சிங்கள ராவயவையும் கலைக்க தீர்மானம்

மாகல்கந்தே தேரர் தெரிவிப்பு.

0 1,251

சிங்கள ராவய அமைப்பு இது­வரை காலம் நாட்டில் முஸ்லிம், தமிழ் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக குரல் கொடுத்து வந்­தது. எதிர்­கா­லத்தில் அதற்­கான தேவை ஏற்­ப­டாது என நாம் நினைக்­கிறோம். எமது நாட்­டுக்கு சிங்­கள தலைவர் ஒருவர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ளார். அவர் நாட்­டையும் சிங்­க­ள­வர்­க­ளையும் அடிப்­ப­டை­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்பார். அதனால் நாம் சிங்கள ராவய அமைப்பை எதிர்­வரும் பொதுத் தேர்­த­லுக்குப் பின் கலைத்து விடத்­தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம் என சிங்கள ராவ­யவின் தலைவர் மாகல் கந்தே சுகந்த தேரர் தெரி­வித்தார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இந்­நாட்டில் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டுவர முடி­யாது என்­றி­ருந்த நிலையில் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­த­வரே எமது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ. அவர் ஆளுமை மிக்­கவர். அவர் பத­வி­யேற்று சில மணி நேரங்­களில் மேற்­கொண்­டுள்ள அதி­ரடி நட­வ­டிக்­கைகள், நிய­ம­னங்கள் மக்கள் மத்­தியில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதுவோர் பௌத்த நாடு இந்­நாட்டின் தலை­வ­ராக தகுதி வாய்ந்த பௌத்தர் ஒருவர் எமக்குக் கிடைத்­துள்­ளமை பெரும்­பே­றாகும்.

இந்­நாட்டில் அடிப்­ப­டை­வா­தத்தை இல்­லா­மற்­செய்து பௌத்­தத்­துக்கு முக்­கி­யத்­துவம் வழங்கி ஏனைய தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் அவர் அர­வ­ணைத்துச் செல்வார் என்­பதில் எமக்கு நம்­பிக்கை இருக்­கி­றது.

இந்­நாட்டில் ஒரே சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும். இந்­நாடு பிள­வு­ப­டாமல் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்­பதே எமது எண்­ணக்­க­ரு­வாகும். இதனை ஜனா­தி­பதி நிறை­வேற்ற வேண்டும் என நாம் அவரைக் கோரி­யுள்ளோம்.

இது­வரை காலம் எமது கலா­சாரம், எமது தொல்­பொருள் பிர­தே­சங்கள், மிருக வதை தடுப்பு, ஹலால் ஒழிப்பு உட்­பட பல விட­யங்­களை முன்­வைத்து நாம் போராட்­டங்கள் நடத்­தினோம். இதன் பிறகு இவ்வாறான போராட்டங்களுக்கு அவசியமேற்படாது. அனைத்துக்கும் புதிய ஜனாதிபதி தீர்வு வழங்குவார். அதனால் எமது அழைப்பை கலைத்து விடத்தீர்மானித்துள்ளோம் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.