டொனால்ட் ட்ரம்பின் இஸ்ரேல் பலஸ்தீன சமாதானத் திட்டம்

0 581

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பினால் அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட மேற்­கா­சிய சமா­தா­னத்­திட்டம் இஸ்­ரே­லி­யர்கள் நீண்­ட­கா­ல­மாக விரும்­பி­வந்­ததை – அதா­வது, ஜெரு­ச­லேமை இஸ்­ரேலின் பிள­வு­ப­டாத தலை­ந­க­ராகக் கொண்ட பெரிதும் விரி­வான அர­சொன்று, எதிர்­கால பாலஸ்­தீன அர­சொன்று மீது இறுக்­க­மான பாது­காப்புக் கட்­டுப்­பாடும் – அவர்­க­ளுக்குக் கொடுப்­பதை நோக்­க­மாகக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்தத் திட்­டத்தை அறி­வித்­ததன் மூலம் இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கும், பாலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கும் இடை­யி­லான தடங்­க­லுக்கு உள்­ளான ‘இரு அரசு” பேச்­சு­வார்த்­தை­களைப் புதுப்­பிப்­ப­தற்கு ட்ரம்ப் உண்­மையில் ஊக்கம் கொடுத்­தி­ருக்­கிறார். ஆனால் அது, அவ­ரது சொந்த நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யில்தான்.
முன்னர் இரு அரசு தீர்­விற்கு எதி­ராகப் பேசிய இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாஹு, வெள்ளை மாளி­கையில் ட்ரம்­பிற்கு அருகே நின்­ற­வண்ணம் அவ­ரது திட்­டத்தை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கிறார். ஆனால் அங்கு பாலஸ்­தீ­னி­யர்கள் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை.

திட்டம் என்ன?
இஸ்­ரேலின் எல்லை, பாலஸ்­தீன அக­தி­களின் அந்­தஸ்த்து, மேற்கு ஆற்­றங்­க­ரையில் யூதக்­கு­டி­யேற்­றங்கள், இஸ்­ரே­லுக்கும் பாலஸ்­தீ­னத்­திற்கும் இடையில் நிலப்­ப­ரி­மாற்றம், இஸ்­ரேலின் பாது­காப்பு அக்­க­றைகள், ஜெரு­சலேம் நகரின் அந்­தஸ்து போன்ற சர்ச்­சைக்­கு­ரிய பிரச்­சி­னை­களில் பெரும்­பா­லா­ன­வற்றைக் கையாள்­வதில் ட்ரம்பின் திட்டம் நாட்டம் காட்­டு­கி­றது. அநே­க­மாக இந்­தப்­பி­ரச்­சி­னைகள் அனைத்­திற்கும் இஸ்­ரேலின் நிலைப்­பா­டு­க­ளுக்கு சாத­க­மான முறை­யி­லேயே ட்ரம்ப் யோச­னை­களை முன்­வைத்­தி­ருக்­கிறார். உதா­ர­ண­மாக மேற்கு ஆற்­றங்­க­ரை­யிலும், ஜோர்தான் பள்­ளத்­தாக்­கிலும் உள்ள யூதக்­கு­டி­யேற்­றங்­களை இணைத்­துக்­கொள்­வ­தற்கு இஸ்ரேல் அனு­ம­திக்­கப்­படும். வர­லாற்றுப் புகழ்­பெற்ற பாலஸ்­தீ­னத்தில் இஸ்­ரே­லிய அரசு பிர­க­டனம் செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து மூண்ட 1948 அரபு–இஸ்­ரே­லியப் போரின் போது தங்­க­ளது வீடு­வா­சல்­க­ளி­லி­ருந்து வெளி­யேற நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட பாலஸ்­தீன அக­திகள் தங்­க­ளது சொந்த இடங்­க­ளுக்குத் திரும்­பி­வர அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்கள். அந்த அக­திகள் எதிர்­கால பாலஸ்­தீன அர­சுக்கு வரலாம் அல்­லது தாங்கள் தற்­பொ­ழுது வாழும் நாடு­களின் சமூ­கங்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து கொள்­ளலாம் அல்­லது மத்­திய கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள ஏனைய பகு­தி­களில் குடி­யே­றலாம்.

மிகவும் சர்ச்­சைக்­கு­ரிய பிரச்­சி­னை­யாக விளங்­கி­வந்­தி­ருக்க்­க­கூ­டிய ஜெரு­சலேம் இஸ்­ரேலின் ‘பிள­வு­ப­டாத தலை­ந­க­ர­மாக” இருக்கும் அதே­வேளை, பாலஸ்­தீனம் நகரின் கிழக்குப் பகு­தியில் (இஸ்­ரே­லினால் ஏற்­க­னவே நிர்­மா­ணிக்­கப்­பட்ட பாது­காப்பு எல்­லைக்கு அப்பால்) அதன் தலை­ந­கரைப் பெற்­றுக்­கொள்­ளலாம். இதற்குக் கைமா­றாக மேற்கு ஆற்­றங்­க­ரையில் மேலும் குடி­யேற்­றங்­களைச் செய்யும் நட­வ­டிக்­கை­களை இஸ்ரேல் மேலும் நான்கு வரு­டங்­க­ளுக்கு (பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­கான கால­கட்டம்) நிறுத்­தி­வைக்கும். இந்தக் கால­கட்­டத்தின் போது இஸ்­ரே­லுக்கு எதி­ராக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் தற்­போது செய்­தி­ருக்கும் முறைப்­பா­டு­களை பாலஸ்­தீன அதி­கா­ர­சபை கைவிட்டு மேலும் நட­வ­டிக்­கைகள் எடுப்­பதைத் தவிர்க்க வேண்டும். ஹமாஸ் மற்றும் இஸ்­லா­மிய ஜிஹாத் போன்ற ‘பயங்­க­ர­வாதக் குழுக்­களை” ஒடுக்கும் நட­வ­டிக்­கை­க­ளையும் இஸ்ரேல் எடுக்­க­வேண்டும்.

இந்த யோச­னை­களை பாலஸ்­தீனம் ஏற்­றுக்­கொண்டால் 10 வரு­டங்­க­ளுக்கு 5000 கோடி டொலர்கள் முத­லீட்டை செய்­வ­தற்­கான யோச­னை­யையும் ட்ரம்ப் முன்­வைத்­தி­ருக்­கிறார். இறுதி இணக்­கத்­தீர்­வாக பாலஸ்­தீனம் தற்­போது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்கும் நிலப்­ப­கு­தி­யையும் விடக்­கூ­டு­த­லா­ன­ளவு நிலப்­ப­கு­தியைத் தனது கட்­டுப்­பாட்டின் கீழ் எடுக்­க­மு­டியும். (ஒஸ்லோ உடன்­ப­டிக்­கை­யின்­படி மேற்கு ஆற்­றங்­கரை மூன்­றாகப் பிரிக்­கப்­பட்­டது. அவற்றில் ஒரு பிரிவு மாத்­தி­ரமே பாலஸ்­தீன அதி­கா­ர­ச­பையின் நேர­டிக்­கட்­டுப்­பாட்டின் கீழ் தற்­போது இருக்­கி­றது). மேற்கு ஆற்­றங்­க­ரையில் மேற்­கொள்­ளப்­பட்ட யூதக்­கு­டி­யேற்­றங்­களை இஸ்ரேல் இணைத்­துக்­கொள்ளும் போது அதற்குப் பிர­தி­யு­ப­கா­ர­மாக சில நிலப்­ப­ரி­மாற்­றத்­திற்­கான யோச­னை­க­ளையும் ட்ரம்பின் திட்டம் முன்­வைத்­தி­ருக்­கி­றது. காஸா பள்­ளத்­தாக்கைப் பெரி­தாக்கி ஒரு சுரங்­கப்­பர்தை ஊடாக மேற்கு ஆற்­றங்­க­ரை­யுடன் அதனை இணைப்­ப­தற்­கான திட்­டமும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. காஸா­விற்கு நெருக்­க­மா­க­வுள்ள இஸ்­ரேலின் தென்­ப­கு­தி­யி­லுள்ள அரபு நக­ரங்கள் எதிர்­கால பாலஸ்­தீன அர­சொன்றின் பகு­தி­யாக மாறலாம்.

திட்டம் பயன்­த­ருமா?
கிழக்கு ஜெரு­ச­லேமை தலை­ந­க­ராகக் கொண்­டதும் (முஸ்­லிம்­க­ளி­னதும், யூதர்­க­ளி­னதும் புனித தல­மான ‘டெம்பிள் மௌண்ட்” என்றும் அறி­யப்­பட்ட ஹரம் எஷ் – ஷரீப் அமைந்­தி­ருக்கும் பழைய நகரம் உள்­ள­டங்­க­லாக) 1967 எல்­லையை (மேற்கு ஆற்­றங்­கரை மற்றும் காஸா பள்­ளத்­தாக்கு முழு­வதும்) அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­து­மான சுதந்­தி­ர­மான, இறை­யாண்மை மிக்க பாலஸ்­தீன அர­சொன்றை அமைப்­பதே பாலஸ்­தீ­னர்­களின் நிலைப்­பா­டாகும். இந்த நிலைப்­பாட்­டுக்கு உலக வல்­ல­ரசு நாடு­களில் பெரும்­பா­லா­னவை ஆத­ர­வாக இருந்­து­வ­ரு­கின்­றன.

தங்­க­ளது சொந்த இடங்­க­ளுக்குத் திரும்­பி­வ­ரு­வ­தற்­கான பாலஸ்­தீ­னர்­களின் உரிமை போன்ற பிரச்­சி­னைகள் இறுதிப் பேச்­சு­வார்த்­தையில் தீர்த்­து­வைக்­கப்­பட வேண்­டி­ய­வை­யாக இருக்­கின்­றன. ஆனால் பாலஸ்­தீ­னர்­களின் கோரிக்­கை­களைத் தீர்க்­க­மான முறையில் நிரா­க­ரித்­தி­ருக்கும் ட்ரம்ப், அவர்கள் மேலும் கூடுதல் விட்­டுக்­கொ­டுப்­பு­களைச் செய்­ய­வேண்டும் என்று கேட்­டி­ருக்­கிறார். ஜெரு­ச­லே­மையும். மேற்கு ஆற்­றங்­க­ரையில் சுமார் 30 சத­வீ­த­மான பகு­தி­யையும் இஸ்­ரே­லி­யர்­க­ளுக்குக் கொடுப்­ப­தற்கு நாட்டம் காட்டும் அவர், சொந்த இடங்­க­ளுக்குத் திரும்­பு­வ­தற்குப் பாலஸ்­தீ­னர்­க­ளுக்கு இருக்கும் உரி­மையை நிரா­க­ரித்­தி­ருக்­கிறார் – இது­வெல்லாம் நடை­மு­றையில் இஸ்­ரே­லினால் சூழப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய பாலஸ்­தீன அர­சொன்­றுக்குத் துண்­டா­டப்­பட்ட இறை­யாண்­மையை விட்­டு­வைக்கும் நோக்­கி­லா­ன­வையே. இவற்றைப் பெறு­வ­தற்குக் கூட பாலஸ்­தீ­னர்கள் தீவி­ர­வா­தக்­கு­ழுக்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும், இஸ்­ரே­லினால் சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட அல்­லது கொல்­லப்­பட்­ட­வர்­களின் பாலஸ்­தீனக் குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பதை நிறுத்­த­வேண்டும். இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பு குறித்து சர்­வ­தேச அரங்­கு­களில் கேள்வி எழுப்­பு­வதைத் தவிர்க்­க­வேண்டும் என்ற நிபந்­த­னைகள் விதிக்­கப்­ப­டு­கின்­றன.

மேற்கு ஆற்­றங்­க­ரையில் பாலஸ்­தீன அதி­கா­ர­ச­பையை ஜனா­தி­பதி மப்முத் அஹ்பாஸ் தலை­மை­யி­லான பதாஹ் கட்­சியே நிர்­வ­கிக்­கின்ற அதே­வேளை, காஸா பள்­ளத்­தாக்கு ஹமாஸ் இயக்­கத்­தினால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. இவை இரண்­டுக்கும் இடையில் கடு­மை­யான பிணக்­குகள் இருந்­து­வ­ரு­கின்ற போதிலும் ட்ரம்பின் சமாதானத்திட்டத்தை நிராகரிப்பதில் அவை ஒன்றிணைந்திருக்கின்றன. இஸ்லாமிய ஜிஹாத்தும் அந்தத் திட்டத்தை நிராகரித்திருக்கிறது. பல தசாப்தங்களாக ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் ட்ரம்பின் யோசனைகளைக் கொண்டுசெல்வது எந்தவொரு பாலஸ்தீன தலைவருக்கும் சிக்கலானதாகவே இருக்கும். ட்ரம்ப் தனது திட்டத்தை வெளியிடுவதற்கு முன்னதாகவே அவர்கள் அதிலடங்கி யுள்ள யோசனைகளை நிராகரித்து விட்டார்கள்.

சர்ச்சைக்குரிய ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்திருப்பதுடன், மேற்கு ஆற்றங்கரையிலுள்ள யூதக் குடியேற்றங்கள் இணைக்கப்படு வதையும் ஆதரிக்கின்ற ட்ரம்ப் நிர்வாகம், சமாதான முயற்சிகளுக்குப் பக்கச்சார்பற்ற ஒரு மத்தியஸ்தராக இருக்கமுடியாது என்று பாலஸ்தீனியர்கள் கூறுகின்றார்கள்.

ட்ரம்பின் திட்டம் இந்த வாதத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவது போல் தெரிகிறது.-Vidivelli

  • ஸ்டான்லி ஜொனி

Leave A Reply

Your email address will not be published.