ஆளுநர் முஸம்மிலுக்கு எதிராக மக்களை தூண்டிவிடவில்லை

பிரச்சினையை ஏற்படுத்தாதீர் என்கிறது பொதுபல சேனா

0 403

வடமேல் மாகாண ஆளுநர் முஹம்மட் முஸம்­மி­லுக்கு எதி­ராக சிங்­கள பெளத்த மக்­களை தூண்­டி­விட நாம் எந்த முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. எம்மை குற்­றம்­சாட்டி எவரும் பிரச்­சி­னை­களை உரு­வாக்க வேண்­டா­மென பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சிறு­பான்மை மக்கள் வாக்­க­ளிக்­க­வில்லை என்­ப­தற்­காக சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களை கட்­ட­விழ்க்க எவரும் முயற்­சிக்­கக்­கூ­டாது. தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை எவ்­வாறு பெறு­வது என்­பதை பற்றி சிந்­தித்து அவர்­க­ளுடன் பய­ணிக்க வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநர் முஹம்மட் முஸம்­மிலும் நேற்­றைய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டார், இவ­ரது நிய­ம­னத்­தை­ய­டுத்து சிங்­கள மக்கள் தேரர்கள் சில­ருடன் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை செய்­ய­வுள்­ள­தா­கவும் அதற்கு பொது­பல சேனா தலைமை தாங்­கு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்ட நிலையில் நேற்­றைய தினம் செய்­தி­யாளர் சந்­திப்பில் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மற்றும் ஆளுநர் முஹம்மட் முஸம்­மிலும் கலந்­து­கொண்­டனர். செய்­தி­யாளர் சந்­திப்பில் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கூறு­கையில்,

கடந்த காலங்­களில் வேறு நபர்கள் குற்­றங்­களை செய்­து­விட்டு பழியை பொது­ப­ல­சேனா மீதே சுமத்­தினர். வழக்கு தொடர்ந்­தனர். நாம் பொறு­மை­யாக அனைத்­தையும் தாங்­கிக்­கொண்டோம். இப்­போது புதிய ஜனா­தி­பதி ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். சிங்­கள பெரும்­பான்மை வாக்­கு­களில் அவர் வெற்­றி­பெற்றார். சிங்­கள பெளத்த வாக்­கு­களில் மாத்­திரம் வெற்­றி­பெற முடி­யாது, அது நடக்­கா­தெனக் கூறி­ய­வர்­களின் கருத்­துக்­களை பொய்ப்­பித்து வெற்­றி­பெற்றார். ஆனால் அவர் வெறு­மனே சிங்­கள பெளத்த மக்­களின் தலைவர் மட்­டு­மல்ல. அவர் ஏனைய சகல இனங்­க­ளுக்கும் ஜனா­தி­பதி. இந்த நாட்டில் பெரும்­பான்மை முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு அவ­ருக்கு கிடைக்­க­வில்லை.

அதனால் நாம் முஸ்லிம் சமூ­கத்­துடன் முரண்­பட அவ­சியம் இல்லை. நாம் எப்­போதும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட நபர்கள். ஏனைய அப்­பாவி முஸ்லிம் மக்­களை நாம் எதிர்க்­க­வில்லை. வாக்­க­ளிக்­க­வில்லை என்­ப­தற்­காக சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட முடி­யாது.

அநா­வ­சிய முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்த நாம் தயா­ரில்லை. நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தினால் மட்­டுமே நாட்­டினை கொண்டு நடத்­த­மு­டியும். ஆகவே மக்கள் மத்­தியில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்றால் இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை உரு­வாக்க வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க வேண்டும். சிறு­பான்மை மக்கள் ஏன் எம்மை ஆத­ரிக்க மறுக்­கின்­றனர் என்­பதை ஆராய்ந்து அதனை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ராஜபக் ஷ வின­ருக்கு இந்த தேர்­தலில் மட்­டு­மல்ல, கடந்த 2005 ஆம் ஆண்­டி­லி­ருந்து சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் கிடைக்­க­வில்லை. அது ஏன் என்­பதைக் கண்­ட­றிய வேண்டும்.

இன்று திட­மான ஜனா­தி­பதி ஒருவர் கிடைக்­கப்­பெற்­றுள்ளார். இவரின் மூல­மாக சமூக ஒற்­று­மை­யுடன் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். யாரும் எதிர்­பார்க்­காத வகையில் ஒரு வெற்றி கிடைத்­துள்­ளது. நாடாக நாம் இதில் வெற்றி கொண்­டுள்ளோம். சகல பிரி­வி­னை­வாத சதி­கா­ரர்கள் அனை­வ­ரையும் ஒரே நேரத்தில் தோற்­க­டித்­துள்ளோம். ஆனால் இது தற்­கா­லிக வெற்றி மட்­டுமே. பிரி­வி­னை­வா­தி­களின் தாக்­குதல் எந்­நே­ரத்­திலும், எந்த முறை­யிலும் இடம்­பெ­றலாம். ஆகவே, நாம் தொடர்ந்தும் அவ­தா­ன­மாக பெற்­றுக்­கொண்ட வெற்­றியை தக்­க­வைக்க வேண்டும். இப்­போ­துதான் அர­சாங்கம் உரு­வா­கி­யுள்­ளது. கட­மை­களை சரி­யாக நிறை­வேற்ற சிறிது காலம் கொடுக்க வேண்டும்.

அதேபோல் முஸ்லிம் மக்கள் இந்த ஆட்­சியை நிரா­க­ரித்­தமை உண்­மையே. அதற்­காக முஸ்லிம் மக்­களை ஒதுக்­கக்­கூ­டாது. அது சர்­வ­தேச ரீதியில் தவ­றான சித்­தி­ரிப்பை கொண்­டு­செல்லும். எனவே, முரண்­பா­டுகள் ஏது­மி­ருப்பின் பிரச்­சி­னை­களை தீர்க்­க­வேண்டும். தோற்­ற­வர்­களை அடிப்­ப­தல்ல சிங்­கள பெளத்த கொள்கை. அன்று தமிழ் மக்கள் ஏன் போராட ஆரம்­பித்­தனர் என்­பதை சரி­யாக அறிந்­து­கொண்டு தீர்­வு­களை வழங்­கி­யி­ருந்தால் அதன் பின்னர் போராட்­ட­மொன்று ஏற்­பட்­டி­ருக்­காது. வாக்­க­ளிக்­க­வில்லை என்­ப­தற்­காக சிறு­பான்மை மக்­களை தண்­டிக்கக் கூடாது.

முஸம்மில் அவர்­களை ஆளு­ந­ராக நிய­மித்­துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் சில நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

எமது அமைப்பின் பெயரில் செய்­வ­தாக தக­வல்கள் வெளி­வந்­துள்­ளன. ஆனால் நாம் அதனை செய்­ய­வில்லை. நாம் முஸ்லிம் மக்­களை குழப்­பவோ சிங்­கள மக்­களை குழப்­பவோ எந்த முயற்­சி­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை. முஸம்மில் எப்­ப­டிப்­பட்­டவர் என்­பது எமக்கு நன்­றா­கவே தெரியும். அவர் கடந்த காலங்­களில் செய்த சேவை­களை நாம் பார்த்துள்ளோம். இப்போது வரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் தாராளமாகப் போதுமானது. இனியாவது பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சினைகளின் பின்னால் சென்றால் எங்கு சென்று முடிவது. பிரச்சினைகளை உருவாக்க எவரும் முயற்சிக்கும் போதே அதனை தீர்க்கவேண்டும். எம்மை குற்றம்சாட்டி எவரும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம். அனைவரும் தவறவிட்ட இடங்களை சரிசெய்துகொள்ள வேண்டும். இனியும் குழப்பங்களை எவரும் முன்னெடுக்க வேண்டாம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.