இலஞ்சம் பெறும் அரச ஊழியர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர்

ஜனாதிபதி கோத்தாபய உறுதியாகத் தெரிவிப்பு

0 682

ஊழல் மோச­டி­களில் ஈடு­படும் அரச ஊழி­யர்கள், அவர்கள் எந்தத் தரத்­தினைச் சேர்ந்­த­வர்­க­ளென்­றாலும் தண்­டனை வழங்­கப்­பட்டு சேவை­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­ப­டு­வார்கள் என ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

இலஞ்சம் பெற்றுக் கொள்­வதும், இலஞ்சம் வழங்­கு­வதும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும்.இவ்­வா­றா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள். அரச சேவையை மேலும் செயற்­திறன் மிக்­க­தாக மாற்­று­வ­தற்­காக அதன் சட்­ட­வி­திகள் விரைவில் திருத்­தி­ய­மைக்­கப்­படும் எனவும் அவர் கூறினார்.

போக்­கு­வ­ரத்து அமைச்சு மற்றும் மோட்டார் போக்­கு­வ­ரத்து திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­க­ளுடன் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடாத்­திய பேச்­சு­வார்த்­தையின் போதே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் அதி­கா­ரிகள் மத்­தியில் கருத்து தெரி­விக்­கையில், அனைத்து அரச சேவை­களும் மக்­க­ளுக்கு இல­கு­வா­கவும், செயற்­திறன் மிக்­க­தா­கவும் அமை­ய­வேண்டும். அரச சேவையில் ஊழல்­களும், மோச­டி­களும், தாம­தங்­களும் தவிர்க்­கப்­ப­ட­வேண்டும்.

அரச நிறு­வ­னங்­களில் இடம்­பெறும் ஒழுங்­கீ­னங்­களை கண்­ட­றிந்து, அவற்­றுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை சட்­டத்தின் பிடியில் சிக்­க­வைப்­ப­தற்­காக குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கும் உளவுப் பிரிவின் உய­ர­தி­கா­ரி­க­ளுக்கும் தேவை­யான ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

அரச துறை­களின் செயற்­தி­ற­னற்ற செயற்­பா­டுகள் கார­ண­மா­கவே இது­வரை அதி­கா­ரத்­தி­லி­ருந்த அர­சாங்­கங்கள் மீது மக்கள் வெறுப்புக் கொண்­டி­ருந்­தனர். இந்த நிலைமை எனது பத­விக்­கா­லத்தில் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். அனைத்து அரச நிறு­வ­னங்­களும் செயற்­திறன் மிக்­க­தா­கவும் மக்­க­ளுக்கு மிகவும் நெருக்­க­மு­டை­ய­தா­கவும் தூய்­மை­யா­ன­வை­க­ளா­கவும் மாற்­றம்­பெற வேண்டும்.

அரச சேவை மீது மக்கள் நம்­பிக்­கையை உறு­தி­செய்­ய­வேண்­டி­யது 15 இலட்சம் அரச ஊழி­யர்­க­ளது முக்­கி­ய­மான கட­மை­யாக அமை­ய­வேண்டும். அரச சேவையின் உயர் பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு திறமை மற்றும் நிபு­ணத்­துவம் பெற்­ற­வர்­களைத் தெரி­வு­செய்­வ­தற்கு புத்­தி­ஜீ­விகள் குழு­வொன்று இதற்­கா­கவே நிய­மிக்­கப்­பட்­டது.

வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் உட்­பட அனைத்து உலக நாடு­களும் எமது நாடு தொடர்பில் நல்­ல­பிப்­பி­ராயம் கொள்வது எமது அரச ஊழி­யர்­களின் செயற்­பா­டு­க­ளிலே தங்­கி­யுள்­ளது. அரச சேவையின் செயற்­தி­றனை அதி­க­ரிப்­ப­தற்கு நவீன தொழில்­நுட்ப நடை­மு­றைகள் அறி­மு­கப்­ப­டுத்தப் படு­வ­துடன் அனைத்து அரச நிறு­வ­னங்­க­ளுக்­கி­டையே தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும்.

வெளி­நாட்டில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் மற்றும் விவ­சா­யத்­துறை உட்பட தொழில்களில் ஈடுபடும் மக்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்திலிருந்தே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்றார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, திலும் அமுனுகம மற்றும் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.