பொலிஸ் ஊடக பேச்சாளரின் பணிகள் அனைத்தும் நிறுத்தம்

அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை

0 498

பல வரு­டங்­க­ளாக ஊட­கங்­க­ளுக்கு தக­வல்­களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் அனைத்து நட­வ­டிக்­கை­களும் நேற்று முதல் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் பொலிஸ் பேச்­சா­ளரின் பணி­களும் நேற்று இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தன.

பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் ஊடாக தக­வல்­களை பெற்­றுக்­கொள்­வதை உடன் நிறுத்­து­மாறு மேலி­டத்­தி­லி­ருந்து வந்த உத்­த­ர­வொன்­றுக்­க­மைய பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவின் ஆலோ­சனை பிர­காரம் நேற்று ஊடகப் பேச்­சாளர் மற்றும் அவ­ரது அலு­வ­லக பணிகள் நிறுத்­தப்­பட்­ட­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இதன் பின்னர் பொலிஸ் பேச்­சாளர் மற்றும் அவ­ரது அலு­வ­லகம் முன்­னெ­டுத்த தகவல் வழங்கும் பணி­களை பாது­காப்பு ஊடக மத்திய நிலையம் ஊடாக முன்­னெ­டுக்க உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அந்த திட்­டத்­திற்­க­மை­யவே பொலிஸ் தலை­மை­ய­கத்­தி­லுள்ள பொலிஸ் பேச்­சாளர் அலு­வ­ல­கத்­துக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார். அதன்­படி நேற்று முதல் பொலிஸ் பேச்­சா­ளரின் தொலை­பேசி இலக்­கமோ அல்­லது அந்த அலு­வ­ல­கத்தின் தொலை­பேசி, தொலை­நகல் இலக்­கங்­களோ செயலில் இருக்­க­வில்லை. இத­னை­விட அங்கு சேவை­யாற்­றிய 60 இற்கும் மேற்­பட்ட பொலி­சா­ருக்கு ஊட­கங்­க­ளுடன் கருத்­துக்­களை பகி­ரவும் வேண்­டா­மென பதில் பொலிஸ்மா அதி­பரால் ஆலோ­சனை தெரி­விக்­கப்­பட்­ட­தா­கவும் அறி­ய­மு­டி­கின்­றது. இந்த விவ­காரம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் பது­காப்பு செயலர் ஆகியோரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும், அவர்கள் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை என்பதுடன் எந்த உத்தி யோகபூர்வ அறிவிப்பையும் நேற்று மாலை வரை வெளியிடவில்லை.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.