வில்பத்து விவகாரம்: சட்டவிரோதமாக மக்கள் வாழும் இடத்தை தவிர்த்தே புதிய எல்லை

மன்றில் சட்டமா அதிபர் சார்பில் சுட்டிக்காட்டு

0 290

வில்­பத்து தேசிய வன சர­ணா­ல­யத்­தினுள் சட்­ட­வி­ரோ­த­மாக மக்கள் வாழும் பிர­தே­சத்தைத் தவிர்த்து வில்­பத்து தேசிய வன சர­ணா­ல­யத்­துக்­கான புதிய எல்­லை­களை அரச வர்த்­த­மானி மூலம் வெளி­யி­டு­வ­தாக சட்­டமா அதிபர் மேன்­மு­றை­யீட்டு மன்­றுக்குத் தெரி­வித்­துள்ளார்.

வில்­பத்து தேசிய வன சர­ணா­ல­யத்தின் அதி பாது­காப்­பு வலயம் உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலம் சட்­ட­வி­ரோ­த­மாக துப்­பு­ரவு செய்­யப்­பட்டு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணங்­களை மேற்­கொண்­டுள்ள நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி சுற்­றாடல் நீதி மையம் தாக்கல் செய்­தி­ருந்த ரிட்­மனு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போதே சட்­டமா அதிபர் சார்பில் ஆஜ­ரான அரச சிரேஷ்ட சட்­டத்­த­ரணி மனோ­கர ஜய­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார். நேற்று முன்­தினம் நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த ரிட்­மனு ஜகத் டி சில்வா மற்றும் பந்­துல நிஸ்­ஸங்க கரு­ணா­ரத்ன ஆகியோர் அடங்­கிய மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

வில்­பத்து வன சர­ணா­ல­யத்தின் பெரும் எண்­ணிக்­கை­யி­லான ஏக்கர் நிலம் துப்­பு­ரவு செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோ­த­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள கட்­ட­டங்­க­ளையும் நிர்­மா­ணங்­க­ளை­யும் அகற்­று­வ­தற்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கும்­படி கோரி அப்­போ­தைய அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட்ட குழு­வி­ன­ருக்கு எதி­ராக சுற்­றாடல் நீதி மையத்­தினால் இம்­மனு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இம்­ம­னுவின் தீர்ப்­பினை அறி­விப்­ப­தற்கு நீதிவான் விருப்பம் தெரி­விக்­கா­மையின் கார­ண­மாக இவ்­வ­ழக்­கினை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் மீண்டும் விசா­ரிப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட இந்த வழக்கு விசா­ர­ணையின் பின்பு தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு திகதி குறிக்­கப்­பட்டும் மூன்று தட­வைகள் அது பிற்­போ­டப்­பட்­டது. சுற்­றாடல் நீதி மையத்­தினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த ரிட மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக வன­சீ­வ­ரா­சிகள் பணிப்­பாளர் நாயகம், மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை, மன்னார் மாவட்ட செய­லாளர், அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட 9 பேர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

தேசிய சுற்­றாடல் சட்­டத்தை மீறி வில்­பத்து சர­ணா­லயப் பகுதி துப்­ப­ுரவு செய்­யப்­பட்­டுள்­ளதால் சர­ணா­ல­யத்­துக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. சட்­ட­வி­ரோ­த­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள கட்­ட­டங்கள் ரிசாத் பதி­யு­தீனின் ஏற்­பாட்டில் இடம்­பெற்­றுள்ள இந்த சட்டவிரோத நட­வ­டிக்­கை­களின் மூலம் சுமார் 1500 குடும்­பங்கள் மீள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளன என மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த நட­வ­டிக்­கை­யினால் சுற்­றா­ட­லுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. தேசிய சுற்­றாடல் சட்டம் மீறப்­பட்­டுள்­ளது. வரண்ட வல­யத்­துக்குள் அமைந்­துள்ள இந்த வில்­பத்து வன­ச­ர­ணா­லயம் மனி­தர்கள் குடி­யே­று­வ­தற்கு உகந்­த­தல்ல.

அதனால் இப் பிர­தே­சத்தில் காடு­களை அழிப்­பது, சட்­ட­வி­ரோத கட்­ட­டங்­களை நிர்­மா­ணிப்­பதில் ஈடு­படும் நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும்­படியும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கும்­ப­டியும் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த மனு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே சட்­டமா அதிபர் சார்பில் நீதி­மன்றில் ஆஜராகியிருந்த அரச சிரேஷ்ட சட்டத்தரணி மனோகர ஜயசிங்க, வில்பத்து வனசரணாலயத்தின் எல்லைகளைக் குறிப்பிட்டு 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1779/15 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை நீக்கிவிட்டு அகதிகள் தற்போது வாழும் பிரதேசத்தைத் தவிர்த்து வில்பத்து வன சரணாலயத்தின் புதிய எல்லைகளைக் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தலொன்றினை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.-Vidivelli

  •   ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.