வைத்தியர் ஷாபி விவகார வழக்கு விசாரணை இன்று

புதிய அறிக்கையினை சமர்பிக்க தயாராகிறது சி.ஐ.டி.

0 680

சட்­ட­வி­ரோத கருத்­தடை விவ­காரம் தொடர்பில் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நீதிவான் நீதி­மன்ற விசா­ரணை இன்றுமீளவும் இடம்­பெ­ற­வுள்­ளது. ஏற்­க­னவே இந்த விவ­கா­ரத்தில் முன்னாள் சி.ஐ.டி. பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவின் மேற்­பார்­வையில், உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் திசே­ரவின் கீழ் இடம்­பெற்ற விசா­ர­ணை­களின் அறிக்கை மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள போதிலும், புதி­தாக விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட்­டுள்ள பின்­ன­ணியில் மீள வைத்­தியர் ஷாபி விவ­கார விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க சி.ஐ.டி.க்கு கடந்த 2019 டிசம்பர் 12 ஆம் திகதி குரு­நாகல் நீதி­மன்றம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் அவ்­வாறு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களின் தற்­போ­தைய நிலை­மையை இன்று சி.ஐ.டி.யின் சமூகக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப்பிரிவு மன்றில் சமர்ப்பிக் கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.