சவூதி சிலோன் ஹவுஸ் விவகாரம்: விசாரணைக்குழு அமைத்து உண்மையை கண்டறியவும்

சவூதிக்கான முன்னாள் தூதுவர்

0 341

சவூதி அரே­பியா அஸீ­ஸி­யாவில் இருக்கும் சிலோன் ஹவுஸ் (இலங்கை இல்லம்) இலங்கை முஸ்­லிம்­களின் சொத்­தாகும். சவூதி அரே­பிய நீதி­மன்றில் நடை­பெற்ற நஷ்­ட­ஈடு வழக்கில் இலங்கை தூத­ரகம் எந்தத் தொடர்பும் கொண்­டி­ருக்­க­வில்லை. தனி நபர் ஒரு­வரே தனித்து செயற்­பட்டார் என இலங்­கையின் சவூதி அரே­பி­யா­வுக்­கான முன்னாள் தூதர் இப்­றாஹிம் அன்சார் தெரி­வித்தார்.

சிலோன் ஹவுஸ் தொடர்­பாக பல விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

முன்னாள் தூதர் இப்­றாஹிம் அன்சார் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
‘சிலோன் ஹவுஸ் தொடர்­பாக விமர்­சிக்­கப்­பட்டு வரு­வதால் இலங்­கையின் கலா­சார விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சு விசா­ரணைக் குழு­வொன்­றினை நிய­மித்து உண்மை நிலையைக் கண்­ட­றிய வேண்டும்.

2002 ஆம் ஆண்டு முதல் 2010 வரை­யி­லான காலப் பகு­தியில் பத­வி­யி­லி­ருந்த இலங்­கையின் சவூதி அரே­பி­யா­வுக்­கான தூதர்கள் கொன்­சி­யூலர் ஜென­ரல்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லுல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் ஆகி­யோரைத் தொடர்பு கொண்டு தக­வல்கள் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்.
சிலோன் ஹவுஸ் தொடர்­பான விப­ரங்கள் அடங்­கிய கோவைகள் வெளி­நாட்­ட­மைச்­சிலும் ரியா­தி­லுள்ள இலங்கை தூத­ரா­லயம் மற்றும் ஜித்­தா­வி­லுள்ள கொன்­சி­யூலர் ஜெனரல் காரி­யா­ல­யத்­திலும் இருக்­கின்­றன. இது தொடர்­பாக நான­றிந்த தக­வல்­களை வழங்­கு­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறேன்.

மக்கா விரி­வாக்­க­லின்­போது அகற்­றப்­பட்ட 3 மாடி­களைக் கொண்ட சிலோன் ஹவு­ஸுக்கு நஷ்­ட­ஈ­டாக 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் கிடைத்­தமை பற்­றியும் ஆரா­யப்­பட வேண்­டும என்றார்.

முன்னாள் கொன்­சி­யுலர்

ஜெனரல் எம். இனா­முல்லாஹ் சவூதி அரே­பி­யாவின் முன்னாள் கொன்­சி­யுலர் ஜெனரல் எம். இனா­முல்லாஹ் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;

‘சிலோன் ஹவு­ஸுக்கு நம்­பிக்­கை­யாளர் சபை­யொன்­றினை உரு­வாக்கி அச்­சபை மூலம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக காப்­பாளர் ஒரு­வரை நிய­மிக்க வேண்டும். இது தொடர்பில் கடிதப் பரி­மா­றல்கள் அர­சாங்கம் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஊடாக சவூதி அர­சுடன் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

சவூதி– இலங்கை சட்ட திட்­டங்­க­ளுக்கு அமைய பொறி­மு­றை­யொன்றின் கீழ் சிலோன் ஹவுஸின் புதிய காப்­பா­ள­ராக சவூதி அரே­பிய குடி­யு­ரிமை பெற்­றுள்ள சாதிக் ஹாஜி­யா­ரையோ சவூதி அரே­பிய குடியுரிமை பெற்றுள்ள வேறொரு இலங்கையரையோ கொன்சியுலர் ஜெனரல் காரியாலய அல்லது கலாசார உத்தியோகத்தர் ஒருவரையோ நியமிப்பது குறித்து முறையாக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.