ரிஷாத், அஸாத் சாலியை உடன் கைது செய்யுங்கள்

அக்மீமன தயாரத்ன தேரர்

0 314

ஏப்ரல் 21 இல் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி­யி­ருந்த முன்னாள்  அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆகி­யோரை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு பிரதி பொலிஸ் மா அதி­ப­ரிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுடன் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், முன்னாள் ஆளு­நர்கள் அசாத்­சாலி, ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோ­ருக்கு தொடர்­பி­ருப்­ப­தா­கவும் அவர்­களைக் கைது செய்து விசா­ரணை நடத்­து­மாறும் சிங்­கள ராவய அமைப்பு பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறை­யிட்­டி­ருந்­தது.

அம்­மு­றைப்­பா­டுகள் தொடர்­பி­லான மேல­திக வாக்­கு­மூலம் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு அக்­மீ­மன தயா­ரத்ன தேரரை அழைத்­தி­ருந்­தது.

நேற்று முன்­தினம் அவர் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவில் வாக்­கு­மூ­ல­ம­ளித்­ததன் பின்பு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

‘முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் அவ­ரது அமைச்சின் ஊடாக சஹ்ரான் குழு­வி­ன­ருக்கு குண்டு தயாரிப்பதற்காக உலோகம் மற்றும் செம்பு உலோகம் வழங்­கி­யுள்ளார். இதன் மூலம் அவர் சஹ்ரான் குழு­வி­ன­ருடன் தொடர்­பு­களைப் பேணி­யுள்ளார் என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மாவ­னெல்லை புத்தர் சிலைகள் உடைப்பு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­களை விடு­தலை செய்­வ­தற்கு தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். பொலிஸ் உய­ர­தி­கா­ரி­கா­ரி­யுடன் இது தொடர்பில் கதைத்­தி­ருக்­கிறார். எனவே இஸ்­லா­மிய தீவி­ர­வாதக் குழுக்­க­ளுடன் இவ­ருக்குத் தொடர்பு உள்­ளமை நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

விடு­தலைப் புலி­களின் அர­சியல் பிரிவின் தலை­வ­ராக ஆர்.சம்­பந்தன் செயற்­பட்­ட­துபோல் ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­களின் பிர­தி­நி­தி­யாக செயற்­பட்ட சஹ்­ரானின் அர­சியல் பிரி­வுக்குப் பொறுப்­பா­ன­வர்­க­ளாக ரிஷாத் பதி­யுதீன் போன்­ற­வர்கள் செயற்­பட்­டுள்­ளனர். அதனால் அவர்கள் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்டு சட்­டத்­தின்முன் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.

மாவ­னெல்­லையில் புத்தர் சிலைகள் சேதப்­ப­டுத்­தப்­பட்­ட­போது எமது நாட்டின் தேசிய பாது­காப்பு சவா­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது. ஐ.எஸ்.தீவி­ர­வாதம் எமது நாட்டில் காலூன்றப் போகி­றது.

அமைதி சீர்­கு­லையப் போகி­றது என்று அன்று நாங்கள் எதிர்வு கூறி­யி­ருந்தோம். மாவ­னெல்லை சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை விடுவிக்க அசாத்சாலி முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுமே பதில் கூறியாக வேண்டும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.