இயற்கை அனர்த்தங்களை தவிர்க்க நீண்ட கால திட்டம் தேவை

0 116

நாட்டில் 7 மாகா­ணங்­களைச் சேர்ந்த 13 மாவட்­டங்­களில் நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. கடும் மழை, வெள்ளம், மண்­ச­ரி­வுகள் உட்­பட கால­நிலை அனர்த்­தங்­களால் 18840 குடும்­பங்­களைச் சேர்ந்த 64.608 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

பதுளை, மொன­ரா­கலை, மட்­டக்­க­ளப்பு அம்­பாறை, கண்டி, நுவ­ரெ­லியா, மாத்­தளை, அம்­பாந்­தோட்டை, குரு­ணாகல், புத்­தளம், கேகாலை, அநு­ரா­த­புரம் மற்றும் பொலன்­ன­றுவை ஆகிய மாவட்­டங்­களைச் சேர்ந்த மக்­களே இவ்­வாறு பாதிக்கப் பட்­டுள்­ளார்கள். இதே­வேளை இந்த இயற்கை அனர்த்­தங்­க­ளினால் அக­தி­க­ளா­கி­யுள்ள 5,255 குடும்­பங்­களைச் சேர்ந்த 17,766 பேர் பாது­காப்­பாக 132 தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டுள்­ளது.

கடும் மழை மற்றும் வெள்ள அனர்த்­தத்­தினால் புத்­தளம் மாவட்­டத்தைச் சேர்ந்த மக்­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். புத்­தளம் மாவட்­டத்தில் மாத்­திரம் 2,273 குடும்­பங்­களைச் சேர்ந்த 7974 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி தெரி­வித்­துள்ளார்.

மேலும் அம்­பாறை மாவட்­டத்தில் 1633 குடும்­பங்­களைச் சேர்ந்த 5690 பேரும் அநு­ரா­த­புர மாவட்­டத்தில் 1272 குடும்­பங்­களைச் சேர்ந்த 4341 பேரும் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 829 குடும்­பங்­களைச் சேர்ந்த 3362 பேரும் மொன­ரா­கலை மாவட்­டத்தில் 973 குடும்­பங்­களைச் சேர்ந்த 3350 பேரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 1043 குடும்­பங்­களைச் சேர்­நத 3293 பேரும் பதுளை மாவட்­டத்தில் 650 குடும்­பங்­களைச் சேர்ந்த 2565 பேரும் பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் 776 குடும்­பங்­களைச் சேர்ந்த 2371 பேரும் மாத்­தளை மாவட்­டத்தில் 484 குடும்­பங்­களைச் சேர்ந்த 1592 பேரும் குரு­ணாகல் மாவட்­டத்தில் 311 குடும்­பங்­களைச் சேர்ந்த 939 பேரும் நுவ­ரெ­லிய மாவட்­டத்தில் 115 குடும்­பங்­களைச் சேர்ந்த 389 பேரும் கண்டி மாவட்­டத்தில் 93 குடும்­பங்­களைச் சேர்ந்த 347 பேரும் மற்றும் கேகாலை மாவட்­டத்தில் 6 குடும்­பங்­களைச் சேர்ந்த 25 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள் என அனர்த்த முகா­மைத்­துவ தர­வுகள் தெரி­விக்­கின்­றன.
இந்­நி­லைமை கார­ண­மாக 62 வீடுகள் முழு­மை­யா­கவும் 1463 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக பிரதீப் கொடிப்­பிலி தெரி­வித்­துள்ளார். நிலவும் சீரற்ற கால நிலை கார­ண­மாக ஏற்­படும் அனர்த்­தங்­க­ளி­லி­ருந்து மக்கள் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்­கு­மாறும் வேண்­டி­யுள்ளார்.

ராஜாங்­கன, கலா­வெவ, தம்­போவ, இனி­கி­மி­டிய, அங்­க­முவ, தெது­று­ஓய, அம்­ப­கொ­ல­வெவ, ரம்­புக்கன் ஓய, லுணு­கம்­வெ­ஹர, கிம்­முல்­வா­ன­வெவ, வெஹ­ர­கல, முரு­த­வெல, உட­வ­ளவ, போவ­தென்ன, பராக்­கி­ரம சமுத்­திரம் உட்­பட பல நீர்த்­தேக்­கங்­களின் வான்­க­த­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன. மகா­வலி கங்­கையின் நீர் மட்டம் சடு­தி­யாக உயர்­வ­டைந்­துள்­ளதால் மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

வெள்ள அபா­யத்தில் சிக்­குண்ட மக்­களை மீட்கும் பணிகள் மற்றும் நிவா­ரண நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள கடற்­ப­டையின் 25 குழுக்கள் களத்தில் இறக்­கப்­பட்­டுள்­ளன.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ நேற்று வட மத்­திய மாகா­ணத்தின் அநு­ரா­த­புரம் மற்றும் பொலன்­ன­றுவைப் பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்தார். பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பார்­வை­யிட்டார். அநு­ரா­த­புரம் ஜனா­தி­பதி மாளி­கையில் கூட்டம் ஒன்­றி­னையும் நடத்தி சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கும் அர­சியல் பிர­மு­கர்­க­ளுக்கும் தேவை­யான அறி­வு­றுத்­தல்­களை வழங்­கினார். பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக நிவா­ர­ணங்­களை வழங்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

எமது நாடு இயற்கை அனர்த்­தங்­களால் குறிப்­பாக வெள்ளம், மண்­ச­ரி­வு­களால் அடிக்­கடி பாதிக்­கப்­பட்டு வரு­கி­றது. இயற்கை அனர்த்­தங்கள் ஏற்­பட்­டதன் பின்பு நிவா­ர­ணங்கள் வழங்­கு­வதும் நஷ்­ட­ஈடு வழங்­கு­வதும் வழ­மை­யாக இடம்­பெற்று வரு­கி­றது.

அர­சாங்கம் இவ்­வா­றான செயற்­பா­டு­களைத் தவிர்த்து இயற்கை அனர்த்­தத்­தி­லி­ருந்து மக்­களைப் பாது­காப்­ப­தற்­காக நிரந்­தர திட்­டங்கள் வகுக்­க­வேண்டும். வெள்ள அபா­யத்தைத் தவிர்த்து மழை­நீரை விவ­சா­யத்­துக்குப் பயன்­ப­டுத்தும் வகையில் புதிதாக நீர்த்தேக்கங்களையும் குளங்களையும் அமைக்க முடியும். இந்நீரை வரண்ட பிரதேச விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்படலாம். இது பாரிய திட்டம். பெருந்தொகை நிதி தேவைப்படலாம். என்றாலும் இவ்வாறான திட்டங்களை ஆரம்பிப்பதன் மூலம் நாட்டின் உணவு உற்பத்தியிலும் மின்வலு உற்பத்திகளிலும் நாம் தன்னிறைவு பெறமுடியும்.

புதிய அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.