வைரஸ்: சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலை பின்பற்றுவோம்

0 625

கொரோனா வைரஸின் தாக்கம் சீனா­வி­லி­ருந்து உலகின் பல நாடு­க­ளுக்கு வியா­பித்­துள்­ளமை சர்­வ­தே­சத்தில் பெரும் பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நேற்று முன்­தினம் இலங்­கை­யிலும் கொரோனா வைரஸ் தாக்­கத்­திற்­குள்­ளான சீனப் பெண்­ம­ணி­யொ­ருவர் இனங்­கா­ணப்­பட்­டுள்ளார்.

இலங்­கைக்கு சுற்­றுலா விசாவில் கடந்த 19 ஆம் திகதி வருகை தந்த 43 வய­தான சீனப் பெண்­ம­ணியே அவ­ராவார். அங்­கொடை தொற்று நோய்த்­த­டுப்பு வைத்­தி­ய­சா­லையில் நடாத்­தப்­பட்ட இரத்தப் பரி­சோ­தனை மற்றும் உயி­ரியல் பரி­சோ­த­னை­களில் இது ஊர்­ஜிதம் செய்­யப்­பட்­டுள்­ளது.

சீனாவின் ஹுபே பிராந்­தி­யத்­தி­லி­ருந்து ஒரு குழு­வி­ன­ருடன் உல்­லாச பய­ணி­யாக வரு­கை­தந்த குறிப்­பிட்ட பெண்­மணி அவ­ருடன் வரு­கை ­தந்­த­வர்கள் நாடு­தி­ரும்­பிய நிலையில் அவர் காய்ச்சல் கார­ண­மாக ஐ.டி.எச். வைத்­தி­ய­சா­லையில் அனு­மதிக்கப்பட்டிருந்தார்.

இலங்­கையில் கொரோனா வைரஸ் நோயா­ளி­யான சீனப் பெண்­மணி இனங்­கா­ணப்­பட்­டதன் பின்பு அர­சாங்கம் பல முன்னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எ­டுத்­துள்­ளது. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் சிறப்பு ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அம்­பி­யூலன்ஸ் வண்­டிகள் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளன. விமான நிலை­யத்­துக்குள் செல்­வ­தற்கு பய­ணிகள் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர்.

கொரோனா வைர­ஸி­லி­ருந்தும் நாட்டு மக்­களைப் பாது­காப்­ப­தற்­கான முன் ஏற்­பா­டு­க­ளுக்­காக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் 22 பேர் கொண்ட தேசிய செயற்­பாட்டுக் குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து கொழும்­புக்கு வரு­ப­வர்கள் ‘மாஸ்க்’ அணிந்­து­கொள்­ளு­மாறு சுகா­தார அமைச்சு பொது மக்­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்ள சீனப் பெண்­ம­ணி­யுடன் இலங்கை வந்த உல்­லாச பயண குழு­வினர் நாட்டின் பல பாகங்­க­ளுக்கு விஜயம் செய்­துள்­ளனர். அவர்கள் சென்ற இடங்கள், தங்­கி­யி­ருந்த ஹோட்­டல்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும் சுகா­தார அதி­கா­ரிகள் அவ் இடங்­களில் விஷேட பரி­சோ­த­னை­களை நடாத்­தி­யுள்­ள­தா­கவும் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் விஷேட வைத்­தியர் அனில் ஜய­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அரசும், சுகா­தார அமைச்சும் மேற்­கொண்டு வரும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும். அதேநேரம் பொது­மக்கள் சுகா­தார அமைச்சின் அறி­வு­றுத்­தல்­களை முறை­யாகப் பின்­பற்­று­வது அவ­சி­ய­மாகும்.

கடந்த ஓரிரு நாட்­களில் 204 இலங்கை மாண­வர்கள் இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்­டி­ருக்­கி­றார்கள். நேற்றும் இன்றும் மேலும் ஒரு தொகுதி மாண­வர்கள் அழைத்­து­வ­ரப்­பட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

கொரோனா வைரஸ் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக நாடெங்கும் 11 வைத்­தி­ய­சா­லை­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட அறைகள் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜய­சிங்க அறிக்கை விட்­டுள்ளார்.

ஐ.டி.எச். இற்கு மேல­தி­க­மாக ராகம, கம்­பஹா, கண்டி, நீர்­கொ­ழும்பு, கரா­பிட்­டிய, அநு­ரா­த­புரம், யாழ்ப்­பாணம், குரு­நாகல், மட்­டக்­க­ளப்பு, இரத்­தி­ன­புரி மற்றும் பதுளை வைத்­தி­ய­சா­லைகளே இவ்­வாறு ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

ஏ.எப்.பி. செய்திச் சேவை வழங்­கி­யுள்ள தக­வல்­க­ளின்­படி அவுஸ்­தி­ரே­லியா 5, தென்­கொ­ரியா 4, காம்­போ­டியா 1, இலங்கை 1, ஜப்பான் 4, தாய்வான் 5, மலே­சியா 4,, தாய்­லாந்து 8, நேபாளம் 1, வியட்நாம் 2, கனடா 5, சிங்­கப்பூர் 5, அமெ­ரிக்கா 5, பிரான்ஸ் 3, ஜெர்­மனி 1 எனும் எண்­ணிக்­கை­யி­லானோர் கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சீனாவில் நேற்று வரை 106 பேர் பலியாகியுள்ளனர். உலக சுகா­தார அமைப்பின் தலைவர் உட்­பட விஷேட குழு­வொன்று நிலை­மை­களை ஆராய்­வ­தற்­காக சீனா சென்­றுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதேவேளை சீன மக்களும்,  சீன நாடும், வைரஸ்  தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள ஏனைய நாடுகளும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டி நாம் பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்ற அதேநேரம் இவ் வைரஸ் குறித்து விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அரசாங்கம் என்னதான் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பின்றி இதில் வெற்றியடைய முடியாது. எனவேதான் மக்கள் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.