4/21 தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை

மன்றில் ஆஜரான விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி தெரிவிப்பு

0 727

சாய்ந்­த­ம­ருது தற்­கொலை தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் 16 பேரின் உடற் பாகங்­க­ளையும் குடும்ப உறுப்­பி­னர்­களின் மர­பணு பரி­சோ­தனை அறிக்­கை­களையும் கொண்டு பகுப்­பாய்வு செய்­ததில் சந்­தே­கத்­திற்­கி­ட­மாக தேடப்­படும் சாரா எனப்­படும் புலஸ்­தினி மகேந்­திரன் என்­ப­வரின் மர­ப­ணு­ப­ரி­சோ­தனை அறிக்கை (DNA) பொருந்­த­வில்லை என மன்றில் தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து சாரா என்­ற­ழைக்­கப்­படும் புலஸ்­தினி மகேந்­தி­ரனின் மர­ப­ணு­ப­ரி­சோ­தனை அறிக்கை அறிய மீண்டும் குறித்த அறிக்­கையை ஆராய மன்­றுக்கு சமர்ப்­பிக்­கு­மாறு கல்­முனை நீதிவான் உத்­த­ர­விட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய சந்­தே­கத்தின் பேரில் கைதான 12 பேர் கல்­முனை நீதவான் நீதி­மன்றில் நேற்று (21) ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு குறித்த வழக்கு விசா­ரணை இரண்டு கட்­ட­மாக நீதி­மன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட வேளை இரண்டாம் கட்ட 6 சந்­தேக நபர்­க­ளுக்­கான விசா­ர­ணையின் போது மன்றில் தோன்­றிய விசேட குற்­ற­வியல் பிரிவின் அதி­காரி உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­வர்­களின் மர­ப­ணு­ப­ரி­சோ­தனை தொடர்­பாக நீதி­வானின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­ற­துடன் குறித்த தாக்­குதல் சம்­ப­வத்தில் மர­ண­ம­டைந்­த­தாக தெரி­விக்­கப்­படும் சாரா என்­ற­ழைக்­கப்­படும் புலஸ்­தினி மகேந்­திரன் என்ற பெண்ணின் மர­பணு பரி­சோ­தனை மாத்­திரம் எந்­த­வொரு மர­ப­ணு­ப­ரி­சோ­த­னை­யு­டனும் ஒத்­துப்­போ­க­வில்லை என்­பதை நீதி­வானின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதனை அடுத்து நீதிவான் மேற்­படி சம்­ப­வத்தில் மர­ண­ம­டைந்­த­வர்­களின் மர­பணு பரி­சோ­த­னையை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்­பிக்க உத்­த­ரவு பிறப்­பித்­த­துடன் குறித்த மர­பணு பரி­சோ­தனை தொடர்பில் ஆரா­யு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களை கட்­ட­ளை­யிட்டார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது பகு­தியில் வொலி­வே­ரியன் கிரா­மத்தில் இடம்­பெற்ற இரு பிர­தான குண்­டு­வெ­டிப்பு மற்றும் துப்­பாக்கி சூடு கார­ண­மாக மர­ண­மா­ன­வர்­களின் மர­ண­வி­சா­ரணை தொடர்­பாக வழக்கு கடந்த 2019 ஆண்டு ஒக்­டோபர் மாதம் புதன்­கி­ழமை (2) அன்று கல்­முனை நீதி­மன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்­னி­லையில் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதன்போது குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­கள அதி­காரி ஒரு­வரின் நெறிப்­ப­டுத்­த­லுடன் பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு பொலிஸ் பரி­சோ­தகர் ஆர்.எல் சம­ர­வீர வாக்­கு­மூலம் வழங்கி இருந்தார். இதன்­போது அவர் தனது வாக்­கு­மூ­லத்தில் சம்­பவம் நடந்த வீடு அதை அண்­டிய வெளி­யி­டங்கள் உள்­ள­டங்­க­லாக 17 பேர் மர­ண­ம­டைந்­துள்­ள­தாக தமக்கு அறி­யக்­கி­டைத்­த­தா­கவும் அவ்­வி­டத்தில் தட­யப்­பொ­ருட்­களை சேக­ரித்­த­துடன் காய­ம­டைந்த நிலையில் ஒரு பெண், குழந்தை ஆகி­யோரை மீட்டு அம்­பாறை வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்­சைக்­காக அனு­ம­தித்து பின்னர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சையின் பின்னர் அவர்­க­ளிடம் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அவ­ரது தகவல் படி இந்த தாக்­கு­தலில் காய­ம­டைந்­த­வர்கள் முகமட் சஹ்ரான் ருசைதா (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்­ரானின் மகள்) அப்துல் காதர் பாத்­திமா ஹாதியா/சித்­தியா (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்­ரானின் மனைவி) எனவும் 17 பேர் உள்­ள­டங்­க­லாக மர­ண­மா­கினர் எனவும் அந்த வாக்­கு­மூ­லத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு குறித்த தாக்குதலில் இறந்தவர்களது பிரேத பரிசோதனை யாவும் கடந்த ஏப்ரல் 28,29 ஆம் திகதிகளில் அம்பாறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவினால் நடாத்தப்பட்டிருந்தன.
அதன் பின்னர் மரணமானவர்களது சடலங்கள் அம்பாறை மாவட்டம் புத்தங்கல பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் 2019/5/2 அன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன.-Vidivelli

  • பாறுக் ஷிஹான்

Leave A Reply

Your email address will not be published.