காசிம் சுலைமானியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பாரிய நெரிசல்

40 பேர் பலி; 200க்கும் அதிமானோர் காயம்

0 690

அமெ­ரிக்க ஆளில்லா விமானம் நடத்­திய தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த ஈரானின் முக்­கிய தள­பதி காசிம் சுலை­மா­னியின் ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் ஏற்­பட்ட சன­நெ­ரி­சலில் சிக்கி குறைந்­தது 40 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக ஈரா­னிய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

தென்­கி­ழக்கு ஈரானின் கெர்மான் பகு­தியில் நடை­பெற்ற இந்த சம்­ப­வத்தில் 200 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.காசிம் சுலை­மா­னியின் உடல் ஈரா­னி­லுள்ள அவ­ரது சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்­யப்­பட்ட நிலையில் அவ­ரது இறு­திச்­ச­டங்கில் மில்­லி­யன்­க­ணக்­கான மக்கள் கொண்­டனர்.

சன நெரி­ச­லுக்­கான காரணம் குறித்து தெளி­வாக தெரி­ய­வில்லை. ஆனால் சுலை­மா­னியின் இறு­திச்­ச­டங்கில் கலந்து கொள்­வ­தற்­காக தொடர்ந்தும் மக்கள் பெரு­ம­ளவில் கெர்மான் நகர வீதி­களில் கூடி­யி­ருந்­த­தாக அங்­குள்ள செய்­தி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இதற்­கி­டையில் ஈரானின் அதி­உயர் தலைவர் ஆயத்­துல்லா கொமைனி நேற்று முன்­தினம் தெஹ்­ரானில் நடை­பெற்ற ஜனாஸா தொழு­கைக்கு தலைமை தாங்­கினார். ஒரு கட்­டத்தில் அவரும் தேம்பித் தேம்பி அழுதார்.

சுலை­மா­னியின் மர­ணத்­திற்கு கடு­மை­யான பதி­லடி கொடுப்போம் என ஈரான் உறு­தி­படத் தெரி­வித்­துள்­ளது. மேலும் 2015 ஆம் ஆண்டு கையெ­ழுத்­திட்ட அணு ஒப்­பந்­தத்தில் இருந்தும் ஈரான் வில­கி­யுள்­ளது.

சுலைமைானியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஈரான் மக்கள் ”அமெரிக்காவிற்கு மரணம்” என்ற முழக்கங்களோடு ஊர்வலமாகச் சென்றனர்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.