பாராளுமன்றத்திற்கு முஸ்லிம் உறுப்பினர்களை உள்ளீர்ப்பது எவ்வாறு?

0 137

ஜனா­தி­பதி தேர்­தல் முடி­வுகளின் வரைபடம் இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கும், பெரும்­பான்­மை­யி­ன­ருக்கும் இடை­யி­லான வேறு­பாட்டின் உச்­ச­கட்­டத்தை காட்­டு­வ­தாக அமைதுள்ளது. அடுத்­த­கட்­ட­மாக நிய­மிக்­கப்­பட்ட இடைக்­கால அமைச்­ச­ர­வையில், அமைச்சுப் பத­விகள் முஸ்­லி­க­ளுக்கு வழங்­காமை, முஸ்­லிம்கள் ஆத­ர­வ­ளித்த ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் ரணில் மற்றும் சஜித் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான தலை­மைத்­துவப் போராட்டம் என்­பன முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்­ப­டுத்­தி­யமை மட்­டு­மல்­லாது, குறிப்­பாக முஸ்­லிம்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் மக்கள் காங்­கி­ரஸின் அடுத்­த­கட்ட அர­சியல் நகர்வை எவ்­வாறு அமைத்துக் கொள்­வது என்­பதைத் தீர்­மா­னிக்க முடி­யாத ஓர் சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதனால் நாட்­டிற்கு இனக்­கட்­சிகள் தேவையா? வட கிழக்­கிற்கு வெளியே முஸ்லிம் கட்­சிகள் பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டுமா? முஸ்லிம் கட்­சிகள் ஒன்­றி­ணைய வேண்­டுமா? என்று பல கேள்­விகள் முஸ்லிம் சமூ­கத்­திற்குள் எழுந்த வண்­ண­முள்­ளன.

இந்­நி­லையில் தற்­போது ஆட்­சி­ய­மைத்­துள்ள பொது­ஜன பெர­முன முஸ்­லிம்கள் விட­யத்தில் இரட்டை நிலைப்­பாட்டில் உள்­ளது. முத­லா­வது, தமது அர­சாங்­கத்­துடன் முன்னாள் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோர்­களை இணைத்துக் கொள்­வ­தில்லை. இரண்­டா­வது முஸ்லிம் சமூ­கத்தை பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து பய­ணிக்­கு­மாறு அழைப்பு விடுத்­துள்­ளது.

இந்த அர­சியல் நிலைப்­பாட்­டிற்­கான காரணம், அர­சியல் சட்டத் திருத்­த­மொன்றை அல்­லது யாப்பு மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்த பாரா­ளு­மன்­றத்தில் மூன்றிலிரண்டு பெரும்­பான்மை எடுப்­பா­தாகும். அதாவது, தற்­போ­தைய சூழ்­நி­லையில் பாரா­ளு­மன்­றத்தில் எவ­ருக்கும் மூன்றிலிரண்டு பெரும்­பான்மை இல்லை. இந்­நி­லையில் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பெரும் நோக்­குடன் அவர்கள் முஸ்லிம் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைக்கு சென்றால் அவர்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் பெற்ற 52% வாக்­கு­களில் 40% பேரி­ன­வாத சிந்­த­னை­யூ­டாகப் பெறப்­பட்ட வாக்­குகள் குறைந்­து­விடும். எனவே குறித்த வாக்­கு­களை தக்க வைத்­துக்­கொள்ள ஹக்கீம் மற்றும் ரிஷாத் விட­யத்தில் எதி­ரான போக்கை கைக்­கொள்ள வேண்டும்.

பொது­ஜன பெர­முன தற்­போது ஆட்சி அமைத்­தாலும், பொதுத் தேர்­த­லின்பின் தொடர்ந்தும் பிர­தமர் பத­வியை தக்­க­வைத்துக் கொள்­ளவும். தமக்குப் பொருத்­த­மான முறையில் சட்ட திருத்தம் அல்­லது யாப்பு மாற்­றத்தை செய்ய பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பெற­வேண்டும். அதற்­காக தற்­போ­துள்ள 52% ஐ 60% ஆக அதி­க­ரித்துக் கொள்ள முஸ்­லிம்கள் உட்­பட சிறு­பான்­மை­யின வாக்­கு­களை பெற­வேண்டும். என­வேதான், முஸ்லிம் சமூ­கத்தை தங்­க­ளுடன் இணைந்து பய­ணிக்­கு­மாறு பொது­ஜன பெர­மு­னா­வினால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது இலங்கை அரசில் மாத்­தி­ர­மல்ல, இந்­திய அர­சிலும் பேரி­ன­வா­திகள் எழுச்சி பெற்­றுள்­ளனர். இதன் அடை­யா­ளங்­க­ளாக இந்­தி­யாவில் பாபர் மசூதி தீர்ப்பு, இந்­திய குடி­யு­ரிமை திருத்தச் சட்டம் என சட்­ட­ரீ­தி­யாக சிறு­பான்­மைக்கு எதி­ரான போராட்­டங்கள் அரங்­கே­றிய வண்­ண­முள்­ளன. இவ்­வா­றாக சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான ஒரு சட்­ட­ரீ­தி­யான போராட்டம் தற்­போது இலங்­கையில் ஏற்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றிகள் உரு­வா­கி­யுள்­ளன.

இதன் ஓர் அங்­கமே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லிய ரதன தேரரால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்ள 2019.12.18 ஆம் திகதி வெளி­யான தனியார் சட்­ட­மூல வர்த்­த­மானி அறி­வித்­தல்­படி 1951 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க விவாக, விவா­க­ரத்து சட்­டத்தை ரத்­தாக்கும் சட்­ட­மூலம். குறித்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரித்து, அரசு சட்­ட­மாக ஏற்­றுக்­கொண்டால் இலங்கை முஸ்­லிம்­களின் சிறப்­பு­ரி­மை­யாக இருந்த முஸ்லிம் தனியார் சட்டம் இல்­லா­ம­லா­கி­விடும். இது இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு இழைக்­கப்­ப­ட­வுள்ள ஓர் அநீ­தி­யாகும்.

இவ்­வாறு தமிழ், சிங்­கள சிறு­பான்­மைக்கு எதி­ராக சட்ட திருத்தம் அல்­லது யாப்பு மாற்­றங்கள் அல்­லது சட்­டத்தை ரத்து செய்­த­லூ­டாக அநீ­திகள் இழைக்­கா­ம­லி­ருப்­ப­தற்கு ஏற்ற வகையில் தமது அர­சியல் பய­ணத்தை மாற்­றிக்­கொள்ள வேண்டும்.

இலங்­கையில் பாரா­ளு­மன்­றத்தில் ஒரு சட்டம் நிறை­வேற்ற மூன்றிலிரண்டு ஆதரவு பெற­வேண்டும்.

இலங்­கையில் சிறு­பான்­மைக்கு எதி­ராக அநீ­தி­யான சட்­டங்கள் சமர்ப்­பித்து அதற்கு இன ரீதி­யாக பெரும்­பான்­மை­யினர் ஆத­ர­வ­ளித்தால் சிறு­பான்­மை­யி­னரின் இருப்பு சின்னா பின்­ன­மா­கி­விடும். இது நாம் இலங்­கையர் என்­ப­தற்குப் பதி­லாக இன ரீதி­யாக சிந்­தித்து செயற்­பட்­டதன் ஓர் விளை­வாகும். இந்­நி­லையில் நாம் தொடர்ந்தும் இன அர­சி­யலில் தனித்துப் பய­ணித்தால் பேரி­ன­வாத அர­சியல் முறுகல் நிலை­ய­டையும். இது இலங்­கையன் என்ற அடிப்­ப­டையில் இன, மதங்­களை தாண்டி நாட்டின் குடி­மக்­களை வீழ்ச்­சி­ய­டையச் செய்யும்.

எனவே, நாட்டில் ஏற்­பட்­டுள்ள பேரி­ன­வாத சிந்­த­னையை மழுங்­க­டிக்கச் செய்யும் வித­மாக வட, கிழக்­கிற்கு வெளியே முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யுடன் இணைந்து செயற்­ப­டத்தான் வேண்டும். இதன் ஓர் அங்­க­மாக இலங்கை முஸ்­லிம்கள், தற்­போ­தைய சூழ்­நி­லையில் அடுத்த பொதுத்­தேர்­தலில் பெரும்­பான்­மையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற பொது­ஜன பெர­முன கட்­சி­யு­டாக வட கிழக்­கிற்கு வெளியே ஏனைய மாவட்­டங்­களில் குறைந்­த­பட்சம் ஒவ்­வொரு வேட்­பா­ள­ரை­யா­வது கள­மி­றக்க வேண்டும்.

ஆனால், நாம் பொதுத்­தேர்­த­லுக்­குபின் எதிர்­பார்க்­கின்ற அரசால் முன்­வைக்­கின்ற அனைத்து வேலைத்­திட்­டங்கள், சட்­டங்­க­ளுக்கு “ஆமா. சாமி” என்று கை தூக்­கி­விட்டு இன்­னொரு தேர்தல் வரும் போது, “நம்மை அர­சாங்கம் ஏமாற்­றி­விட்­டது. மன்­னித்து விடுங்கள்” என்று சமூ­கத்­திடம் மன்­னிப்புக் கேட்கும் தலை­வர்­க­ளை­யல்ல. மாறாக, ஒவ்­வொரு திட்­டங்­க­ளையும் தீர விசா­ரித்து பொருத்­த­மான தீர்­வு­களை முன்­வைக்கும் ஆளு­மை­யுள்ள தலை­வர்­க­ளையே நாம் தெரி­வு­செய்ய வேண்டும்.

இதன் நோக்கம் இணைந்து செயற்­ப­டு­வதன் ஊடாக பேரி­ன­வாத சிந்­த­னையை மழுங்­க­டிப்­பதும் சமூ­கத்­திற்கு புதிய அர­சியல் தலை­வர்­களை உரு­வாக்­கு­வ­தாகும். இதற்­காக முஸ்லிம் கட்­சிகள் அர­சாங்­கத்­துடன் ஒன்­றி­ணை­வது பொருத்­த­மில்லை. ஏனெனில், முஸ்லிம் கட்­சிகள் தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது ஆத­ர­வ­ளிக்­காமை அக்­கட்சி வாக்­கா­ளர்­களின் மனங்­களில் ஒரு கடுப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­நி­லையில் இணை­வது பொருத்­த­மில்லை. மேலும் அது எதிர்க்­கட்­சி­யி­லுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் 20% –- 30% இடைப்­பட்ட பௌத்த வாக்­கா­ளர்­களின் மனங்­களில் தவ­றான எண்­ணங்­களை ஏற்­ப­டுத்தும். அதா­வது, முஸ்­லிம்கள் எதிர்க்­கட்சி அர­சியல் செய்யும் ஆளு­மை­யற்­ற­வர்கள், அமைச்சுப் பதவி மோகம் கொண்­ட­வர்கள். போன்ற தவ­றான எண்­ணங்­களை ஏற்­ப­டுத்­தி­விடும்.

இலங்­கையில் முஸ்­லிம்­களை பொறுத்­த­வ­ரையில் இன­வாதக் கட்­சி­க­ளுக்­குள்ளும், ஆட்சி அமைக்கும் இரு கட்­சி­களில் ஓர் கட்சிக்கு மாத்திரம் சார்ந்து நிற்கும் போக்குடன் செயற்படுகின்றனர். அவ்வாறில்லாமல் இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பிரிந்து ஆதரவை வெளிப்படுத்தினால்தான் எக்கட்சி ஆட்சியமைத்தாலும் தலைநிமிர்ந்து நிற்கலாம்.

எனவே, சிறந்த சேவையாளர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் இனவாதக் கட்சிகளூடாக தேர்தலில் களமிறக்காமல் பேரினவாதக் கட்சிகள் ஊடாக களமிறக்கி முஸ்லிம்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துகொள்வோம். இதற்காக முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் மாவட்டங்களில் இருவரை களமிறக்கி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யவும் வேண்டாம்.

மதம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து, நாடென்ற அடிப்படையில் பெரும்பான்மையுடன் சோரம் போகாமல், கைகோர்த்து அபிவிருத்திக்கான அரசியலை முன்னெடுப்போம்.-Vidivelli

  • இப்னு அஸாத்

Leave A Reply

Your email address will not be published.