவர்­க­ளுடன் கூட்டுச் சேர்­ந்­து­கொண்ட நிலையில் உயர்­நீ­தி­மன்றம் கூட அர­சியல் யாப்பை மீறி­யி­ருக்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறிப்­பினர் என்ற பதவி இழந்­து­வி­டாத அடிப்­ப­டையில் கட்சி மாறலாம் என்ற தீர்ப்பை இதற்கு உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம். இது இலங்­கையின் அர­சியல் யாப்பை முற்­றா­கவே விகா­ர­மாக்­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்ற ஒரு தீர்ப்­பாகக் குறிப்­பிட வேண்டும். இது உயர் நீதி­மன்­றத்­தினால் எந்த நேரத்­திலும் சரி­செய்­து­விட முடி­யு­மான ஒன்­றாக இருக்­கின்ற போதிலும், குறித்த தவ­றா­னது இன்­று­வ­ரையில் சரி­செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தனால் அது எதிர்­கா­லத்­திலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­வ­தற்­கான வாய்ப்பு இல்­லா­ம­லில்லை.
இலங்­கையில் மதம் சாராத அமைப்­பி­லான நீதி­மன்றம் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. சில நீதி­ப­திகள் தத்­த­மது மத­சார்­பினை வெளிக்­காட்­டு­வ­தற்­காக பின­்வாங்­கு­வ­து­மில்லை. இது நீதி­ப­தி­க­ளுக்கு இருக்­கக்­கூ­டாத பண்பு என்­ப­தாக அவர்கள் அறி­வ­தில்லை.

1999 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதத்தில் பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் ஒரு நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்­தி­யாவின் முன்னாள் நீதி­ய­ரசர் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்­வின்­போது நீதி­ப­தி­க­ளிடம் காணப்­ப­ட­வேண்­டிய பண்­புகள் குறித்து எச்.எல். த சில்வா, “சுயா­தீனத் தன்மை இல்­லா­ம­லாதல், நேர்­மை­யற்­றுப்­போதல் போன்ற கார­ணங்­க­ளினால் முழு நீதி­மன்றக் கட்­ட­மைப்பும் வில்­லனின் பாத்­தி­ரத்தை ஏற்று நடிக்கும் நகைச்­சுவை நடிகர் ஒரு­வரின் நிலைக்கு உள்­ளா­கி­வ­ரு­கின்­றது” என்­ப­தாகக் குறிப்­பிட்டார். அவர் இவ்­வாறு குறிப்­பிட்டு 4 வரு­டங்­க­ளா­கும்­போது திய­வன்­னாவ ஆற்றின் அருகில் வாகனம் ஒன்­றினுள் நீதி­ய­ரசர் பெண் சட்­டத்­த­ரணி ஒரு­வ­ருடன் அரை நிர்­வா­ண­மாக இருந்த நிலையில் பொலி­சாரால் பிடி­பட்டார்.

அடிப்­படை உரிமை தொடர்­பான வழக்­குகள் மூன்று மாத காலங்­க­ளுக்குள் தீர்க்­கப்­பட வேண்டும் என்­ப­தாக அர­சியல் யாப்பு குறிப்­பி­டு­கின்­றது. எனினும், இரண்டு மூன்று வரு­டங்கள் கடந்த பின்­னரும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டாத அடிப்­படை உரிமை வழக்­கு­களும் காணப்­ப­டு­கின்­றன என்­பதே இன்­றைய உண்­மை­யான நிலை­யாகும். சமுர்த்தி அதி­கா­ரி­களின் சங்­கத்தின் வழக்­கொன்று 5 வரு­டங்­க­ளாக விசா­ரிக்­கப்­பட்டு தீர்ப்பு அறி­விக்­கப்­ப­டாமல் குறித்த வழக்கு செல்­லு­ப­டி­யற்­ற­தாக ஆக்­கப்­பட்­ட­தாக அண்­மையில் அவர்­க­ளி­ட­மி­ருந்து அறி­யக்­கி­டைத்­தது. இந்த வழக்­கிற்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­க­ளுக்கு மாத்­திரம் அவர்­களால் செல­விட்ட தொகை ரூபா 56 இலட்சம் என்­ப­தாகக் குறிப்­பி­டப்­பட்­டது.

தமது சேவை பெறு­நர்­களை அழுத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்தி அவர்­க­ளி­ட­மி­ருந்து பணம் ஈட்­டிக்­கொள்­கின்ற அமைப்­பி­லேயே தற்­போ­தைய சட்­டத்­துறை சார்ந்த தொழி­லா­ளர்கள் இருக்­கின்­றனர். பார­தூ­ர­மான குற்றச் செயல்­களைப் புரிந்­த­வர்கள் விட­யங்­க­ளில்­கூட அந்தக் குற்றச் செயல் குறித்து ஆராய்ந்து தகுந்த தண்­டனை வழங்­கு­கின்ற முறை­யொன்று நடை­முறையில் காணப்­ப­டு­வ­தில்லை. சட்­டத்­துறை சார்ந்­த­வர்­க­ளிலும் நீதி­மன்றத் துறை­சார்ந்­த­வர்­க­ளிலும் மதிப்­புக்­கு­ரி­ய­வர்கள் இருந்த போதிலும் பொது­வாக ஒழுக்­க­மற்ற நிலையே காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. நீதி­மன்றத் துறையில் இருப்­ப­வர்கள் ஒழுங்­கான முறையில் செயற்­படும் அடிப்­ப­டையில் கண்­கா­ணிப்­பது சட்­டத்­துறை சார்ந்த துறை­யி­னரின் பொறுப்­பாகும். சட்­டத்­து­றை­யினர் முறை­யாக செயற்­ப­டு­வதைக் கண்­கா­ணிப்­பது நீதித்­து­றையின் பெறுப்­பாகும். குறித்த இரண்டு பிரி­வி­ன­ரி­டமும் இந்த நடை­மு­றைகள் காணக்­கி­டைக்­க­வில்லை.

ஒழுக்­கமும் கட்­டுப்­பாடும்
நீதி­மன்ற சேவைக்­காக நீதி­ப­தி­களை சேவையில் இணைத்­துக்­கொள்­ளும்­போது அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற பயிற்­சி­களும் ஒழுக்கம் சார்ந்த கட்­டுப்­பா­டு­களும் சிறந்த அடிப்­ப­டையில் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.
லெனின் ரத்­னா­யக்க மற்றும் உபாலி அபே­ரத்ன ஆகிய நீதி­ப­தி­களை இதற்கு உதா­ர­ண­மாக குறிப்­பி­டலாம். காப்­பு­றுதி நிறு­வ­ன­மொன்றில் பணி­யாற்றி பண மோசடி கார­ண­மாக பணி­நீக்கம் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அதனை மறைத்து லெனின் ரத்­னா­யக்க நிய­மனம் பெற்­றுக்­கொள்­கின்றார். அவரை இந்தப் பத­விக்­காக இரண்டு வழக்­க­றி­ஞர்கள் பரிந்­துரை செய்­தி­ருக்­கின்­றனர். சேவையில் இணைத்துக் கொள்­வ­தற்­கான முறை­யான நடை­மு­றைகள் இல்­லா­மையை இந்த சம்­பவம் எடுத்­துக்­காட்­டு­கின்­றது. அவர் குறித்து குறிப்­பி­டு­வ­தற்கு நிறைய விட­யங்கள் இருந்த போதிலும் சேவை­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்று அர­சியல் பழி­வாங்­கல்கள் குறித்து ஆராய்­வ­தற்­கான விசே­ட­மாக அமைக்­கப்­பட்ட மூன்­றுபேர் கொண்ட குழுவின் தலைவர் குறித்து சில விட­யங்கள் கூற­வேண்­டிய தேவை­யி­ருப்­பதால் அந்த விட­யத்­திற்கு வரு­கின்றேன்.

இர­சா­யனப் பொறி­யி­ய­லா­ள­ரான ஜய­சே­கர தனது மனை­விக்கு எதி­ராகப் பதி­வு­செய்த விவா­க­ரத்து வழக்­கொன்று தொடர்பில் சரத் சில்­வாவை பிர­தி­வா­தி­யாகக் குறிப்­பிட்டு பதி­வு­செய்த வழக்கின் நீதி­ப­தி­யாக செய­லாற்­றி­ய­வரே உபாலி அபே­ரத்ன என்­ப­வ­ராவார். குறித்த வழக்கு தொடர்­பாக குறித்த நீதி­ப­திக்கு எதி­ராக ஜய­சே­க­ர­வினால் நீதிச் சேவைகள் ஆணைக்­கு­ழு­விடம் முன்­வைத்த முறைப்­பாடு தொடர்பில் ஆணைக்­குழு விசா­ர­ணையை மேற்­கொண்­டது. குறித்த விசா­ரணை உயர் நீதி­மன்­றத்தின் திஸ்ஸ பண்­டார மற்றும் மார்க் பெர்­னாந்து ஆகி­யோரால் மேற்­கொள்­ளப்­பட்­டது. மாவட்ட நீதி­பதி உபாலி அபே­ரத்­னவை விசா­ரித்து வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொண்­டனர். குறித்த பரி­சோ­தனை அறிக்­கையை வாசித்­ததன் பின்னர் குறித்த நீதி­பதி தொடர்பில் எனக்குள் ஒரு வகை­யான வெறுப்பு ஏற்­பட்­டது என்­பதைக் குறிப்­பி­ட­வேண்டும். அவர் சரத் சில்­வாவைப் பாது­காப்­ப­தற்­காக சட்­டத்­துக்கு முர­ணாக செயற்­பட்­டி­ருந்தார். முறைப்­பாட்­டா­ளரை சங்­க­டத்­துக்­குள்­ளாக்க உச்ச அளவில் முயற்­சித்­தி­ருக்­கின்றார். அவர் நீதி­ப­தி­யாகக் கட­மை­யாற்ற எந்­த­வ­கை­யி­லுமே பொருத்­த­மற்­ற­வ­ராவார்.

உபாலி அபே­ரத்ன நீதி­பதி இந்த வழக்கு விசா­ர­ணையில் மேற்­கொண்ட சட்­டத்­திற்கு முர­ணான நட­வ­டிக்­கை­களைக் காரணம் காட்டி அவ­ருக்கு எதி­ராக குற்­றப்­பத்­திரம் தயா­ரித்து சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தற்­காக சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­தனர். சரத் சில்வா சட்­டமா அதி­ப­ராக நிய­மனம் பெற்­றதும் குறித்த விவா­க­ரத்து வழக்கில் தமது ஆலோ­ச­னையின் பிர­காரம் செயற்­பட்ட நீதி­ப­தியை பாது­காப்­ப­தற்­காக குறித்த அறிக்­கையை மறைத்­து­விட்டார்.
சட்­டமா அதி­பரின் செய­ற­்பாடு குறித்து குரல் எழுப்ப வேண்­டிய தேவை எனக்­கேற்­பட்­டது. அவ்­வாறு குரல் எழுப்­பி­யதன் விளை­வா­கவும் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் முன்னாள் தலை­வர்­களின் ஒன்­றி­யத்தின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட கோரிக்­கையின் பேரிலும் உபாலி அபே­ரத்ண தொடர்­பாக என்னால் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­காக உயர் நீதி­மன்ற நீதி­ப­திகள் மூவர் அடங்­கிய குழு ஒன்றை நிய­மிக்க வேண்­டிய நிலை நீதி­ய­ர­ச­ருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்­கு­ழு­வுக்கும் ஏற்­பட்­டது.

குறித்த மூவர் கொண்ட குழுவில் அமீர் இசதீன், ஹெக்டர் யாபா, பீ. எதிஸ்­சூ­ரிய ஆகிய நீதிபதிகள் அங்கம் வகித்தனர். குறித்த விசாரணையின்போது நீதிபதி குறித்த குற்றச்சாட்டு நிரூபணமானதால் பதவியிலிருந்து கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய வேண்டும் என்பதாக பரிந்துரைக்கபட்டு அதன் அடிப்படையில் 1990.07.31 ஆம் திகதி முதல் நீதிமன்ற சேவைக்குழுவினால் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது.

எனினும் குறித்த தீர்மானத்தை நீதிமன்ற சேவை ஆணைக்குழு அவசரமாகவே மாற்றியமைக்கவும் செய்தது. கட்டாய ஓய்வு வழங்குவதற்குப் பதிலாக குறித்த நீதிபதியின் பதவி உயர்வுகளை இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்து 2001.01.01 ஆம் திகதி முதல் மொனராகல மாவட்ட நீதிமன்றத்திற்கு தண்டனை இடமாற்றமொன்றை வழங்கியது.

சரத் சில்வா நீதியரசராக நியமிக்கப் பட்டதன் பின்னரான காலப்பகுதியில் குறித்த நீதிபதியின் தண்டனைக் காலம் நிறைவடையும் முன்பாகவே அவருக்கு மேல் நீதிமன்றத்திற்கு பதவி உயர்வொன்று வழங்கப்பட்டதுடன், நீதியரசர் ஓய்வுபெற முன்னர் மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனமும் வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப் பிடப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். சரத் சில்வா தனக்கு உதவியவர்களுக்குத் தாராளமாகப் பிரதியுபகாரம் செய்திருக்கின்றார். இது நல்ல பண்பாக நோக்க வேண்டிய ஒன்று என்ற போதிலும் அந்த செயற்பாடு நீதித்துறைக்குப் பாரிய பாதகங்களை உண்டுபண்ணியிருக்கின்றது.

இந்தக் கதை இத்துடன் நிறைவடைய வில்லை. சில காலங்களின் பின்னர் குறித்த நீதிபதி ஜனாதிபதியினால் உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுகின்றார். இது அன்றைய நீதியரசரின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே இடம்பெற்றது. மாவட்ட நீதிமன்றத்தில்கூட கடமையாற்றப் பொருத்தமற்றவர் என்பதாக மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவொன்றால் தீர்மானிக்கப்பட்ட ஒருவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெற்ற இந்நபர் நல்லாட்சி அரசாங்கத்தின் தவறுகளை ஆராய்கின்ற ஆணைக்குழுவின் தலை வராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போதைய அரசாங்கத்தினால் பழிவாங்கல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட குழுவின் தலைவராக செயற்படுகின்றார்.

குறித்த ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் இயங்குகின்ற ஆணைக் குழு, வழக்கொன்று தொடர்பாக சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட உத்தரவொன்று சட்டமா அதிபர் மூலமாக நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் புதிய விதத்தில் பிரச்சினை ஒன்று தோன்றியிருக்கின்றது. இந்த சம்பவங்கள் சாதாரண முறைகளில் நடைபெறுகின்றவைகள் அல்ல என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.-Vidivelli

  • விக்டர் ஐவன்
    தமிழில் : ராஃபி ஷரிப்தீன்

Leave A Reply

Your email address will not be published.