உலக கல்வி தினம் 2020: மக்கள்.பூகோளம்,சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல்

0 1,421

2020 ஜன­வரி 24 ஆம் திகதி உலக கல்வி தினத்தை உலகம் கொண்­டா­டு­கி­றது. மனித நல­னையும், நிலை­யான அபி­வி­ருத்தி இலக்­கு­க­ளையும் அடை­வதில் கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை கௌர­விக்­கு­மு­க­மாக ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இந்தத் தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ்­வாண்டின் கல்வி தினம் கல்­வி­யையும் அதனைக் கற்­ற­லையும் மனி­த­கு­லத்தின் மிகப் பெரிய புதுப்­பிக்­கத்­தக்க வள­மாக நிலை­நி­றுத்­து­கி­றது. அத்­தோடு, அடிப்­படை உரி­மைக்கும் பொது நன்­மைக்­கு­மான அதன் வகி­பா­கத்தை மீள் உறு­திப்­ப­டுத்­து­கி­றது. அந்த வகையில் நிலை­யான அபி­வி­ருத்­திக்­கான 2030 நிகழ்ச்சி நிரலை இது செயற்­ப­டுத்­து­கி­றது. இது ‘அனை­வ­ருக்கும் சம­மா­னதும் தர­மா­ன­து­மான கல்வி மற்றும் அனை­வ­ருக்கும் வாழ்நாள் முழு­வதும் கல்வி’ என்ற இலக்­கி­னுள் அடங்­கு­கி­றது.

2020 நிகழ்ச்சி நிரலில் கல்­வியை வழி­ந­டத்த ஐ.நா.வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஆணையின் அடிப்­ப­டையில், யுனெஸ்கோ அத­னு­டைய வளங்­களைப் பயன்­ப­டுத்தி, கல்வி மற்றும் மேம்­பாட்­டுக்­கான பங்­கா­ளர்­க­ளுடன் இணைந்து உல­கெங்­கிலும் இத்­தி­னத்தைக் கொண்­டா­டு­வதன் மூலம் கல்­வியால் மக்­களை வளப்­ப­டுத்­து­வ­திலும், பூகோ­ளத்தைப் பாது­காத்­த­லிலும், சுபீட்­சத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும், அமை­தியை வளர்ப்­ப­திலும் கவனம் செலுத்­து­கி­றது.

2020 ஆம் ஆண்டின் கருப்­பொருள் ‘மக்கள், பூகோளம், சுபீட்சம் மற்றும் அமை­திக்­கான கற்றல் என்­ப­தாகும். கல்­வியின் ஒருங்­கி­ணைந்த தன்மை, அதன் மனி­த­நேய நோக்­கங்கள், அத்­துடன் நமது கூட்டு வளர்ச்சிக் குறிக்­கோள்­க­ளுக்­கான மையத்­தன்மை ஆகி­ய­வற்றை இது அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளது.

மக்கள்

கல்­விக்­கான மனி­த­நேய அணு­கு­முறை, கல்­வியின் பல தனிப்­பட்ட மற்றும் கூட்டு நோக்­கங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைந்த அணு­கு­மு­றையைக் குறிக்­கி­றது. கல்வி என்­பது தனிப்­பட்ட மற்றும் சமூக வளர்ச்­சி­யினை மைய­மாகக் கொண்­டது. அனைத்து மக்­களும் தங்கள் திற­மை­களை முழு­மை­யாக வளர்த்­துக்­கொள்ள உத­வு­வதும், அவர்­களின் சொந்த வாழ்க்­கையின் பொறுப்பு மற்றும் சமூ­கத்­திற்கு பங்­க­ளிக்கும் திறன் உள்­ளிட்ட அவர்­களின் படைப்புத் திறன்­களை உணர்ந்து கொள்­வதும் இதன் நோக்கம். கல்வி என்­பது, வறுமை மற்றும் சமத்­து­வ­மின்­மையை எதிர்த்துப் போரா­டு­வது, உடல்­நலம் மற்றும் நல்­வாழ்வை மேம்­ப­டுத்­து­வது, பாகு­பாட்டை எதிர்­கொள்­வது போன்­ற­வற்­றுக்­கான ஒரு சக்­தி­வாய்ந்த வினை­யூக்­கி­யாகும். மேலும் தனி­ந­பர்கள் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கையை வாழ்­வ­தற்கும் தமக்கும், அவர்­க­ளது குடும்­பங்­க­ளுக்கும், சமூ­கங்­க­ளுக்கும் ஆய்­வு­ரீ­தி­யான முடி­வு­களை எடுப்­ப­தற்கும் அது இன்­றி­ய­மை­யா­தது. இது ஜன­நா­ய­கத்­தையும் சட்­டத்தின் ஆட்­சி­யையும் வலுப்­ப­டுத்த உதவும். அத்­துடன் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய மக்­களை மேம்­ப­டுத்­து­வதன் மூலம் சமத்­து­வத்தை மேம்­ப­டுத்த உதவும். இறு­தியில், வறுமை, பாலின சமத்­து­வ­மின்மை மற்றும் சமூகத் தனிமை போன்ற பல பரி­மாண சமூக சவால்­களை எதிர்­கொள்ள கல்வி நமக்கு உத­வு­கி­றது.

பூகோளம்

தனிப்­பட்ட மற்றும் கூட்டு மனித நட­வ­டிக்­கைகள் பூகோ­ளத்­திற்கும் அதன் இருப்­புக்கும் பெரும் அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன. சுற்­றுச்­சூழல் சீர­ழிவு, விரை­வான பல்­லுயிர் இழப்பு மற்றும் கால­நிலை மாற்றம் போன்­ற­வற்றை ஏற்­ப­டுத்தும் அதி­க­ரித்­து­வரும் அவ­சரப் போக்­கு­களை அவ­தா­னிக்­கையில், தற்­போ­தைய அபி­வி­ருத்தி முறை­களில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்கள் செய்­யா­விட்டால் மனித உயிர்­வாழ்வு ஆபத்­தா­ன­தாக மாறு­மென விஞ்­ஞா­னிகள் நமக்கு நினை­வூட்­டு­கி­றார்கள். முறை­யான, முறை­சாரா கற்றல் வாய்ப்­பு­க­ளி­னூ­டாக சுற்­றுச்­சூ­ழலின் நிலை­யான இருப்பு பற்­றிய அறி­வுள்ள சிறந்த சமூ­க­மொன்றை அரசு, சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் முன்­மு­யற்­சி­க­ளுடன் இணைந்து உரு­வாக்க முடியும். கல்­வியின் பெறு­மா­னங்கள் முன்­மா­தி­ரி­களை வடி­வ­மைக்­கி­றது. இது திறன்கள், கருத்­துகள் மற்றும் கரு­வி­களின் வளர்ச்­சிக்கு பங்­க­ளிக்­கி­றது. அவை நீடித்த நடை­மு­றை­களை மாற்­றி­ய­மைக்­கவோ அல்­லது நிலை­நி­றுத்­தவோ உத­வு­கின்­றன. மேலும் இயற்­கை­யான உல­கத்­துடன் மனி­தர்கள் ஒன்றி வாழ வழி­ய­மைக்­கின்­றன.

சுபீட்சம்

யாரையும் விட்­டு­வைக்­காத மொத்­த­மான வளர்ச்­சிக்கு வாழ்க்­கைத்­திறன் உள்­ளிட்ட கல்வி அவ­சி­ய­மா­னது. கல்­வியும் பயிற்­சியும் சம­மாக வழங்­கப்­பட்டால், அது வேலை வாய்ப்­பு­களை மேம்­ப­டுத்­தவும், ஏழை­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்­கவும், சமத்­து­வ­மின்­மையைக் குறைக்­கவும் உதவும். கல்­வியில் ஏற்­றத்­தாழ்வைக் குறைப்­பது பின்­தங்­கிய குழுக்­க­ளையும் நெறிப்­ப­டுத்­து­வ­தற்­காக அணுகும் வாய்ப்பை அதி­க­ரிக்கும். யுனெஸ்கோ நடத்­திய ஆய்­வின்­படி, நிலை­யான அபி­வி­ருத்தி இலக்கு 4 ஐ நடை­மு­றைப்­ப­டுத்­தினால், அனைத்து மக்­களும் உயர்­கல்­வியை முடித்தால், உலக வறுமை பாதி­யாகக் குறைக்­கப்­ப­ட­லா­மெனத் தெரி­விக்­கி­றது.

சமா­தானம்

தொடர்ச்­சி­யான வன்­முறை மற்றும் ஆயுத மோதல்கள் அனைத்து மனித உரி­மை­க­ளையும் மதிப்­பி­ழக்கச் செய்­கின்­றன. மேலும் அவை பெரும்­பாலும் கல்வி உரி­மையை மீறு­கின்­றன. வன்­மு­றையைத் தடுப்­ப­தற்கும், நிலை­யான அமை­தியை அடை­வ­தற்கும் ஜன­நா­யக மற்றும் பிர­தி­நி­தித்­துவ நிறு­வ­னங்­களும் நன்கு செயற்­படும் நீதிக் கட்­ட­மைப்பும் அவ­சி­ய­மா­னது. கல்வி என்­பது அர­சியல் பங்­கேற்பு, உள்­ள­டக்கம், வாதி­டுதல் மற்றும் ஜன­நா­யகம் ஆகி­ய­வற்­றுக்­கான ஒரு நிபந்­த­னை­யாகும். கல்வி, அமை­தியை ஊக்­கு­விக்கும். 50 ஆண்­டு­களில் 100 நாடு­களின் தர­வு­க­ளுடன் மேகொள்­ளப்­பட்ட சமீ­பத்­திய ஆய்வில் , பாரிய கல்வி இடை­வெ­ளி­களைக் கொண்­ட­வர்கள் மோதலில் ஈடு­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகமென்று கண்டறியப்பட்டுள்ளது. சமாதானத்தை வளர்ப்பதிலும் நல்லிணக்கத்திலும் கல்வி முக்கிய பங்கு வகிக்க முடியும்.

மக்கள், பூகோளம், சுபீட்சம் மற்றும் அமைதிக்கான கற்றல் என்ற யுனெஸ்கோவின் இந்த வருடத்துக்கான தொனிப்பொருளுடன் இணைந்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமும் கல்விக்கான அதனது இலக்கினை வகுத்து செயற்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக யுனெஸ்கோவுடன் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமும் இணைந்து பணியாற்றுகிறது.-Vidivelli

  • அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம்

Leave A Reply

Your email address will not be published.