ஹஜ் விவகாரத்துக்கு தனியான சட்டவிதிகள் அவசியம் தேவை

0 128

2020 ஆம் ஆண்­டுக்­கான இலங்­கையின் ஹஜ் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வ­தற்­காக சவூதி அரே­பி­யா­வுக்குச் சென்­றி­ருந்த ஹஜ் தூதுக்­குழு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு நாடு திரும்­பி­யுள்­ளது.
இலங்­கைக்கு 2020 ஆம் ஆண்­டுக்­காக 3500 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் முஸ்லிம் சனத்­தொ­கைக்­கேற்ப 2800 கோட்டா வழங்­கப்­ப­டு­வதே வழ­மை­யாகும். ஆனால் இம்­முறை முதற் தட­வை­யிலே 3500 கோட்டா வழங்­கப்­பட்­டுள்­ளமை குறித்து நாம் சந்தோசப்பட முடியும்.

இதே­வேளை, ஹஜ் தூதுக்­குழு 2000 மேல­திக ஹஜ் கோட்­டா­ வழங்­கப்­பட வேண்­டு­மென சவூதி அரே­பியா ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிர­தி­ய­மைச்சர் கலா­நிதி அப்துல் சுலை­மா­னிடம் கோரிக்­கை­யொன்­றினை முன்­வைத்­துள்­ளது. தாம் முன் வைத்த கோரிக்­கைக்கு சாத­க­மான பதில் கிடைக்­கு­மென தூதுக்­கு­ழுவின் தலைவர் மர்ஜான் பளீல் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார்.

வூ­திக்கு விஜயம் செய்த தூதுக்­கு­ழுவில் அமைச்­சரோ இன்றேல் துறை­சார்ந்­த­வர்­களோ முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரி­களோ இடம் பெற்­றி­ருக்­க­வில்லை.

ஹஜ் விவ­காரம் தொடர்பில் அனு­ப­வ­மற்­ற­வர்­களே இடம் பெற்­றி­ருந்­தனர். இவர்கள் 3500 ஹஜ் கோட்டா பெற்றுக் கொண்­டுள்­ள­மைக்கு முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பைசர் முஸ்­தபா பாராட்­டு­களைத் தெரி­வித்­துள்ளார்.

பேரு­வளை நகர சபையின் முன்னாள் தலைவர் மர்ஜான் பளீலின் தலை­மை­யி­லான இலங்கை ஹஜ் தூதுக்­கு­ழுவில் நகீப் மெள­லானா, அஹ்கம் உவைஸ், அப்துல் சத்தார், எம்.ஏ. அஹமத் புவாத் ஆகியோர் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர்.

புதிய அரசு பத­வி­யேற்­றதன் பின்பு மேற்­கொள்­ளப்­படும் 2020க்கான ஹஜ் ஏற்­பா­டு­களில் பல ­மாற்­றங்கள் இடம்­பெ­று­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஹஜ் கோட்டா பகிர்­விலும் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படும் என மர்ஜான் பளீல் தெரி­வித்­துள்ளார்.

இன்னும் இரண்­டொரு தினங்­களில் ஹஜ் தூதுக்­குழு தனது அறிக்­கையை பிர­த­ம­ரிடம் கைய­ளிக்­க­வுள்­ளது. அவ்­அ­றிக்­கையில் இவ்­வா­றான சிபா­ரி­சுகள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தா­கவும் மர்ஜான் பளீல் தெரி­வித்தார்.

ஹஜ் கோட்டா முக­வர்­க­ளுக்கு இடையில் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டாது கலா­சார அமைச்சு மாற்­று­வ­ழி­களைக் கையா­ளுமா? எனவும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. அப்­ப­டி­யாயின் நூற்­றுக்கும் மேற்­பட்ட ஹஜ் முக­வர்­களின் எதிர்­காலம் பற்­றியும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

இது­வரை காலம் இடம்­பெற்று வந்த நடை­மு­றை­க­ளுக்கு மாற்­ற­மா­கவே ஹஜ் நகர்­வுகள் இடம் பெறு­கின்­றன. 2020 ஆம் ஆண்டுக்கென அரச ஹஜ்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. ஹஜ் ஏற்­பா­டுகள் அரச ஹஜ்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துடன் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

ஆட்சி மாற்­றத்தின் போதெல்லாம் ஹஜ் விவ­கா­ரங்கள் ஆட்­சி­யா­ளர்­களின் எண்­ணப்­படி கையா­ளப்­ப­டு­வது நிறுத்­த­ப்ப­ட­வேண்டும். ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான சட்ட விதிகள் அவ­சி­ய­மாகும். கடந்த கால அரசு இது தொடர்­பான ஆய்­வினை மேற்­கொண்­டதன் பின்பு ஹஜ் விவ­கா­ரத்­துக்­கென தனி­யான சட்டம் ஒன்றை இயற்­றிக்­கொள்­ளத்­தீர்­மா­னித்து அதற்­கான நகர்­வு­களை முன்­னெ­டுத்­தது. அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துடன் ஹஜ் சட்­ட­வ­ரைபு சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. அதன் இறுதி நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்டியது கலாசார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் பொறுப்பாகும். பொதுத்தேர்தலை அடுத்து அமையவுள்ள அரசாங்கம் ஹஜ் விவகாரங்களில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்.

புதிய அரசாங்கம் ஹஜ் ஏற்பாடுகளில் எவ்வாறான புதிய மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அம்மாற்றங்கள் ஹஜ் யாத்திரிகர்களின் நலன் பேணுபவைகளாக அமையவேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.