அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாமைக்கு நாம் பொறுப்பு இல்லை

பைஸரும் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் பிரதமர்

0 495

அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் அமைச்­சர்கள் எவ­ரு­மில்லை என்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு நாம் பொறுப்­பல்ல. ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக முஸ்­லிம்கள் எவரும் இல்­லா­ததால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு அமைச்­சுப்­ப­தவி வழங்க முன்­வந்­த­போதும் அவர் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். நேற்று முன்­தினம் தமிழ் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை பிர­தமர் அலரி மாளி­கையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போது அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் அமைச்­சர்கள் எவரும் இடம்­பெ­றாமை குறித்து எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில், அமைச்சுப் பத­விக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தனது பட்­டி­யலில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சிபா­ரிசு செய்­ய­வில்லை என்­றாலும் பைசர் முஸ்­த­பா­வுக்கு அமைச்சுப் பதவி வழங்க முன்­வந்தோம். ஆனால் அவர் அதனை நிரா­க­ரித்தார். எனவே எமது அர­சாங்­கத்தில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் வேண்­டு­மாயின் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்­க­ளது தலை­மைகள் எதிர்­வரும் தேர்­தலில் சிந்­தித்து செயற்­பட வேண்டும்.

எமது கட்­சியில் முஸ்லிம் பிர­தி­நி­தி­களை முஸ்லிம் மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அப்­போது முஸ்­லிம்கள் அமைச்­ச­ர­வை­யிலும் இடம்­பெ­றலாம்.
13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பில் நாம் முன்­னைய நிலைப்­பாட்­டிலே இருக்­கிறோம். அதில் மாற்­றங்கள் இல்லை. ஆனால் பல தசாப்­த­கா­ல­மாக தமிழ் தலை­வர்கள் தமிழ் மக்­களை ஏமாற்றி வரு­கி­றார்கள். தமி­ழர்­களை தமிழ் தலை­வர்கள் ஏமாற்­றி­யது போன்று நாம் ஏமாற்றத் தயா­ராக இல்லை.

ஜெனீவா மாநாட்டில் இம்­முறை அழுத்­தங்கள் இருக்காது. 2021 ஆம் ஆண்டில் தான் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அதற்குள் நாம் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வோம் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.