ரதன தேரரின் பிரேரணைக்கு எதிராக: உயர் நீதிமன்றில் மனு ஏதும் தாக்கல் செய்யப் போவதில்லை

முஸ்லீம் சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

0 716

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கக்­கோரி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள தனி­நபர் பிரே­ர­ணைக்கு எதி­ராக முஸ்லிம் தரப்பு உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்த மனு­வினை தற்­போ­தைய சூழலில் தாக்கல் செய்­வ­தில்லை எனத் தீர்­மா­னிக்கப் பட்­டுள்­ளது.

முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் முஸ்லிம் சட்­டத்­த­ர­ணி­களும் கலந்­து­கொண்ட கூட்­டத்தில் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. கூட்­டத்தில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபும் கலந்­து­கொண்­டி­ருந்தார்.

பாரா­ளு­மன்ற அமர்வு ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு இன்னும் 12 நாட்­களே உள்ள நிலையில் அதற்­கான நிகழ்ச்சி நிரல் ஏற்­க­னவே தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டது.

இந்த நிலையில் அத்­து­ர­லியே ரதன தேரரின் குறிப்­பிட்ட தனி­நபர் பிரே­ரணை விவா­திக்­கப்­பட்டு, வாக்­க­ளிப்­புக்குச் செல்­வது சாத்­தி­ய­மில்லை என்­பதால் உயர்­நீ­தி­மன்றில் மனுத்­தாக்கல் செய்யும் தீர்­மானம் கைவி­டப்­பட்­டுள்­ளது.
அத்­தோடு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய என்போர் அத்­து­ர­லியே ரதன தேரரின் தனி­நபர் பிரே­ர­ணைக்கு எதி­ரான நிலைப்­பாட்டில் இருப்­பதும் கருத்தில் கொள்­ளப்­பட்டு மனுத்­தாக்கல் செய்­வ­தில்லை எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

ரதன தேரரின் தனி­நபர் பிரே­ர­ணைக்கு எதி­ராக மனுத்தாக்கல் செய்வதற்கு கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனம் முஸ்லிம்களிடமிருந்து பெயர், விலாசம் மற்றும் விபரங்களைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.