சுதந்திர தின உரையினை செயல் வடிவமாக்குங்கள்

மங்கள சமரவீர ஜனாதிபதியிடம் கோரிக்கை

0 629

72 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வில் ஜனா­தி­பதி கோத்­தா­பய
ராஜ­பக் ஷ நிகழ்த்­திய உரை மிகவும் சிறப்­பா­ன­தாக இருந்­த­தாகக் குறிப்­பிட்­டி­ருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர, உரையில் குறிப்­பிட்ட விட­யங்­களை ஜனா­தி­பதி நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அத்­தோடு 1948 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட பயணம் சிறந்த உரை­களை நிகழ்த்­திய நன்­நோக்கம் கொண்ட தலை­வர்­களைக் கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் இது செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டிய தரு­ண­மாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

நேற்று செவ்வாய்க் கிழமை சுதந்­திர சதுக்­கத்தில் இடம்­பெற்ற நாட்டின் 72 ஆவது சுதந்­திர தின வைப­வத்தில் உரை நிகழ்த்­திய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ, ‘இலங்­கையின் பிர­ஜைகள் அனை­வ­ருக்கும் சுதந்­தி­ர­மா­கவும், பாது­காப்­பா­கவும் வாழ்­வ­தற்­கான உரிமை இருக்­கி­றது. அதே­போன்று அவர்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய சுதந்­தி­ர­மாக சிந்­தித்தல், தனிப்­பட்ட அபிப்­பி­ரா­யங்­களைக் கொண்­டி­ருப்­ப­தற்­கான சுதந்­திரம், கருத்­துச்­சு­தந்­திரம் ஆகிய உரி­மை­களை உறு­தி­செய்­வ­தற்கு நாம் முனைப்­புடன் செய­லாற்­றுவோம்’ என்று உறு­தி­ய­ளித்­த­துடன், மேலும் பல விட­யங்கள் குறித்தும் பேசி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியின் உரை தொடர்பில் முன்னாள் அமைச்­சரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மங்­கள சம­ர­வீர தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­வொன்றைச் செய்­தி­ருக்­கிறார்.

அதில் அவர் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது:

‘இன்­றைய தினம் (நேற்று) ஜனா­தி­ப­தியின் உரை மிகவும் சிறப்­பா­ன­தாக இருந்­தது. தற்­போது அவர் கூறி­ய­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். மிகவும் கடி­ன­மான தீர்­மா­னங்­களை ஒரு ஜன­நா­யகக் கட்­ட­மைப்­பிற்குள் நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடி­ய­வரே சிறந்த வலு­வான தலை­வ­ராவார். 1948 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் சிறந்த உரைகளை நிகழ்த்திய நன்நோக்கம் கொண்ட தலைவர்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் இது செயற்பட வேண்டிய தருணமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.