மதவாதத்தில் ஆட்சி பீடமேறிய அரசாங்கத்தால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதுள்ளது

பிணைமுறி மோசடியாளர்களை ஏன் கைது செய்யவில்லை எனவும் ஐ.தே.க. கேள்வி

0 238

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை மையப்­ப­டுத்தி மத­வா­தத்தை தூண்டி ஆட்­சி­பீ­ட­மே­றிய தற்­போ­தைய அர­சாங்­கம் வழங்கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யா­ம­லுள்­ள­தெனத் தெரி­வித்­துள்ள எதிர்க்­கட்சி, ஆட்­சிக்­கு­வந்த இரு­நாட்­களில் பிணை­முறி மோச­டி­யா­ளர்­களை கைது­செய்­வ­தாக மார்­தட்­டி­யது. ஆனால் இன்­று­வரை எந்தக் கைதும் இடம்­பெ­ற­வில்லை என்றும் குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

எதிர்க்­கட்சித் தலைவர் காரி­யா­ல­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது இதனை தெரி­வித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜே.சீ. அல­வத்­துவல மேலும் கூறி­ய­தா­வது,

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்டு மாதங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. இருப்­பினும் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­ன­தாக மக்­க­ளுக்கு கொடுத்த எந்த வாக்­கு­று­தி­க­ளையும் நிறை­வேற்­றி­ய­தாகத் தெரி­ய­வில்லை. இது­த­விர ஆகக்­கு­றைந்­தது வாக்­கு­று­திளை நிறை­வேற்­று­வ­தற்கு ஏது­வான திட்­டங்­க­ளை­யேனும் வகுத்­துள்­ளார்­களா என்ற கேள்வி எழு­கின்­றது.

மத்­தி­ய­வங்கி பிணை­முறி மோச­டி­யுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை தாம் ஆட்­சிக்கு வந்த இரு­நாட்­களுள் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தாக தற்­போ­தைய ஆளும் தரப்­பினர் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளின்­போது கூறிக்­கொண்­டனர். ஆயினும், அதற்­கான எந்த நட­வ­டிக்­கை­களும் இது­வ­ரையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. பாரி­ய­ளவில் நிதி செல­வி­டப்­பட்டு கோப் குழுவின் ஊடாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. கோப் குழு அறிக்­கையும் தயா­ரிக்­கப்­பட்­டது. இந்த அர­சாங்கம் அதனை மூடி­ம­றைக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­க­ளையே மேற்­கொண்டு வரு­கின்­றது. அதேபோல், உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களை மைய­மாகக் கொண்டு அர­சியல் இலாபம் தேடவே இவர்கள் முயற்­சித்­தனர். தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களின் போது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களை மைய­மா­கக்­கொண்டு எமது அர­சாங்­கத்­தின்­மீது குற்­றஞ்­சு­மத்­தினர். தாம் ஆட்­சிக்­கு­வந்தால் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­களை கைது­செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­து­வ­தா­கவும், அந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை தமது அர­சாங்­கத்தில் இணைத்­துக்­கொள்ளப் போவ­தில்­லை­யெ­னவும் கூறினர். எமது அர­சாங்க செல்­வாக்கின் கார­ண­மாக குற்­ற­வா­ளிகள் பாது­காக்­கப்­ப­டு­வ­தா­கவும் கூறிக்­கொண்­டனர். அவ்­வா­றெனின் இப்­பொ­ழுது அவர்­கள்­மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யுமே. எதற்­காக இது­வ­ரையில் எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திக­திக்கு முன்­ன­ரான நிலைமையே தற்போதும் காணப்படுகின்றது. அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்தே மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆயினும், மக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல் பதிவுகளை வெளியிடுவதன் ஊடாக மக்களுடைய பிரச்சினைகளை மூடிமறைக் கின்றனர் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.