சபை குழப்­பங்கள் குறித்த விசா­ரணை: பிரதி சபா­நா­யகர் தலை­மையில் அறுவர் அடங்­கிய குழு நிய­மனம்

0 672

கடந்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் சபையில் இடம்­பெற்ற குழப்­ப­மான சம்­ப­வங்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்கு பிரதி சபா­நா­யகர் தலை­மையில்  ஆறுபேர் அடங்­கிய குழுவை நிய­மித்­தி­ருப்­ப­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அறி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை  காலை 10.30 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய  தலை­மையில் கூடி­ய­போது சபா­நா­யகர் அறி­விப்பு வேளையில் அவர்  இந்த அறி­விப்பை விடுத்தார்.

நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திக­தி­களில் சபைக்குள் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் குறித்து பொலிஸார் விசா­ர­ணைகளை ஏற்­க­னவே ஆரம்­பித்­தி­ருப்­ப­துடன், அதற்கு மேல­தி­க­மாக விரி­வான உள்­ளக விசா­ர­ணையை நடத்தத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தலை­மையில் முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜ­பக்‌ஷ, ரஞ்சித் மத்­தும பண்­டார, சந்­தி­ர­சிறி கஜ­தீர, பிமல் ரத்­னா­யக்க மற்றும் மாவை சேனா­தி­ராஜா ஆகியோர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.  இந்தக் குழுவின் விசா­ர­ணைகள் பூர்த்­தி­ய­டைந்து அறிக்கை கிடைத்­ததும் அதனை சபைக்கு முன்­வைக்க எதிர்­பார்க்­கின்றேன்.

அதே­நேரம், கடந்த 14, 15 மற்றும் 16ஆம் திக­தி­களில் சபைக்குள் ஏற்­பட்ட குழப்­ப­க­ர­மான சூழ்­நி­லை­களால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பாது­காப்பைக் கருத்­திற்­கொண்டு மேல­திக பொலி­ஸாரை பாது­காப்­புக்கு அழைக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது.

விருப்­ப­மில்­லா­த­போதும் பொலி­ஸாரை சபைக்குள் அழைக்கும் நிலை ஏற்­பட்­டது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பாது­காப்­புக்­கு­ரிய உத்­த­ர­வாதம் வழங்­கப்­ப­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்­துக்கு மேல­தி­க­மாக பொலிஸார் அழைக்­கப்­ப­டு­வதை நான் நிறுத்­துவேன்.

மேலும், பிர­த­மரின் செய­லாளர் செல­வி­னங்­களை முன்­னெ­டுப்­பதைத் தடுக்கும் பிரே­ரணை நீதி­மன்­றத்தில் உள்ள எந்­த­வொரு வழக்­கையும் பாதிக்கும் வகையில் இல்­லை­யென்­பதால் அதனை சபையில் விவா­திக்க முடியும். தினேஷ் குண­வர்­தன தலை­மை­யி­லான குழு­வினர் என்னைச் சந்­தித்து பிர­த­மரின் செய­லா­ளரின் செல­வி­னங்­களைத் தடுப்­பது தொடர்­பான பிரே­ர­ணையை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த முடி­யாது எனக் கூறி­யி­ருந்­தனர்.

பாரா­ளு­மன்­றத்தில் இன்று கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள விவ­காரம் எந்­த­வொரு அமைச்­சர்கள் பற்­றி­யதோ அல்­லது இரா­ஜாங்க, பிரதி அமைச்­சர்கள் பற்­றி­யதோ அல்ல பிர­த­மரின் செய­லாளர் சம்­பந்­தப்­பட்­டது. அர­சாங்­கத்­துக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மானம் ஏற்­க­னவே நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் நம்­பிக்­கை­யில்லா தீர்­மானம் வேறெந்­த­வொரு மன்­றத்­திலும் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட முடி­யா­தது.  நம்­பிக்­கை­யில்லா தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது என்ற உள்­ள­டக்­கத்தைக் கொண்டே பிர­த­மரின் செய­லா­ள­ருக்­கான செல­வி­னங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பான பிரே­ரணை சபையில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, இன்­றை­ய­தினம் விவா­திக்­கப்­படும் பிரே­ரணை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­குடன் தொடர்­பு­பட்­ட­தல்ல. இதற்­க­மைய குறித்த பிரே­ர­ணையை சபையில் விவா­திப்­பதில் எந்­த­வி­த­மான தடையும் இல்லை.

இந்தப் பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் விவா­திப்­ப­தா­னது மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­க­ளுக்கு அது எந்தவிதமான பாரபட்சமாகவும் அமையாது. அத்துடன் பிரதமர் அலுவலகத்தின் செலவினங்கள் குறித்து எந்தவித வழக்குகளும் நிலுவையில் இல்லை. இது தொடர்பில் நாட்டிலுள்ள அரசியலமைப்பு தொடர்பான சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.

அரசியலமைப்பின் 152ஆவது ஷரத்தின் ஆதிக்க வரப்புக்கு உட்பட்ட விடயமாக இது இல்லை என்பதால் இதனை விவாதிப்பதற்கு அனுமதி வழங்குகிறேன் எனக் குறிப்பிட்டார்.
-Vidivlli

Leave A Reply

Your email address will not be published.