ஈரான், ஈராக் வான்பரப்புகளை தவிர்க்கும் இலங்கை விமானங்கள்

0 614

மத்­தி­ய­கி­ழக்குப் பிராந்­தி­யத்தில் ஏற்­பட்­டுள்ள அமை­தி­யின்­மையைத் தொடர்ந்து பாது­காப்­புக்­க­ருதி கொழும்­பி­லி­ருந்து லண்­ட­னுக்கு செல்லும் மற்றும் லண்­ட­னி­லி­ருந்து கொழும்­பிற்கு வரும் விமா­னங்கள் ஈரான், ஈராக் நாடு­களின் வான்­ப­ரப்­பு­களைத் தவிர்த்துப் பயணம் செய்யும் வித­மாக உடன் அமு­லுக்கு வரும் வகையில் பாதை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வனம் அறி­வித்­தி­ருக்­கி­றது.

தற்­போ­தைய நிலை­வ­ரத்தை தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணித்து வரு­வ­துடன், அவ­தா­னத்­து­டனும் இருப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருக்கும் அந்­நி­று­வனம், அவ­சி­ய­மான தேசிய மற்றும் சர்­வ­தேச அதி­காரக் கட்­ட­மைப்­புக்­க­ளுடன் தொடர்­பு­கொண்டு பேசி­யி­ருப்­ப­தா­கவும், பய­ணிகள் மற்றும் விமா­ன­சேவை ஊழி­யர்­களின் பாது­காப்புக் குறித்து வலி­யு­றுத்­தி­யி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கி­றது.

இதே­வேளை, பல்­வேறு ஆசிய விமா­ன­சேவை நிறு­வ­னங்கள் தமது விமானப் போக்­கு­வ­ரத்­தின்­போது ஈரான் வான்­ப­ரப்பைத் தவிர்த்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­வந்­துள்­ளன. ஈராக்கில் தளம் அமைத்­தி­ருந்த அமெ­ரிக்கத் துருப்­புகள் மீது ஈரான் தாக்­குதல் நடத்­தி­ய­தாக வெளி­யான அறி­விப்­பை­ய­டுத்தே இந்தத் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

தாய்­வானின் சீனா எயார்லைன்ஸ் நிறு­வ­னமும் தமது விமானங்கள் ஈராக், ஈரான் வான்பரப்பின் ஊடாகப் பயணிக்காதென்று அறிவித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.