முஸாதிகாவின் வீடு தேடி வந்து உதவிய தேரர்!

0 119

உயர்­தர உயி­ரியல் விஞ்­ஞானப் பிரிவில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 01 ஆம் இடம் பெற்று வைத்­தி­யத்­து­றைக்குத் தெரி­வான மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்­திமா முஸா­தி­காவின் வீட்­டிற்கு வைத்­தியர் எம்.ஷியாவுடன் மொற­வெவ பிர­தேச சபையின் தவி­சா­ளரும் திரு­கோ­ண­மலை இந்­தி­ரா­ரம ரஜ­மஹா விகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான பொல்­ஹேன்­கொட உப­ரத்ன தேரர் கடந்த 07 ஆம் திகதி மாலை விஜயம் செய்தார்.

பௌத்­த­மத தேரரின் வரு­கையை சற்­றேனும் எதிர்­பா­ராத முஸா­தி­காவும் அவ­ரது பெற்­றோரும் வீட்டு நுழை­வா­யி­லி­லி­ருந்து தேரரை இன்­மு­கத்­தோடு வர­வேற்று உப­ச­ரிப்பு செய்­தனர்.

அதன்பின் தேரர் முஸா­திகா கல்வி கற்று வசித்­து­வந்த வீட்டைப் பார்­வை­யிட்­ட­தோடு இவ்­வாறு குடி­சையில் வசித்து மருத்­து­வத்­து­றைக்கு தெரி­வான முஸா­தி­கா­வையும், செங்கல் சூழையில் நாள்­தோறும் நெருப்­போடு தொழில் செய்து அத­னூ­டாக கிடைக்கும் சிறிய வரு­மா­னத்தைக் கொண்டு தனது பிள்­ளையை படிக்க வைத்து வைத்­தி­யத்­து­றைக்குத் தெரி­வாக்­கிய தந்தை மற்றும் அதற்கு உத­விய தாயையும் உள­மாற வாழ்த்­தினார்.

அதன்பின் தேரர் முஸா­தி­காவின் தந்­தை­யிடம் யார் யார் மகளின் உயர்­தர படிப்­புக்கு உத­வி­னார்கள்? மேலும் பல்­க­லைக்­க­ழக படிப்பை தொடர்­வ­தற்கு உதவி செய்­யப்­போ­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தார்கள்? என்று வினவினார்.

அதற்கு முஸா­தி­காவின் தந்தை வரு­கின்ற அதி­க­மா­ன­வர்கள் மகளின் படிப்­புக்கு உத­வு­வ­தாகத் தெரி­வித்து சென்­ற­தாகப் பதி­ல­ளித்தார்.

அனைத்து விட­யங்­க­ளையும் கேட்டுக் கொண்­டி­ருந்த தேரர் திடீ­ரென எழுந்­து­சென்று தனது வாக­னத்தில் கொண்­டு­வந்த உல­ரு­ணவுப் பொதி­களை எடுத்து முஸா­தி­காவின் பெற்­றோ­ரிடம் கொடுத்­த­தோடு சிறு­தொகை பணத்­தையும் முஸா­தி­கா­விடம் கொடுத்தார்.

யார் உதவி செய்­தாலும் பர­வா­யில்லை. இந்த மாண­வியின் உயர் கல்­வியில் எனது சிறு பங்­க­ளிப்­பா­வது இருக்க வேண்­டு­மெனக் கூறிய தேரர், முஸா­தி­காவின் தந்­தையின் வங்கிக் கணக்­கி­லக்­கத்தைப் பெற்­ற­தோடு முஸா­திகா பல்­க­லைக்­க­ழகம் செல்லும் மாதத்­தி­லி­ருந்து அவ­ரது பல்­க­லைக்­க­ழக வாழ்க்கை முடி­யும்­வரை மாதா­மாதம் ஒரு­தொகை பண உதவி செய்­வ­தா­கவும் வாக்­கு­று­தி­ய­ளித்தார்.

தேரரின் வாயி­லி­ருந்து வந்த இந்த வாக்­கு­று­தியை சற்­றேனும் எதிர்­பார்க்­காத முஸா­தி­காவின் குடும்­பத்­தினர் திகைத்து நின்­றனர். இதன்­போது முஸா­தி­காவின் தந்தை, “எனக்கு சிங்­களம் தெரி­யாது. தெரிந்­தி­ருந்தால் சிங்­க­ளத்தில் தேர­ருக்கு மன­மார நன்றி தெரி­வித்­தி­ருப்பேன். இருப்­பினும் தமிழில் தேர­ருக்கு நன்றி தெரி­விக்­கிறேன். இதனை யாரா­வது மொழி பெயர்த்து அவ­ருக்கு சொல்­லுங்கள்” என்று தெரி­விக்க அரு­கி­லி­ருந்த ஒருவர் முஸா­தி­காவின் தந்தை மீராசா சொன்­னதை மொழி பெயர்த்து தேர­ரிடம் எடுத்துச் சொன்னார். அந்த நன்­றியைத் தேரர் மன­ம­கிழ்­வோடு ஏற்றுக் கொண்­ட­தோடு, “உங்­க­ளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வீடொன்றை கட்­டித்­தர நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக கேள்­விப்­பட்டேன். அதற்கும் என்­னா­லான எல்லா ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­குவேன்” என்றார்.

இறு­தி­யாக முஸா­தி­கா­வுடன் தேரர் உரை­யா­டினார். உங்­க­ளுக்கு என்ன தேவை என்று கேட்டார். அதற்கு முஸா­திகா அளித்த பதில் தேரரை மேலும் ஆச்­ச­ரி­யத்தில் ஆழ்த்­தி­யது.

“நான் ஒன்றை மாத்­தி­ரமே உங்­க­ளிடம் கேட்­கிறேன். நான் படித்த பாட­சா­லை­யான திரு­கோ­ண­மலை ஸாஹிறா கல்­லூரி இடப்­பற்­றாக்­கு­றை­யுடன் காணப்­ப­டு­கி­றது. அதற்­காக அருகில் உள்ள காணியை வாங்­கு­வ­தற்­காக அதிபர், ஆசி­ரி­யர்கள் நிரு­வா­கத்­தினர் நிதி வச­தி­யில்­லாமல் நீண்­ட­கா­ல­மாகக் கஷ்­டப்­ப­டு­கி­றார்கள். அதனால் உங்­க­ளா­லான உத­வி­களை நான் உயர்­தரம் படித்து என்னை வைத்­தி­யத்­து­றைக்கு தெரி­வாக்­கிய திரு­கோ­ண­மலை ஸாஹிறா கல்­லூ­ரிக்கு உதவி செய்­யுங்கள்” என்றார். மேலும், ” நான் வைத்­தி­ய­ராக வந்த பின், என்னைப் போன்று உயர்­த­ரத்தில் வறு­மையின் பிடியில் சிக்கி கல்வி பயில்­கின்ற மாண­வர்­களை இனங்­கண்டு, பல ஏழைக் குடும்­பங்­க­ளி­லி­ருந்து வைத்­தி­யர்­களை உரு­வாக்­கு­வ­தற்­காக உதவி செய்வேன்” என்றும் முஸா­திகா தெரி­வித்தார்.

தான் கேட்­ட­கேள்­விக்கு முஸா­திகா அவ­ரது படிப்பு தொடர்­பாக ஏதா­வது வேறு உதவி கோருவார் என்று எதிர்­பார்த்த தேர­ருக்கு, முஸா­தி­காவின் எதிர்­பார்ப்பு பாட­சா­லை­யின்பால் இருப்­பதைக் கண்டு அவர் மெய்­சி­லிர்த்தார். முஸா­தி­காவின் இந்தப் பொது நலன்­மிக்க மனப்­பான்­மையைப் பாராட்­டிய தேரர் தன்­னா­லான உத­வி­களை அப்­பா­ட­சா­லைக்கு செய்­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்தார்.

இன, மத ரீதி­யி­லான மோதல்­களும் கசப்­பு­ணர்­வு­களும் எமது நாட்டில் பெருகிவரும் இக்காலத்தில் மொறவெவ பிரதேச சபையின் தவிசாளரும்,

திருகோணமலை இந்திராராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்ன தேரரின் இந்த மனிதாபிமான செயற்பாடானது இன, மதங்களைத் தாண்டி எல்லா இன மக்களினதும் பேசுபொருளாக தற்போது மாறியிருக்கிறது.

மதிப்புக்குரிய தேரர், முஸாதிகாவின் குடும்பத்தின் மனதில் மாத்திரமின்றி முழு இலங்கை முஸ்லிம்களின் மனதிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.-Vidivelli

  • தோப்பூர் நிருபர் நஹீம் முஹமட் புஹாரி

Leave A Reply

Your email address will not be published.