நெருக்கடிகளின் அத்திவாரம்

0 1,164

இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் உண்­மை­யாகப் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்கள் அனை­வ­ருமே கவர்ச்­சி­யான தேர்தல் பிர­க­ட­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். எனினும், நாட்டின் தற்­போ­தைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­கின்ற அடிப்­ப­டை­யி­லான தேர்தல் பிர­க­ட­னங்கள் எதை­யுமே காண­மு­டி­ய­வில்லை. கடன் பிரச்­சினை என்­பது மாத்­திரம் இலங்­கையில் தீர்க்­கப்பட வேண்­டிய ஒரே­யொரு பிரச்­சி­னை­யல்ல என்ற போதிலும், வெளி­நாட்டுக் கடன் சுமையைக் குறைப்­பது தொடர்­பான சிறந்த யோச­னைகள் ஜனா­தி­பதி வேட்­பாளர் ரொஹான் பல்­லே­வத்த என்­ப­வரால் மாத்­திரம் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­ததைக் காண­மு­டிந்­தது.

அனைத்து ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களும் தன்­னிடம் பொறுப்­ப­ளிக்­கு­மாறு கோரி­யது சாதா­ரண அன­வி­லேனும் ஆரோக்­கி­ய­மாக நிலையில் இருக்­கின்ற நாட்­டை­யல்ல. மாறாக, அனைத்து துறை­க­ளிலும் வீழ்ச்­சி­கண்ட நிலை­யி­லுள்ள நாட்­டையே அவர்கள் தங்­க­ளிடம் பொறுப்­ப­ளிக்­கு­மாறு கோரி­யி­ருந்­தனர். வீழ்ச்­சி­ய­டைந்த நிலை­யி­லி­ருந்து நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான சிறந்த நோக்கு கடந்த ஜனா­தி­பதி தேரி­தலில் போட்­டி­யிட்ட எந்த அபேட்­ச­க­ரி­டமும் காண முடி­ய­வில்லை.

நாட்டின் நெருக்­கடி

ஒரு நாடு என்ற அடிப்­ப­டையில் இலங்கை அடைந்­தி­ருக்­கின்ற பாத­க­மான நிலை குறித்து கீழ்­வ­ரு­மாறு குறிப்­பி­டலாம்

1. சமூ­கக்­கட்­ட­மைப்­பா­னது சமூக முறையில் இருக்­க­வேண்­டிய ஐக்­கி­யத்­தினை இழந்து இன, மத ரீதி­யாகப் பிரிந்து எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சண்­டைகள் ஏற்­ப­டலாம் என்ற நிலை­யிலே காணப்­ப­டு­கின்­றது.

2. அர­சாங்­கத்தின் பிர­தான தூண்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்ற அர­சி­ய­லைப்பு, நிறை­வேற்று அதி­காரம், சட்­ட­வாக்கம் போன்ற துறை­க­ளுக்­கி­டையே இருக்­க­வேண்­டிய கட்­டுப்­பா­டு­க­ளையும் சீரான நிலை­யி­னையும் இழந்­தி­ருப்­ப­துடன் அரச நிறு­வ­னங்­களும் செயற்­றி­ற­னற்ற நிலையில் காணப்­ப­டு­கின்­றது.

3. அர­சாங்கம் மற்றும் அரச நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் குறித்தும் நாட்டின் பிர­ஜை­க­ளுக்­கி­டையே இருக்­க­வேண்­டிய தொடர்­புகள் குறித்தும் குறிப்­பி­ட­வேண்டி நிலையில் இருக்­க­வேண்­டிய அர­சியல் யாப்­பா­னது தொட­ராகப் பல திருத்­தங்­க­ளுக்கு உட்­பட்டு அர­சியல் யாப்­பொன்றில் இருக்க வேண­டிய நேர்த்­தி­யையும் ஒரு­மைப்­பாட்­டி­னையும் இழந்து குழப்ப நிலையில் இருக்­கின்­றது.

4. சட்­டத்தை இயக்­குதல் மற்றும் சட்ட அமு­லாக்கல் என்­ப­வற்­றுக்­கான நிறு­வன முறைகள் வலு­வி­ழந்து ஊழலால் பாதிக்­கப்­பட்டு சிக்­க­லான நிலைக்­குள்­ளா­கி­யி­ருக்­கின்­றது.

5. அரச ஊழி­யர்­களின் தொகை 15 இலட்சம் என்ற அள­வுக்கு விசா­ல­மாக இருப்­ப­துடன், அரச ஊழி­யர்­களின் வினைத்­திறன் குறைந்த மட்­டத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றது. அரச ஊழி­யர்­களின் சம்­பளம் மற்றும் ஓய்­வூ­தியக் கொடுப்­ப­ன­வு­க­ளுக்­கான செல­வுகள் அர­சினால் சுமக்க முடி­யாத சுமை­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றன.

6. வெளி­நாட்டுக் கடன்­ப­டு­நிலை உச்­ச ­மட்­டத்தில் காணப்­ப­டு­வ­துடன், கடன் தவணை மற்றும் கடன் மீதான வட்டித் தவ­ணைகள் என்­ப­வற்றை செலுத்­து­வ­தற்­காக வரு­டாந்தம் 4000 மில்­லியன் டொலர்கள் தேவைப்­ப­டு­கின்­றது. இது நாட்டின் வரு­மான எல்­லையை விட அதி­க­ரித்­த­தாகக் காணப்­ப­டு­கின்­றது.

7. பொரு­ளா­தா­ரத்தின் அனைத்துப் பகு­தி­களும் வீழ்ந்­து­விடும் நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன. கிரா­மிய விவ­சாயம் மற்றும் வாணிப விவ­சாயம் அதில் பிர­தான இடத்­தினை வகிக்­கின்­றன.

8. இலங்­கையின் கிரா­மிய மக்கள் மாத்­தி­ர­மன்றி நகர்ப்­பு­றங்­களில் வாழ்­கின்ற நடுத்­தர வரு­மானம் பெறு­கின்­ற­வர்­களும் கடன் சுமையில் நசுங்­கிய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றனர்.

நெருக்­க­டியின் போக்கு

இலங்கை முகம்­கொ­டுக்­கின்ற இந்த சிக்­க­லான நெருக்­க­டியை எவ்­வாறு வெற்­றி­கொள்­வது என்­பது புதிய ஜனா­தி­ப­தியின் முன்னால் இருக்­கின்ற சவா­லாகக் குறிப்­பி­டலாம். 1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் பெறு­கின்ற சந்­தர்ப்­பத்தில் ஏனைய நாடு­க­ளுடன் ஒப்­பி­டும்­போது இலங்கை சிறந்த நிலை­யிலே காணப்­பட்­டது.

சுதந்­திரம் கிடைக்கும் சந்­தர்ப்­பத்தில் ஆசிய நாடு­களின் வரி­சையில் தனி­நபர் வரு­மானம் கூடிய நாடாக முதலாம் இடத்தை ஜப்பான் பிடித்­தி­ருந்த நிலையில் இரண்டாம் இடத்தில் இலங்கை காணப்­பட்­டது. உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளில்­கூட ஆசிய நாடுகள் மத்­தியில் இலங்கை சிறந்த நிலை­யி­லேயே காணப்­பட்­டது. சுதந்­திரம் கிடைக்கும் சந்­தர்ப்­பத்தில் இலங்­கையில் 1000 கிலோ­மீற்றர் அள­வான ரயில் பாதைகள் காணப்­பட்­ட­துடன், 1900 ஆம் ஆண்­டு­களில் மொத்த வரு­மா­னத்தில் 30 சத­வீத வரு­மானம் புகை­யி­ர­தங்கள் ஊடாக பெற்­றுக்­கொள்­ளு­ம­ள­வுக்கு புகை­யி­ர­தங்­க­ளினால் பெற்­றுக்­கொண்ட வரு­மா­னங்கள் விசா­ல­மா­ன­தாக காணப்­பட்­டன.

சுதந்­திரம் கிடைக்­கும்­போது ஆசி­யாவில் காணப்­பட்ட துறை­மு­கங்­களில் முதலாம் இடத்தை கொழும்புத் துறை­முகம் பெற்­றி­ருந்­தது. வரு­ட­மொன்றில் கொழும்பு துறை­மு­கத்­திற்கு வரு­கின்ற கப்­பல்­களின் எண்­ணிக்கை 4400 ஆகும். சுதந்­திரம் கிடைத்து 70 ஆண்­டுகள் கழிந்த நிலை­யிலும் அதே­ய­ள­வி­லான கப்­பல்­களே இன்­ற­ள­விலும் கொழும்புத் துறை­மு­கத்­திற்கு வரு­கின்­றன.
இலங்­கையில் ஏற்­று­ம­தி­யினை நோக்­காகக் கொண்ட கைத்­தொழில் பொருட்­களை உற்­பத்தி செய்­கின்ற துறை­யொன்று இல்­லா­தி­ருந்த போதிலும் தேயிலை, தென்னை, இறப்பர், வாசனைத் திர­வி­யங்கள் என்­பன சக்­தி­வாய்ந்த ஏற்­று­மதி வியா­பார முறை­யொன்று இலங்­கைக்கு இருந்­தது. சிலோன் டீ என்­ப­தாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட இலங்­கையின் தேயிலை உல­கி­லேயே மிகச் சிறந்த தேயி­லை­யாகக் கரு­தப்­பட்­டது. இலங்­கையின் அதிக செல­வி­லான நலன்­புரி நட­வ­டிக்­கைகள் இந்த வரு­மா­னத்தின் மூல­மா­கவே செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்­தன.

அந்தக் காலப்­ப­கு­தியில் இன்று இருப்­ப­தை­விட எளி­மை­யான அர­சியல் முறை­யொன்றே காணப்­பட்­டது. அத்­துடன் சுயா­தீ­ன­மான நீதிக் கட்­ட­மைப்­பொன்றும் நாட்டில் இருந்­து­வந்­தது. அந்தக் காலப்­ப­கு­தியில் ஆளுநர் என்­பவர் இன்­றைய ஜனா­தி­பதி போன்றே அதி­கா­ரங்­களைப் பெற்­றி­ருந்த போதிலும் ஏதேனும் ஒரு தவறு அவர் மூல­மாக நிகழும் சந்­தர்ப்­பங்­களில் ஆளு­ந­ருக்கு எதி­ரா­க­வெ­னிலும்; தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு அன்­றைய நீதித்­துறை பின்­வாங்­க­வில்லை. பிரித்­தா­னி­யர்கள் இலங்­கையை விட்டுச் செல்­லும்­போது ஊழ­லான ஆட்­சி­முறை காணப்­ப­ட­வில்லை. பிரித்­தா­னியா இலங்­கையை விட்டுச் செல்­லும்­போது 1200 மில்­லியன் ரூபா அந்­நியச் செலா­வ­ணியை விட்டுச் சென்­றி­ருந்­த­து.

நிலைமை மறு­பக்கம் திரும்­புதல்

அது­வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியில் நடை­பெற்று வந்த நல்­லாட்சி நிலை மாற்­ற­ம­டைந்­தது வெள்­ளை­யர்­க­ளா­லல்ல. வெள்­ளை­ய­ருக்குப் பின்னர் ஆட்­சியை கையி­லெ­டுத்த எமது சுய நல­வா­திகள் மூல­மா­க­வாகும்.

இன பேதங்கள் தொடர்பில் இருக்­கின்ற அங்­கீ­கா­ரங்கள் நீக்­கப்­பட்டு சிறந்த விதத்தில் காணப்­பட்ட இன, மத ஒரு­மைப்­பா­டுகள் வலுப்­பெறும் அமைப்பில் இலங்கைத் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான தேவையை சுதந்­தி­ரத்தின் பின்னர் ஆட்­சிக்கு வந்­த­வர்கள் புரிந்­து­கொள்ளத் தவ­றி­விட்­டனர்.

பிரித்­தா­னிய ஆட்சிக் காலத்தில் வெளி­நாட்­ட­வர்­களே பத­வி­களை வகித்து வந்­தனர். அவர்­க­ளது சம்­பள அள­வுகள் தீர்­மா­னிக்­கப்­பட்­டது அவர்கள், சொந்த நாட்­டி­லி­ருந்து இங்கு வந்­தி­ருப்­ப­வர்கள் என்ற விடயம் கருத்தில் கொள்­ளப்­பட்ட நிலை­யி­லாகும். சுதந்­திரம் கிடைத்­ததன் பின்னர் உள்­நாட்­ட­வர்கள் அந்தப் பத­வி­க­ளுக்­காக நிய­மிக்­கப்­பட்­டனர். எனினும், அவர்­க­ளுக்­கான சம்­ப­ளங்கள் நாட்டின் வரு­மா­னத்­துடன் ஒப்­பி­டும்­போது விசா­ல­மான தொகை­யாகக் காணப்­பட்ட போதிலும் அந்த சம்­ப­ளங்­களில் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

சுதந்­தி­ரத்தின் பின்னர் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட மானி­யங்கள் வழங்கும் நடை­மு­றை­யா­னது வாக்­கு­களைப் பெறு­வதை நோக்­க­மாகக் கொண்­ட­வி­த­மாக அமைந்­தது. ஏழை, பணக்­காரன் என்ற பாகு­பா­டின்றி வழங்­கிய அரிசி மானிய முறை­யா­னது கல்வி, சுகா­தாரம் போன்ற முக்­கி­ய­மான துறை­க­ளுக்கு செல­விடும் நிதி­யிலும் பார்க்கக் கூடிய நிதி செல­வி­டப்­ப­டு­வ­தாக இருந்­தது. ஜன­சத்­துவ என்ற திட்­ட­மா­னது வாணிப பயிர்த் தோட்­டங்­க­ளுக்கு பாரிய பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யது. வெளி­நாட்டுக் கம்­ப­னிகள் வச­மி­ருந்த காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டன. அவற்றை பரா­ம­ரிப்­ப­தற்­கான இய­லு­மை­யற்ற நிலை­யி­லேயே அவை சுவீ­க­ரிக்­கப்­பட்­டன. தேயி­லையின் தரத்தைப் பாது­காத்­துக்­கொள்­வதில் தோல்வி கண்­டதன் கார­ண­மாக இலங்கைத் தேயி­லைக்கு இருந்­து­வந்த உலக அங்­கீ­காரம் வீழ்ச்சி கண்­டது.

சிங்­கள மொழிக்கு மாத்­திரம் முன்­னு­ரிமை வழங்கும் அடிப்­ப­டையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட மொழிக் கொள்­கை­யா­னது தமிழ் மக்­களை தீவி­ர­வா­திகள் என்ற நிலைக்குத் தள்­ளி­விட்­டது மாத்­தி­ர­மன்றி, நாட்­டு­மக்­க­ளுக்கு மும்­மொ­ழி­க­ளையும் கற்றுக் கொள்­வ­தற்­கி­ருந்த சந்­தர்ப்­பமும் இல்­லாமல் போனது.

நாட்டின் இன, மதம் சார்ந்த கிளர்ச்­சி­களை எமது தலை­வர்­களால் முகா­மைப்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யா­மற்­போ­னது நாடு பாதா­ளத்தில் வீழ்­வ­தற்கு முக்­கிய கார­ண­மாகக் கரு­தலாம். எமது நவீன காலத் தலை­வர்கள் நாட்டை கட்­டி­யெ­ழுப்ப தவி­றி­னார்கள் என்­பது மாத்­தி­ர­மன்றி, வாக்­கு­களைப் பெறு­வ­தற்­காக இன, மத ரீதி­யான கிளர்ச்­சி­களை ஊக்­கு­விக்கும் நடை­மு­றை­யையும் பின்­பற்­றி­வந்­தனர். 30 வரு­டங்­க­ளாக நாட்டில் இரத்த ஆறு ஓட்­டப்­ப­டு­வ­தற்கும் இதுவே கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

அந்த நீண்­ட­கால ஒழுக்­க­மற்ற காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற உயி­ரி­ழப்­பு­களும் பொரு­ளி­ழப்­பு­களும் மட்­டிட முடி­யா­த­ளவு விசா­ல­மா­னவை. கல­வ­ரங்கள் கார­ண­மாக குறிப்­பிட்ட தொகை­யினர் மர­ணித்த போதிலும் சாகாமல் வாழ்­வ­தற்கு சில­ருக்கு அதிஷ்டம் கிட்­டி­யது. எனினும், பின்னர் அவர்கள் மன­த­ளவில் கொல்­லப்­பட்­டனர். இந்த ஓழுக்­க­மில்­லாத செயற்­பா­டுகள் கார­ண­மாக சமூகம் மாத்­தி­ர­மன்றி அர­சியல், மதம், கலை என்ற அனைத்­துமே விகா­ர­மா­கி­விட்­டன.

பொதுச் சொத்­துக்ளை கொள்­ளை­யி­டு­வது ஆட்­சி­யா­ளர்­களின் ஒரு முக்­கி­ய­மான பண்­பாக மாறி­யதும், பாரி­ய­ள­வு­களில் ஊழல்கள் இடம்­பெற்­றதும் நீண்­ட­கா­ல­மாக நாட்டில் ஒழுக்­க­மற்ற சூழல் காணப்­பட்ட காலப்­ப­கு­தி­யி­லாகும். யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் நாட்டை மீள்­கட்­ட­மைக்­கா­ததன் விளை­வாக இன்று நாடு பல பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றது எனலாம்.

தேசிய ஒரு­மைப்­பாடு

இனம், மதம், சாதி போன்ற வேறு­பா­டுகள் கார­ண­மாக ஏற்­பட்ட சிங்­கள, தமிழ், முஸ்லிம் கல­வ­ரங்கள் நாட்டின் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கு பாரிய தடை­யாகக் காணப்­ப­டு­கின்­றது. அவ்­வப்­போது இன, மத, சாதி அடிப்­ப­டை­யி­ல் ஏற்­பட்ட கல­வ­ரங்களை அடக்­கு­வ­தற்­காக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும் அவை மீண்டும் ஏற்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்­கான நிலையில் நவீன இலங்கை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இதற்­கான தீர்­வுகள் காணப்­ப­டாமல் நாட்டில் ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்த முடி­யாது. இவ்­வா­றான நிலையில் இந்­தியா, சிங்­கப்பூர், மலே­சியா என்­பன வெவ்­வேறு அடிப்­ப­டை­களில் தீர்வு­களைக் கண்­டுள்­ளன. ஆனால் மேற்­படி நிலையின் பாத­க­மான தன்­மை­க­ளைக்­கூட புரிந்­து­கொள்ள முடி­யு­மான நிலையை இலங்கை இன்னும் அடை­ய­வில்லை.

கல­வ­ரங்கள் மற்றும் சொத்­த­ழி­வு­க­ளுக்கு இடம்­கொ­டுக்­காத அடிப்­ப­டை­யி­லான சூழல் அமை­யும்­போது மாத்­தி­ரமே ஒரு நாட்டின் பொரு­ளா­தாரம் சிறந்த நிலையில் காணப்­படும். பாது­காப்பு தொடர்பில் அச்­சத்­தி­லி­ருக்கும் ஒரு சமூ­கத்தில் பயத்­துடன் இருப்­ப­வர்கள் வியா­பா­ரங்­க­ளுக்­காக முத­லீ­டுகள் மேற்­கொள்­ள­மாட்­டார்கள். சமா­தா­ன­மான சூழலும் அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யு­முள்ள நாடு­களில் மாத்­தி­ரமே வெளி­நாட்­ட­வர்கள் தமது முத­லீ­டு­களை மேற்­கொள்வர். வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் இலங்­கையை ஆபத்­தான நாடா­கவே கரு­து­கின்­றனர். ECD அபாயச் சுட்­டியின் அடிப்­ப­டையில் இலங்­கைக்கு கிடைத்­துள்ள புள்­ளிகள் 6 ஆகும். முன்னர் இருந்த நிலை கூட 6 ஆகும். இலங்­கை­யை­விட அதி­க­மான புள்­ளி­களைப் பெற்­றி­ருப்­பது ஆப்­கா­னிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மாத்­தி­ர­மாகும். அந்த இரண்டு நாடு­களின் புள்­ளிகள் 7 ஆகும். புள்­ளி­களின் அடிப்­ப­டையில் இலங்கை மற்றும் மியன்மார் என்­பன ஒரே நிலையில் காணப்­ப­டு­கின்­றன. சிங்­கப்பூர் 0.0 ஆகும். இந்­தியா, பிலிப்பைன்ஸ், தாய்­லாந்து போன்ற நாடுகள் ஒரே நிலையில் காணப்­ப­டு­கின்­றன. (3.3)

அபாயச் சுட்­டி­யா­னது கூடி­ய­ளவில் இருக்­கின்ற நாடுகள் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களை கவர்­வ­தில்லை. 2016 ஆம் ஆண்டின் வெளி­நாட்டு முத­லீட்டு வரவு 9.7 பில்­லியன் டொலர்­க­ளாகும். 2016 ஆம் ஆண்டில் மற்­றைய நாடு­களின் வெளி­நாட்டு முத­லீட்டு விப­ரங்கள் வரு­மாறு: தென் கொரியா 185.0, ஹொங்கொங் 1698.8, தாய்வான் 75.0, தாய்­லாந்து 188.7, மலே­சியா 121.6, சிங்­கப்பூர் 1096.3 நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­காக வெளி­நாட்டு முத­லீ­டுகள் அவ­சி­ய­மான ஒன்­றாகக் காணப்­ப­டு­கின்­றன. இலங்கை என்­பது வெளி­நாட்டு முத­லீ­டுகள் பெறத்­தக்க ஒரு நாடாகும். இலங்­கையின் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு இனங்­க­ளுக்­கி­டையே சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வதன் ஊடாக அபாய சுட்­டி­யினை குறைக்க முடி­யு­மாயின் வெளி­நாட்டு முத­லீ­டுகள் வரு­வ­தற்கு அது கார­ண­மாக அமையும்.

தலைக்கு மேல் வளர்ந்­தி­ருக்கும் ஊழல்

இலங்கை இப்­ப­டி­யா­ன­தொரு பின்­ன­டைவை அடை­வ­தற்கு ஊழல் தலைக்கு மேலாக வளர்ந்­தி­ருப்­பதும் ஒரு முக்­கிய கார­ண­மாகக் கரு­தலாம். அதி­கார பிர­மிட்டில் மேல்­ப­குதி ஊழல்­மிக்­க­தாகக் காணப்­ப­டு­கின்­றது. ஊழல் என்­பது கட்­டுப்­ப­டுத்த முடி­யாத ஒன்­றாக இருப்­ப­தற்­கான கார­ணமும் அதுவே. ஊழல் தொடர்­பான சர்­வ­தேச தரப்­ப­டுத்­தலில் குறைந்த ஊழல் காணப்­ப­டு­கின்ற நாடாக இருப்­பது டென்­மார்க்­காகும். நியூ­சி­லாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்­தி­ருப்­ப­துடன் பின்­லாந்து, சிங்­கப்பூர் சுவிட்­சர்­லாந்து ஆகி­யன மூன்­றா­வது இடத்தில் இருக்­கின்ற நாடு­க­ளாகும். இந்த தரப்­ப­டுத்­த­லுக்­க­மைய இலங்கை 89 ஆவது இடத்தில் இருக்­கின்­றது. முன்னர் அதிக ஊழ­லுள்ள நாடாக கரு­தப்­பட்­டு­வந்த ஹொங்கொங் தற்­போது 14 ஆவது இடத்தில் இருக்­கின்­றது.
சட்­டத்­துக்கு முர­ணாகப் பொரு­ளீட்­டு­வ­தா­னது அர­சி­யல்­வா­தி­களின் பண்­பாக மாறி­யது 1997 ஆம் ஆண்டின் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யி­லாகும். அது திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதன் விளை­வாக ஏற்­பட்ட ஒன்­றாகக் கரு­த­மு­டி­யாது. ஊழல் குறைந்த நாடு­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்ற டென்மார்க், நியூ­சி­லாந்து, சிங்­கப்பூர், சுவிட்­சர்­லாந்து போன்ற நடு­களில் காணப்­ப­டு­வது திறந்த பொரு­ளா­தார முறை­யாகும்.

1970 ஆண்­டு­வரை இலங்­கையின் அதி­கா­ரத்­திற்கு வந்த ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் குறைகள் காணப்­பட்ட போதிலும், அவர்­க­ளது அதி­கா­ரங்கள் முறை­யற்ற விதத்தில் பொரு­ளீட்­டு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சட்­டத்­திற்கு முர­ணாக அர­சாங்­கத்­துடன் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு வாய்ப்­ப­ளிக்­கப்­ப­ட­வில்லை. இலங்­கையில் இருந்­து­வந்த இந்த நடை­மு­றை­யா­னது தலை­கீ­ழாக மாற்­றப்­பட்­டது ஜனா­தி­பதி ஜய­வர்­த­ன­வி­னா­லாகும்.

தனது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு முறை­யற்ற விதங்­களில் பொரு­ளீட்­டு­வ­தற்கு இட­ம­ளிக்கும் அமைப்­பி­லான நடை­மு­றை­யொன்றின் ஊடாக அவர்­களை கட்­டுப்­ப­டுத்தும் இய­லுமை ஜனா­தி­பதி என்ற அடிப்­ப­டையில் தனக்கு கிடைக்­கப்­பெற்ற அர­சாங்­கத்தைப் பாது­காப்­ப­தற்­கான தேவைகள் ஏற்­ப­டும்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதற்­கேற்ற வகையில் செயற்­ப­டு­வார்கள் என்­ப­தாக ஜய­வர்­தன எண்­ணி­யி­ருந்தார் என்­ப­தாகத் தெரி­கின்­றது. அர­சாங்கத் தரப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­துடன் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் நிலைக்கு தள்­ளப்­பட்­டது இதன் பிர­தி­ப­ல­னா­லாகும். அதன் பின்னர் ஆட்­சிக்­கு­வந்த ஜனா­தி­ப­திகள் அந்த அலங்­கோ­ல­மான முறைக்கு இன்னும் பல பகு­தி­களை சேர்த்து இன்னும் அசிங்­கப்­ப­டுத்தி அவர்­களும் அதனைப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர்.

அதன் அடிப்­படையில் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் அர­சாங்­கத்­துடன் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றனர். சிலர் அர­சாங்­கத்­தி­லி­ருந்து பெற்றுக் கொண்ட தோட்­டங்கள் ஊடாக தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றனர். இன்னும் சிலர் அர­சாங்­கத்­துடன் ஒப்­பந்தப் பணி­களில் ஈடு­ப­டு­கின்ற ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளா­கி­யி­ருக்­கின்­றனர். இன்னும் சிலர் அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றுக்­கொண்ட மது­பான வியா­பா­ரி­க­ளாவர். இன்னும் சிலர் அனு­ம­திப்­பத்­திரம் பெற்றுக்கொண்ட கல், மணல் வியாபாரிகளாவர்.

தேர்தல்களுக்காக 1977 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த செலவுக் கட்டுப்பாட்டு சட்டம், தேர்தலுக்கான செலவுகள் குறித்து கணக்கறிக்கை சமர்ப்பிக்கும் முறைகள் என்பன நீக்கப்பட்டு விட்டன. சில தேர்தல்கள் செலவுகள் உயர்ந்த போட்டிகளாக மாறிவிட்டன. அனைத்துப் போட்டிகளிலும் விலையுயர்ந்த போட்டியாக ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள் அதற்கான செலவுகளைத் தேடிக்கொள்வதற்காக கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் உதவியினால் ஜனாதிபதியானவர்கள் தமக்கு உதவியவர்களுக்கு பிரதி உபகாரமாக வேறு முறைகளில் அனுசரணை வழங்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்த ஊழலான செயன்முறை அனைத்துத் துறைகளையும்

பாதிப்புக்குள்ளாக்குவதுடன் ஊழலை கட்டுப்படுத்தவே முடியாத நிலைக்கும் காரணமாக அமைகின்றது.

கடவுச்சீட்டு வழங்குகின்ற நிறுவனத்திடமிருந்து பணத்துக்காக போலிக் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியுமான நிலை காணப்படுகின்றது. தேசிய அடையாள அட்டை வழங்குகின்ற நிறுவனத்திடமிருந்து பணத்துக்காக அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடிகின்றது. தேசிய அடையாள அட்டை வழங்குகின்ற நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் எல்.ரி.ரி.ஈ.க்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான தேசிய அடையாள அட்டையினை விநியோகித்ததமையை குற்றவியல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்திருந்தனர்.
அரச வரி சேகரிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே ஊழல்மிக்கதாகவே காணப்படுகின்றன. பதிவாளர் நாயகம் நியூஸ் பெஸ்ட் செய்திகளுக்காக வழங்கியிருக்கும் செவ்விக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்ற காணி உறுதிகளில் 40 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வீதமானவை போலி உறுதிகளாகக் கருதப்படுகின்றன. பாடசாலை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படுகின்ற பதிவுச் சான்றிதழ்களில் பாரிய தொகை போலியானவை என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.

நாட்டின் நிறுவன முறைகளில் காணப்படுகின்ற அழுகல் நிலையை வெற்றிகொள்ளாத நிலையில் இலங்கையை முன்னேற்றப்பாதையில் எவ்வாறுதான் நகர்த்தமுடியும்?-Vidivelli

  • விகடர் ஐவன்
  • தமிழில் ராஃபி சரிப்தீன்

Leave A Reply

Your email address will not be published.