கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தாவிடின் போராட்டம் வெடிக்கும்

கோடீஸ்வரன் எம்.பி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

0 589

கல்­முனை வடக்குப் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­தா­விட்டால் அம்­பா­றையில் வாழும் ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களை ஒன்று திரட்டி ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவும் மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்கு எதி­ராகவும் போராட்­டங்­களை முன்­னெ­டுக்கத் தயா­ராக இருக்­கின்றோம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வரன் தெரி­வித்தார்.

அம்­பாறை மாவட்டம் சம்­மாந்­துறை பிர­தே­சத்­திற்­குட்­பட்ட வறிய மாண­வர்­க­ளுக்­கான கற்றல் உப­க­ர­ணங்கள் வழங்கும் நிகழ்வு மல்­வத்தை அப்பிள் சமூக மேம்­பாட்டு மையத்தின் ஏற்­பாட்டில் நேற்­றைய தினம் மல்­வத்தை விபு­லா­னந்­தா மகா வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற போது மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

அம்­பாறை மாவட்­டத்தில் அடிப்­படைத் தேவை­யாக தமிழ் பகு­தி­களில் மூன்று பிர­தேச செய­ல­கங்கள் மற்றும் பிர­தேச சபை­களின் அவ­சியம் இருக்­கின்­றன. புதிய பிர­தேச செய­ல­கங்கள் உரு­வாக்க வேண்­டிய கட­மைப்­பா­டு­களில் கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­லகம் தரம் உயர்த்­தப்­பட வேண்டும். பொத்­துவில் பிர­தே­சத்தில் கோம­தியை மைய­மா­கக்­கொண்டு ஒரு பிர­தேச செய­ல­கமும், சம்­மாந்­துறை பிர­தே­சத்தில் மல்­வத்­தையை அடிப்­ப­டை­யாக கொண்ட பிர­தேச செய­ல­கங்கள் உரு­வாக்­க­ப்பட வேண்­டிய அவ­சி­யப்­பாடு அம்­பாறை மாவட்­டத்தில் காணப்­ப­டு­கி­றது.

இதற்கு காரணம் எங்­க­ளது நிலம் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­றது. எமது பொரு­ளா­தார வளம் சுரண்­டப்­ப­டு­கி­றது. திட்­ட­மி­டப்­பட்ட முறையில் ஏனைய சமூ­கங்­களால் கலை, கலா­சாரம் கல்­வியை தேசி­யத்தை பாது­காக்க வேண்டும் என்றால் புதிய பிர­தேச செய­ல­கங்கள் உரு­வாக்­க­ப­டும்­போது தான் தன்­னி­றைவு பெற்ற சமூ­க­மாக மாற்றம் பெறும். கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வற்­காக நாங்கள் பல­த­ரப்­பட்ட முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்தி கொடுக்க வேண்­டு­மெனக் கடந்த ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்­திடம் பல­த­ரப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடார்த்­தி­யி­ருந்தோம், பல்­வேறு அழுத்­தங்­களை கொடுத்தோம். ஆனால் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் தர­மு­யர்த்தி தரு­வ­தாக இறு­தி­வரை சொல்லி சொல்லி எங்­களை ஏமாற்­றி­விட்­டது .

தேர்தல் காலத்தில் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ பிர­சார மேடை­களில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு வாக்­க­ளிக்­கு­மாறு வாக்கு கேட்டார். மக்கள் அதற்கு இசைந்து கணி­ச­மான வாக்­கு­களை வழங்­கினர்.

ஜனா­தி­ப­தி­யானால் மூன்று நாட்­களில் தர­மு­யர்த்தி கொடுக்­கப்­படும் என்று முழங்­கினார். ஆனால் மாதங்கள் கடந்தும் தர­மு­யத்­தப்­ப­ட­வில்லை. இன்­று­கூட கல்­முனை பிர­தேச செய­லக விடயம் எட்­டாக்­க­னி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சிக்­கா­லத்தில் கருணா எனப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் புனர்­வாழ்வு அமைச்­ச­ராக இருந்­தவர். அந்த நேரம் செய்­யாத விட­யத்தை, சொல்­லாத விட­யத்தை இன்று கூக்­கு­ர­லிட்டுத் திரி­கின்றார். இன்று மக்­களை திசை திருப்­பு­கின்ற போலி பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்றார்.

கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விட­யத்தை பேசும் பொரு­ளாக, தேசிய பிரச்­சி­னை­யாக, சர்­வ­தேச பிரச்­சி­னை­யாக கொண்டு வந்­த­வர்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. தர­மு­யர்த்தி தரு­வோ­மென சொல்ல வைத்­த­வர்கள் நாங்கள். அவ்­வாறு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அழுத்­தங்­களை கொடுத்­தது போல் தற்­போ­தி­ருக்­கின்ற ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஆட்­சிக்கு அழுத்­தங்­களை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு கொடுக்கும். கல்­முனை பிர­தேச செய­லகம் தர­மு­யரும் என்ற விட­யத்தில் கூடு­த­லான அழுத்­தங்­களை கொடுத்து தர­மு­யர்த்தும் வரை போராடிக் கொண்டே இருப்போம் அடுத்­த­கட்­ட­மாக பிர­தமர் குறிப்­பிட்ட காலத்­திற்குள் செய்து தரா­விட்டால் கல்­மு­னையில் வாழும் தமிழ் மக்கள் மட்­டு­மல்ல, அம்­பா­றையில் வாழும் ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களை ஒன்­று­தி­ரட்டிப் போரா­டு­வ­தற்குத் தயா­ராக இருக்­கின்றோம்.

எப்­படி ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ராக நாங்கள் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து உண்­ணா­வி­ர­தத்தை மேற்­கொண்­டி­ருந்­தோமோ அதே­போன்று பொது­ஜன பெர­முன எதி­ராக மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகியோருக்கு எதிராக அழுத்தங்களையும் போராட்டங்களையும் எங்களது தமிழ் மக்கள் முன்னெடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில், சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வெ. ஜெயச்சந்திரன், இலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணியின் துணை செயலாளர் அ.நிதான்சன், மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய அதிபர் திருமதி ஜி.கணேஸ்வரன் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.-Vidivelli

  • பாறுக் ஷிஹான்

Leave A Reply

Your email address will not be published.