விமான கொள்வனவு ஊழலில் தேடப்பட்ட கபில சந்திரசேன மனைவியுடன் சரண்

நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 19 ஆம் திகதிவரையில் விளக்கமறியல்

0 199

இலங்கை விமான சேவையின் முன்னாள் பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கபில சந்­தி­ர­சேன, அவ­ரது மனைவி பிரி­யங்கா நியோ­மாலி விஜ­ய­நா­யக்க ஆகியோர் நேற்று சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­தி­னரால் கைது செய்­யப்­பட்­டனர். குறித்த இரு­வரும் நேற்றுக் காலை குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் சர­ண­டைந்­த­தை­ய­டுத்து இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டனர். இந்­நி­லையில் கைது செய்­யப்­பட்ட இரு­வரும் நேற்று பிற்­பகல் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கமுன்ன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போது அவர்­களை எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

2013 ஆம் ஆண்டு எயார்பஸ் ரக விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய பிரான்ஸ் நிறு­வனம் ஒன்­றுடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒப்­பந்­தத்­தை­ய­டுத்து இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் நிதி முறை­கே­டு­களை மையப்­ப­டுத்தி கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் குறித்த இரு­வ­ரையும் கைது செய்த சி.ஐ.டி. நீதி­மன்றில் ஆஜர் செய்­தி­ருந்­தது. 2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி இவ்­வாறு சட்ட விரோ­த­மாகக் கையா­ளப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்­க­ளான குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சார்பில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் துஷித் முத­லிகே நீதி­மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.

நேற்­றைய தினம் சந்­தேக நபர்கள் இரு­வரும் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போது சி.ஐ.டி. சார்பில் விசா­ரணை அதி­கா­ரி­க­ளான உப­பொலிஸ் பரி­சோ­தகர் விமல் ஜய­வீர மற்றும் பொலிஸ் சார்ஜன் திஸா­நா­யக்க உள்­ளிட்டோர் மன்றில் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் ஆஜ­ரா­கினர். அவர்கள் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் துஷித் முத­லிகே மன்றில் பிர­சன்­ன­மானார்.

முதல் சந்­தேக நப­ரான இலங்கை விமான சேவையின் முன்னாள் பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கபில சந்­தி­ர­சேன சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரனி அனுஜ பிரே­ம­ரத்­னவும், 2 ஆவது சந்­தேக நப­ரான பிரி­யங்கா நியோ­மாலி விஜ­ய­நா­யக்க சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் லத்­து­வ­ஹெட்­டியும் மன்றில் ஆஜ­ரா­கினர்.

இந்­நி­லையில் சந்­தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் துஷித் முத­லிகே மன்றில் விட­யங்­களை முன்­வைத்தார்.

“கனம் நீதிவான் அவர்­களே, நேற்று ( நேற்று முன் தினம்) மாலை இவ்­விரு சந்­தேக நபர்­களும் இன்று (நேற்று) சி.ஐ.டியில் சர­ண­டை­வ­தாக சட்­டத்­த­ரணி ஊடாக அறி­வித்­தி­ருந்­தனர். அதன்­படி அவர்கள் சி.ஐ.டியில் சர­ண­டைந்த பின்னர் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட ஸ்டேன்டட் சார்டட் தனியார் வங்­கியின் அறிக்கை பிர­காரம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 3 வங்­கிக்­க­ணக்­குகள் 2 ஆம் சந்­தேக நப­ருக்­கு­ரி­யது. அது­கு­றித்து மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. இவர்­களைக் கைது செய்ய முன்னர் கடந்த 2016 முதல், முதல் சந்­தேக நப­ரிடம் 7 தட­வை­களும், 2 ஆவது சந்­தேக நப­ரிடம் 3 தட­வை­களும் சி.ஐ.டி. விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வாக்­கு­மூலம் பெற்­றது. அப்­போது அவர்கள் இக்­க­ணக்கு தொடர்பில் எத­னையும் கூற­வில்லை.

சி.ஐ.டி. அழைக்­கும்­போது அவ்­வி­ரு­வரும் வந்து வாக்­கு­மூலம் கொடுத்­தனர்.

எனினும் தற்­போது சிங்­கப்­பூ­ரி­லுள்ள 3 கணக்­குகள் குறித்து தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அந்த வங்கிக் கணக்­குக்கு பிரான்ஸ் நிறு­வ­னத்­தி­லி­ருந்து வைப்பு செய்­யப்­பட்ட 2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள், பின்னர் வெளி­நாட்டில் உள்ள சில கணக்­கு­க­ளுக்கும் உள்­நாட்டில் சில வங்கிக் கணக்­கு­க­ளுக்கும் மாற்­றப்­பட்­டுள்­ளன.

இலங்­கைக்குள் அந்த பணம் மாற்­றப்­பட்ட சில வங்கிக் கணக்­குகள் தொடர்பில் விசா­ர­ணைகள் செய்ய வேண்­டி­யுள்­ளது. அது­கு­றித்த தக­வல்­களை தற்­போ­தைக்கு வெளிப்­ப­டுத்த முடி­யாது. அந்த விசா­ர­ணை­களை தடை­யின்றி முன்­னெ­டுக்க வேண்­டு­மாயின் சந்­தேக நபர்கள் விளக்­க­ம­றி­யலில் இருக்க வேண்டும். எனவே, அந்த விசா­ர­ணைகள், வாக்­கு­மூ­லங்­களைப் பெற்­றுக்­கொள்ளும் வரை சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் குறு­கிய நாட்­க­ளுக்கு விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கோரு­கின்றேன்” என்றார்.

இத­னை­ய­டுத்து முதல் சந்­தேக நபர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்ன வாதங்­களை முன்­வைத்தார்.

“கனம் நீதிவான் அவர்­களே, இந்த விசா­ர­ணை­க­ளுக்கு நாம் பூரண ஒத்­து­ழைப்புக் கொடுத்­துள்ளோம். இவ்­வ­ளவு நாள் நாம் விசா­ர­ணை­க­ளுக்கு எந்த இடை­யூறும் செய்­யாமல் இனிமேல் செய்ய வேண்­டிய எந்த அவ­சி­யமும் எமக்­கில்லை. நாம் விசா­ர­ணை­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம் என்­பது ஒரு கற்­ப­னையே. எனவே அதனை நிரா­க­ரித்து எனது சேவை பெறு­ந­ருக்கு பிணை­ய­ளிக்­கவும்” என கோரினார்.

இதன்­போது குறுக்­கிட்ட நீதிவான் ரங்க திஸா­நா­யக்க, இந்த விசா­ரணை 2016 முதல் இடம்­பெ­று­கின்­றன. அப்­படி இருக்­கையில் கடந்த ஜன­வரி 31 ஆம் திகதி சந்­தேக நபர்கள் தமது வெளி­நாட்டுப் பயணத் தடையை நீக்க நீதி­மன்றை நாடினர். அத­னை­ய­டுத்து அவர்­களைக் கைது­செய்ய ஏற்­பட்ட விஷேட தேவை என்­ன­வென முறைப்­பாட்­டாளர் தரப்­பிடம் கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் துஷித் முத­லிகே பதி­ல­ளித்தார்.

‘கனம் நீதிவான் அவர்­களே, உண்­மையில் 31 ஆம் திகதி மாலையே சி.ஐ.டி. இந்த விவ­கா­ரத்தில், சந்­தேக நபர்கள் வெளி­நாடு செல்ல முற்­ப­டு­வது குறித்த விட­யத்தை கூறி ஆலோ­சனை கோரினர். பின்னர் அவர்­களே அந்த கோரிக்­கையை மீளப் பெற்­றுக்­கொன்­டுள்­ளனர்.

உண்­மையில் இந்த விசா­ரணை சர்­வ­தேச ரீதியில் இடம்­பெ­று­வ­தாகும். இலங்கை, சிங்­கப்பூர், பிரித்­தா­னியா, அவுஸ்­தி­ரே­லியா, புரூனை உள்­ளிட்ட நாடு­க­ளுடன் இவ்­வி­சா­ரணை தொடர்­பு­பட்­டது.

கடந்த 2 ஆம் திகதி ஊட­கங்­களில் பிரித்­தா­னி­யா­வினால் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட எயார் பஸ் கொடுக்கல் வாங்­கல்­களின் போதான இலஞ்சம் கோரிய விட­யங்கள் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டன. அதில் இலங்­கையின் விப­ரங்­களும் இருந்­தன. அதுவும் கூட இதில் தாக்கம் செலுத்­தி­யி­ருக்க முடியும் ‘ என்றார்.

இத­னை­ய­டுத்து ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்ன, கனம் நீதிவான் அவர்­களே, பிரித்­தா­னி­யா­வினால் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட விட­யங்­களை நான் இம்­மன்றில் இருந்­த­போது வட்ஸ்அப் ஊடாக அறிந்தேன். அத­னா­லேயே நான், வெளி­நாட்டுப் பயணத் தடை நீக்கம் தொடர்பில் செய்த கோரிக்­கையை வாபஸ் பெற்றேன்’ என்றார்.

அதன் பின்னர் 2 ஆவது சந்­தேக நபர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி லத்­து­வ­ஹெட்­டியும் பிணை கோரினார். 2016 முதல் இடம்­பெறும் விசா­ர­ணை­களில், இது­வரை எந்த தடங்­கல்­க­ளையும் ஏற்­ப­டுத்­தா­தோரை, ஒரு சிறு பகுதி எஞ்­சி­யுள்­ள­தெனக் காட்டி விளக்­க­ம­றி­யலில் வைக்கத் துடிக்­கின்­ற­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென அவர் வாதிட்டார்.

எனினும் இவற்­றுக்குப் பதி­ல­ளித்த பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் துஷித் முத­லிகே, உள்­நாட்டு வங்­கிக்­க­ணக்­குகள் சில­வற்றை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணை­களை வெற்­றி­க­ர­மாக செய்­து­கொள்­ளவே தான் இவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க கோரு­வ­தா­கவும், அதுவும் நீண்ட நாட்­க­ளுக்கு அல்­லாமல் குறு­கிய நாட்­க­ளுக்குள் அதனை முடி­வு­றுத்த எதிர்­பார்ப்­ப­தா­க­வ­கவும் கூறினார்.

இத­னை­ய­டுத்து தனது உத்­த­ரவைப் பிறப்­பித்த நீதிவான் ரங்க திஸா­நா­யக்க, சந்­தேக நபர்கள் இரு­வரும் பிணையில் இருப்பின் எஞ்­சி­யி­ருக்கும் விசா­ர­ணை­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டலாம் என்­பதைக் கருத்­திற்­கொண்டு அவ்­வி­ரு­வ­ரையும் எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

இந்த நிதி மோசடி விவ­காரம் தொடர்பில் பி14363f9 எனும் வழக்கு இலக்­கத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சி.ஐ.டி. இலங்கை விமான சேவைக்கு விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­யும்­போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் முறை­கே­டுகள் தொடர்பில் விசா­ரணை செய்து வந்­தது. அதன்­படி அது­கு­றித்த விசா­ரணை அறிக்­கையை சட்­டமா அதி­பரின் ஆலோ­சனை பெற்­றுக்­கொள்ள சி.ஐ.டி. கடந்த ஜன­வரி 31 ஆம் திகதி சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பி­யது. அத­னுடன் இணைத்து 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்­ற­வியல் விட­யங்­களின் போதான பரஸ்­பர ஒத்­து­ழைப்பு சட்­டத்தின் பிர­காரம் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து பெற்­றுக்­கொண்ட விஷேட ஆவ­ணமும் சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பப்­பட்­டது. அவற்றை ஆராய்ந்த சட்­டமா அதிபர் சி.ஐ.டியின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெத­சிங்­க­வுக்கு விஷேட ஆலோ­ச­னை­களை அனுப்பி வைத்தார்.

சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னையின் பிர­காரம் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட ஸ்டேன்டட் சார்டட் தனியார் வங்­கியின் மூன்று கணக்கு இலக்­கங்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. பிஸ் சொலுஷன் எனும் நிறு­வ­னத்தின் பெயரில் உள்ள அந்தக் கணக்கு இலக்­கங்கள் தொடர்பில் 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்­ற­வியல் விட­யங்­களின் போதான பரஸ்­பர ஒத்­து­ழைப்பு சட்­டத்தின் பிர­காரம் நீதி அமைச்சின் ஊடாகப் பெற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

அதன்­படி பிஸ் சொலுஷன் எனும் நிறு­வனம் பிரி­யங்கா நியோ­மாலி விஜ­ய­நா­யக்க என்­ப­வரின் பெயரில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­மையும் அதன் பணிப்­பாளர், ஒரே பங்­கு­தாரர் அவரே என்­பதும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அந்­நி­று­வ­னத்தின் பெய­ரி­லுள்ள 0107130602 எனும் இலக்­கத்தை உடைய வங்கி கணக்­குக்கு 2013.12.27 அன்று 2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணம் வைப்பு செய்­யப்­பட்­டுள்­ளது.

EADS HQ/ SSC பிரான்ஸ் எனும் நிறு­வனம் ஊடா­கவே அப் பணம் வைப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. அந்தப் பணத் தொகை­யா­னது பின்னர் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பொது­நல வாய வங்­கியில் உள்ள கபில சந்­தி­ர­சே­னவின் 06323610119179 எனும் வங்கி கணக்­குக்கு 4 சந்­தர்ப்­பங்­களில் வைப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. 2014.05.08 அன்று ஒரு இலட்சம் யூரோக்­களும் 2014.07.07 அன்று ஒரு இலட்சம் யூரோக்­களும் 2014.08.07 அன்று 2 இலட்சம் அவுஸ்­தி­ரே­லிய டொலர்­களும் 2014.09.17 அன்று 2 இலட்சம் யூரோக்­களும் இவ்­வாறு அந்தக் கணக்­கு­க­ளுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளன. அதன் பின்னர் 2015.11.25 அன்று 0107130602 எனும் வங்கி கணக்கு மூடப்­பட்­டுள்­ளது. அதன் போது அதில் ஒரு சத­மேனும் மிகுதி இருக்­க­வில்லை என சிங்­கப்பூர் ஊடாக பெற்றுக் கொள்­ளப்­பட்ட விஷேட அறிக்­கையில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லையில் சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் இலங்கை விமான சேவை நிறு­வனம் 2013.05.16 அன்று பிரான்ஸ் எயார் பஸ் எஸ்.ஏ.எஸ். நிறு­வ­னத்­துடன் ஏ–330 –- 900 ரக விமா­னங்கள் நான்­கி­னையும் ஏ–330 –- 300 ரக விமா­னங்கள் 6 இனையும் கொள்­வ­னவு செய்ய புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்கள் இரண்டில் கைசாத்­திட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் பிரான்ஸ் எயார் பஸ் எஸ்.ஏ.எஸ். நிறு­வ­னமே EADS HQ/ SSC பிரான்ஸ் எனும் நிறு­வனம் என்பதும் விசாரணைகளில் தெரியவந்தது. இதனைவிட கபில சந்திரசேன இலங்கை விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக 2011.08.01 அன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் 2015 ஜனவரி வரை அப்பதவியில் அவர் இருந்துள்ளார். அத்துடன் பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க என்பவர் கபில சந்திரசேனவின் சட்ட ரீதியான மனைவி என்பதும் விசாரணையாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அனைத்து விடயங்களையும் ஆராய்ந்துள்ள சட்ட மா அதிபர் முறைப்பாட்டாளர் தரப்பு அறியாத நபர்கள், நிறுவனங்களுடன் சேர்ந்து கபில சந்திரசேனவும் அவரது மனைவியும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டலாக அல்லது சட்ட விரோதமான பரிசாக பெற்றுக் கொண்டுள்ளமையும் கறுப்பு பண சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் நியாயமான சந்தேகம் எழுவதால் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டு கைது உத்தரவை பெற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கியிருந்தார். அதன் பிரகாரமே குறித்த கைது உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டு நேற்று அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். -Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.