சஜித் வென்றிருந்தால் கிழக்கு மாகாணம் இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தெரிவிப்பு

0 217

“சஜித் வென்­றி­ருந்தால் கிழக்கு மாகாணம் இன்று அமெ­ரிக்­காவின் கட்­டுப்­பாட்டில் வந்­தி­ருக்கும். ஈரா­னுக்கு இன்று நடந்­தி­ருப்­பதைப் பாருங்கள். போலி அர­சி­ய­லுக்கு பின்னால் இன்னும் இன்னும் முஸ்­லிம்கள் இழுத்துச் செல்­லப்­ப­டு­வதை தடுத்து நிறுத்த வேண்டும். சமூக நலன் கரு­தாமல் நானும் ஒரு சாதா­ரண அர­சி­யல்­வா­தி­யாக இருந்­தி­ருந்தால் கல்­மு­னையில் இருந்து சாய்ந்­த­ம­ருது என்றோ பிரிந்­தி­ருக்கும். அதில் இருக்­கின்ற நன்மை, தீமைகள் பற்றி ஆலோ­சித்­தி­ருக்­க­மாட்டோம்” என்று தேசிய காங்­கிரஸ் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எல்.எம்.அதா­வுல்லா தெரி­வித்தார்.

எம்.எச்.எம்.இப்­ராஹிம் எழு­திய ‘நான் எய்த அம்­புகள்’ நூல் வெளி­யீட்டு விழா கடந்த சனிக்­கி­ழமை சாய்ந்­த­ம­ருது லீ மெரி­டியன் மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக கலைபீட பீடா­தி­பதி கலா­நிதி றமீஸ் அபூ­பக்கர் தலை­மையில், கலைஞர் ஏ.எல்.அன்­ஸாரின் நெறிப்­ப­டுத்­தலில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் முன்னாள் அமைச்சர் அதா­வுல்லா தன­து­ரையில் மேலும் தெரி­விக்­கையில்;

“கல்­மு­னையில் இன்று பல பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. தமி­ழர்கள் பிர­தேச செய­லகம் கேட்­கி­றார்கள். சாய்ந்­த­ம­ருது மக்கள் நகர சபை கேட்­கி­றார்கள். நான் சமூ­கத்தைப் பற்றிச் சிந்­திக்­காமல் சுய­நல அர­சியல் செய்­கின்ற ஒரு­வ­னாக இருந்­தி­ருந்தால் கல்­மு­னையில் இருந்து சாய்ந்­த­ம­ருது பிரி­வதால் ஏற்­படும் சாதக, பாத­கங்­களை கருத்தில் கொள்­ளாமல் சாய்ந்­த­ம­ருது நகர சபையை எப்­போதோ உரு­வாக்கித் தந்­தி­ருக்க முடியும்.

சாய்ந்­த­ம­ருத்­துக்கு நகர சபை வேண்டும் என்ற கோஷம் வந்­த­போது அன்றே சொன்னேன். கல்­முனை பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் தமது நிலை­களில் இருந்து மாற வேண்டும் என்று கூறினேன். இரு தரப்­பி­ன­ரதும் அணு­கு­மு­றை­களில் தவ­றி­ருப்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன். அது செவி­ம­டுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

சாய்ந்­த­ம­ருது மக்கள் ஒரு­போதும் தெளி­வாக சிந்­தித்து வாக்­க­ளித்த வர­லாறு கிடை­யாது. எதற்­காக வாக்­க­ளிக்­கின்றோம் என்று தெரி­யாமல் வாக்­க­ளிக்­கின்­றீர்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை ஆத­ரிப்­ப­தற்­காக ஒன்­று­பட்­டதைத் தவிர வேறு எதற்­கா­வது ஒன்­று­பட்­டி­ருக்­கி­றீர்­களா? புத்­தி­ஜீ­வி­களும் கல்­வி­மான்­களும் நிறைந்த ஊர் என்று சொல்­கிறோம். ஆனால் மக்­க­ளுக்கு சரி­யான வழி­காட்டல் இல்லை.

கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் எப்­போதும் ஒரே நிலைப்­பாட்டில் இருக்க வேண்டும். அதுவே ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­திற்கும் பல­மாகும். வடக்கு மற்றும் கிழக்­குக்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்கள் இரு வேறான நிலைப்­பாட்டில் இருக்­கலாம். அவர்கள் பிரிந்து நின்­றாலும் பிரச்­சி­னை­யில்லை. அவர்­க­ளுக்கும் கிழக்­கி­லி­ருந்து நாம்தான் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் சிங்­கள பேரி­ன­வா­தத்­திற்கும் தமிழ் பேரி­ன­வா­தத்­திற்கும் முகம்­கொ­டுக்க வேண்­டிய நிலையில் கிழக்கு முஸ்­லிம்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம் என்­பதை மறந்து விடக்­கூ­டாது.

சஜித் வென்­றி­ருந்தால் கிழக்கு மாகாணம் இன்று அமெ­ரிக்­காவின் கட்­டுப்­பாட்டில் வந்­தி­ருக்கும். ஈரா­னுக்கு இன்று நடந்­தி­ருப்­பதைப் பாருங்கள். போலி அர­சி­ய­லுக்கு பின்னால் இன்னும் இன்னும் முஸ்­லிம்கள் இழுத்துச் செல்­லப்­ப­டு­வதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கும் அபி­வி­ருத்­தி­க­ளுக்கும் தேசிய காங்­கிரஸ் பாரிய பங்­க­ளிப்பை செய்­தி­ருக்­கி­றது. ஆனால் சில பிர­தே­சங்கள் எனது அபி­வி­ருத்­தி­களை வேண்டாம் என்று புறக்­க­ணித்­தி­ருந்­தன. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடி­யாது.

முஸ்லிம் தனியார் சட்டம் ஒழிக்­கப்­படப் போகி­றது என்று சிலர் ஓல­மி­டு­கி­றார்கள். முஸ்லிம் விவாக சட்­டத்தில் திருத்தம் செய்­யப்­பட வேண்டும் என்று நம்மில் சிலர் கோரி­ய­போது நான் மட்டும் சொன்னேன். அதற்­கான தருணம் இது­வல்ல என்றும் நாம் அவ்­வாறு செய்ய முற்­பட்டால் பேரி­ன­வாத சக்­திகள் அதனை முற்­றாக ஒழித்து விடு­வ­தற்கு புறப்­ப­டு­வார்கள் என்றும் அழுத்­த­மாக சொன்னேன். ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா போன்­றோ­ருக்கு கடிதம் எழு­தினேன். எவரும் கேட்­க­வில்லை. இன்று என்ன நடக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்­திற்கு நீங்கள் வாக்­க­ளித்து அனுப்­பிய எம்.பி.க்கள் தான் முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்­சி­னையை பார்த்­துக்­கொள்ள வேண்டும்.

5 வெட்டுப் புள்ளி 12.5 வீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­டப்­போ­கி­றதாம் என்றும் சொல்­கி­றார்கள். ஆனால் 5 வீத வெட்­டுப்­புள்­ளியால் முஸ்­லிம்கள் ஒரு­போதும் நன்­மை­ய­டை­ய­வில்லை. அது சிறிய கட்­சி­க­ளுக்கு பொது­வான வரப்­பி­ர­சா­த­மாகும்.

ஏதோ இந்த 5 வீதத்­தினால் முஸ்­லிம்கள் நன்­மை­ய­டைந்­தது போன்று கத்­து­கி­றார்கள். இப்­பி­ரச்­சி­னை­யையும் ஹக்கீம், ஹரீஸ் போன்றோர் பார்த்­துக்­கொள்­ளட்டும்” என்றும் குறிப்­பிட்டார்.

இந்­நி­கழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்­தபா, பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கான ஆலோ­சகர் சிராஸ் யூனுஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செய­லாளர் கே.எம்.ஏ.ஜவாத், ஐக்­கிய தேசிய கட்­சியின் கல்­முனைத் தொகுதி அமைப்­பாளர் சட்­டத்­த­ரணி எம்.எஸ்.ஏ.றஸ்ஸாக், கைத்­தொழில் அபி­வி­ருத்தி, ஊக்­கு­விப்பு அமைச்சின் மேல­திக செய­லாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்­முனை பிர­தேச செய­லாளர் ஏ.எல்.எம்.நஸீர், உலமா கட்­சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், மணிப்­பு­லவர் மருதூர் ஏ.மஜீத் ஆகி­யோரும் அதி­தி­க­ளாக பங்­கேற்­றி­ருந்­தனர்.

அறிஞர் சித்­தி­லெப்பை ஆய்வுப் பேர­வையின் தலைவர் சட்­டத்­த­ரணி மர்ஸூம் மௌலானா, நூல் பற்­றிய திற­னாய்­வு­ரை­யையும் பேராதனை பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் முபிஷால் அபூபக்கர், கலாபூஷணம் ஏ.பீர்முஹம்மத் ஆகியோர் கருத்துரைகளையும் நிகழ்த்தினர்.

சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாறக் நூலின் முதல் பிரதியையும் இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.சி.எம்.இக்பால் முதன்மைப் பிரதியையும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் கல்விமான்கள், வர்த்தகர்கள், கலை, இலக்கியவாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்பு பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.-Vidivelli

  • அஸ்லம் எஸ்.மௌலானா

Leave A Reply

Your email address will not be published.