சுனாமி வீட்டுத் திட்டத்தை புனரமைத்து வழங்க வேண்டும்

0 554

சுனாமி அனர்த்தம் இடம்­பெற்று இன்­றுடன் 15 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. இலங்கைத் தீவைப் பேர­ழி­வுக்­குள்­ளாக்­கிய இந்த அனர்த்­தத்தை இல­குவில் மறந்­து­விட முடி­யாது. எனினும் இதன் பாதிப்­பு­க­ளி­லி­ருந்து இலங்கை மக்­களை மீட்­டெ­டுக்க பல்­வேறு நாடு­களும் தொண்டு நிறு­வ­னங்­களும் கைகொ­டுத்­தன. உயி­ரி­ழப்­பு­களைத் தவிர ஏனைய இழப்­பு­களை ஈடு­செய்யும் வகையில் அந்த உத­விகள் அமைந்­தி­ருந்­தன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

அவ்­வா­றா­ன­தொரு உத­வித்­திட்­டம்தான் சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் நிதி­யு­த­வி­யுடன் அம்­பாறை மாவட்­டத்தில் சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீட்டுத் திட்­ட­மாகும். ஏறக்­கு­றைய 40 ஏக்கர் காணியில் இலங்கை நாணயப் பெறு­ம­தியில் 552 மில்­லியன் நிதியில் ஆண், பெண்­க­ளுக்­கான தனி­யான பாட­சா­லைகள், வைத்­தி­ய­சாலை, சந்தைத் தொகுதி, பொது வைபவங்­க­ளுக்­கான மண்­டபம், விளை­யாட்டு மைதானம், பள்­ளி­வாசல் மற்றும் பஸ் தரிப்பிடமும் கொண்­ட­தொரு நவீன நக­ர­மாக இத்­திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. இவ்­வீட்­டுத்­திட்­டத்தை கொண்டு வந்­ததில் அப்­போ­தைய வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்­ச­ராக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் பெரும்­பங்கு வகித்­தி­ருந்தார்.

எனினும் ஜாதிக ஹெல உறு­மய, நுரைச்­சோலை வீடு­களை முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் வழங்­கு­வ­தற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­தது. இவ்­வ­ழக்கின் பிர­காரம் நுரைச்­சோலை வீடு­களை தனி இன­மொன்­றுக்கு வழங்­கக்­கூ­டாது என்றும் அனைத்து இனத்­த­வர்­க­ளையும் உள்­ள­டக்கி இவ்­வீ­டுகள் நீதி­யாகப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என முன்னாள் நீதி­ய­ரசர் சரத் என் சில்­வா­வினால் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

இத்­தீர்ப்பு வழங்­கப்­பட்டு 10 வரு­டங்கள் கடந்தும் இவ்­ வீ­டுகள் இன்று வரை பய­னா­ளி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டாது இழுத்­த­டிப்புச் செய்­யப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இவ்­வீட்­டுத்­திட்டம் தீக­வாபி புனித பிர­தே­சத்தின் ஆளு­கைக்­குட்­பட்ட நிலப்­ப­ரப்­புக்குள் உள்­ளதால் இவ்­வீட்­டுத்­திட்டம் தனியே முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் சென்று விடக் கூடாது அல்­லது இப்­பி­ர­தே­சத்தில் முஸ்­லிம்கள் குடி­யேறக் கூடாது என்­பதில் அம்­பாறைப் பிர­தே­சத்­தி­லுள்ள பெரும்­பான்மை அர­சி­யல்­வா­தி­களும் கடும்­போக்­கா­ளர்­களும் மிகவும் அவ­தா­ன­மாக இருந்து வரு­கின்­றனர்.

இருப்­பினும், கடந்த 2015 இல் உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்­சியின் மூலம் இந்த வீடுகள் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்று அம்­மக்கள் எதிர்­பார்த்­தார்கள். ஏனெனில், நல்­லாட்சி உரு­வா­வ­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­மை­களில் பெரும்­பா­லா­ன­வர்­களும் இம்­மா­வட்­டத்தின் பெரும்­பா­லான முஸ்­லிம்­களும் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள். அவ்­வாறு வாக்­க­ளித்தும் இம்­மக்­களின் எதிர்­பார்ப்பு நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இன்று அந்த அரசாங்கமும் ஆட்சியில் இல்லை.

கடந்த ஆட்­சியில் அரசியல்வாதிகள் அமைச்சுப் பத­வி­க­ளையும், வெளி­நாட்டுத் தூதுவர் பத­வி­க­ளையும், நிறு­வனத் தலை­வர்கள் பத­வி­க­ளையும் தங்­க­ளுக்கும், தங்­க­ளது கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுக்க எடுத்த முயற்­சி­ய­ள­விற்கு சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்டு வீடு­களை இழந்த இம்­மக்­க­ளுக்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு­களை பெற்­றுக்­கொ­டுக்க முயற்சி எடுக்­க­வில்லை என்ற இம்­மக்­களின் குற்­றச்­சாட்­டுக்­களில் நியா­ய­மில்­லா­ம­லில்லை.
இந்­நி­லையில் நீதி­மன்றத் தீர்ப்பின் அடிப்­ப­டையில் மாவட்ட இன விகி­தா­சா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு காணிக்­கச்­சேரி வைத்து காணி இல்­லா­த­வர்­க­ளுக்கு இவ்­வீ­டு­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் கடந்த 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டன. கடந்த வருடம் கூட இவ் வீடு­களை வழங்­கு­வ­தற்­கான பெயர்ப்­பட்­டியல் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டது. எனினும் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை.

இதற்­கப்பால் இந்த வீட்டுத் திட்டம் மனி­தர்கள் வசிக்க முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. பற்­றைக்­கா­டுகள் வளர்ந்து விலங்­கு­களின் வாழ்­வி­ட­மாக மாறி­யுள்­ளது. கட்­டி­டங்கள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்­ளன. இந் நிலையில் இந்த வீடு­களை மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளித்­தாலும் அதில் அவர்­களால் வாழ முடி­யுமா என்­பதும் கேள்­விக்­கு­றி­யா­கவே மாறி­யுள்­ளது.

எப்படியிருந்த போதிலும் ஏறக்குறைய 40 ஏக்கர் காணியில் 552 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சுனாமி வீட்டுத் திட்டம் வீண் போக இடமளிக்க முடியாது. இது விடயத்தில் புதிய அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கவனம் செலுத்த வேண்டும்.

இராணுவத்தின் உதவியுடன் இவ் வீட்டுத் திட்டத்தை மீளப் புனரமைத்து உடனடியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது விடயத்தில் இனவாத ரீதியான நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.